My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Wednesday, July 16, 2008

நண்பர் பெயரிலிக்கு ஒரு சின்ன ரிக்வெஸ்ட்

நண்பரே சுற்றிவளைத்து பேசவேண்டாம். நான் நீக்கப்பட்டேன் என்று நீங்கள் சொல்வது உண்மையா? அல்லாது செல்லாவே விரும்பிக்கேட்டு விலகினார் என்று சுந்தரமூர்த்தி சொல்வது உண்மையா?

“அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுகளில்” எப்படி தமிழ்மணக்குழுவில் இருக்கும் இரண்டு நிர்வாகிகளுக்குள்ளும் இவ்வளவு முரண்பாடான கருத்துவரமுடியும். பொதுவில் வைத்தாகிவிட்டது. சொல்லிவிட்டுப்போங்கள். நன்றி. - அன்புடன் ஓசை செல்லா

==== My prev post for reference purpose only ===

தமிழ்மணக் குழப்பங்கள் உதாரணம் = பெயரிலி Vs சுந்தரமூர்த்தி

இந்த மாதிரி சில விசயங்களுக்குத்தானே காத்துக்கொண்டிருந்தான் செல்லா. உண்மைகள் சந்தியேறட்டும் அனைவர் சாட்சியாக என்றுதான் இந்த வலைப்பூவே. பாருங்கள் முதல் கோணலை...

பெயரிலியின் வாக்குமூலம்:

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள்.

சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:
தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.

இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?

தமிழ்மணக் குழப்பங்கள் உதாரணம் = பெயரிலி Vs சுந்தரமூர்த்தி

இந்த மாதிரி சில விசயங்களுக்குத்தானே காத்துக்கொண்டிருந்தான் செல்லா. உண்மைகள் சந்தியேறட்டும் அனைவர் சாட்சியாக என்றுதான் இந்த வலைப்பூவே. பாருங்கள் முதல் கோணலை...

பெயரிலியின் வாக்குமூலம்:

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள்.

சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:
தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.

இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?


Tuesday, July 15, 2008

பொதுவில் வைக்கிறேன்: காசி+சுந்தரமூர்த்தி+ பெயரிலி+ தமிழ்மணம்+ சுந்தர்

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிற ரீதியில் பல விசயங்கள் வெளியில் வரத்துவங்குகின்றன. நான் இவற்றைப்பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். நேரம் வரும்பொழுது. இப்பொழுது எனது சென்ற படைப்பு ஏற்படுத்திய அதிர்வலைகளை, எதிரலைகளை உங்கள் முன் பொதுவில் வைக்கிறேன்!

முதலில் காசி அண்ணன் அவர்கள் எனக்களித்த கண்டனம்

Kasi Arumugam - காசி said...

என் பெயரும் இழுக்கப்பட்டிருப்பதாலும் இதை எழுதுபவர் ஓசை செல்லா என்று வெளிக்காட்டப்பட்டுப்பதாலும் சில வார்த்தைகள்:

செல்லா சொல்லியிருப்பதில் பல உண்மைக்குப் புறம்பானவை. பெயரிலி சொல்லியிருப்பவை நான் அறிந்தவரையில் பெரும்பாலும் உண்மை. செல்லா தன் தனிப்பட்ட சன்டைக்கு தீர்வு காண வேறுவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். தேவையில்லாமல் வலைப்பதிவர்களைக் குழ்ப்புவதைக் கண்டிக்கிறேன்.

==============================

அடுத்து நண்பர் சுந்தரமூர்த்தி எழுதியது...

Blogger மு. சுந்தரமூர்த்தி said...

செல்லா, லக்கிலுக், தமிழச்சி மற்றும் அனாமதேயங்களுக்கு:

தமிழ்மணத்தின் மீது தேவையின் பேரிலோ, தேவையில்லாமலோ யாருக்காவது கோபம் ஏற்படும்போதெல்லாம் பெயரிலி பலி கடாவாக ஆக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. மீண்டும், மீண்டும் கத்தி அவர் கத்தில் விழுந்து அவருடைய தலை உருட்டப்படுவது தமிழ்மணத்தோடு தொடர்புடைய எனக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் தனிப்பட்ட முறையில் இந்த விளக்கத்தை அளிக்கத் தோன்றியது. இதுவாவது காரண, காரியமின்றி அவருடைய தலையைக் கொய்ய அலைபவர்களைச் சிறிது சிந்திக்க வைக்குமா என்று பார்ப்போம்.

முதலில் தமிழ்மணம் குழுவிற்கு இருக்கும் அரசியல், வணிக நோக்கங்கள் பற்றியும், அக்குழுவை ஆட்டிப்படைப்பது பெயரிலி என்ற ஒற்றை ஆள் அல்லது அவரைப் போன்ற ஓரிருவர் என்பது போன்றதான புனைவுகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பிரச்சினை தீவிரம் அடையும் சமயங்களில் வேதனையையும், விரக்தியையும் அளிக்கிறது.

தமிழ்மணத்தில் பதிவுகள், இடுகைகள் நீக்கங்கள் தொடர்பான முடிவுகள் எதுவும் எந்த ஒரு தனி ஆளாலும் தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்று நான் சொன்னால் அதை நம்புவதும், நம்பாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் அது உண்மையல்ல என்பதே யதார்த்தம்.

தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே. பயனர்களிடமிருந்து வந்த புகார்களை விவாதத்திற்குட்படுத்தி முடிவு செய்வதற்கான குழுவில் நானும் இருப்பதால் இதை என்னால் சத்தியம் செய்து கூற முடியும் (அதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் இனி என் தலையும் சேர்த்து உருட்டலாம்). நிலைமை இப்படி கூட்டு விவாதம், கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்றவாறு இருக்கையில், தமிழ்மணத்தை ஆட்டுவிப்பது பெயரிலி என்ற தனி ஆள் என்ற பரவலான கருத்தும், பெயரிலியை ஆட்டுவிப்பது ஒரு "இயக்கம்" (அது என்ன எழவாக இருந்தாலும்) என்ற தமிழச்சியின் கண்டுபிடிப்பும் கேலிக்கூத்து. தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

தமிழ்மணத்தின் செயல்பாடுகள் பயனர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள் இவற்றை ஒட்டியே அமைந்தவை. எந்த ஒரு இயக்கத்திற்கும், அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அப்படி வெளிச் சக்திகள் எங்களை ஆட்டிப்படைக்கும் என்றால் அதில் நானோ, பெயரிலியோ, மற்ற நண்பர்களோ இருந்திருக்க மாட்டார்கள். இந்த அமைப்பு எப்போதோ காணாமல் போயிருக்கும். எல்லோரையும் போலவே, தமிழ்மணத்தோடு தொடர்புடைய நண்பர்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரே நிலைப்பாடு தான், அது தான் தமிழ்மணத்தை இயக்குகிறது என்று சிலர் நினைப்பது 'மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்' போன்ற கதை தான்.

பலருக்கு உள்ளது போலவே தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இருக்கும் முழுநேரத் தொழில், குடும்பம், வாழ்விட சூழல்கள் சார்ந்த அன்றாட பிரச்சினைகளைத் தாண்டி, செலவிட கொஞ்ச நேரமும், தமிழ் மொழி, சமூகத்தின் மீதான ஆர்வக்கோளாறும் மட்டுமே தமிழ்மணத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்மணத்தை வைத்து பெரிய அரசியல் லட்சியத்தை அடையவோ, மில்லியனர்களாக ஆகும் எண்ணமோ, கலாச்சாரப் போலிஸ் ஆகும் ஆசையோ, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் குரூர மனமோ அல்லது வேறு சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கமோ இல்லை. இது எனக்கும் பொருந்தும். பெயரிலிக்கும் பொருந்தும். பிற நண்பர்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, வலைப்பதிவு மகானுபவர்களே, பாவம் பெயரிலியை இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்.

தனிப்பட்ட அளவில், பெயரிலிக்கு எனது வேண்டுகோள், இதுபோன்ற தெருச்சண்டைகளில் இறங்காமல், உங்கள் படைப்பூக்கத்தை ஆக்கப்பூர்வமான திசையை நோக்கிச் செலுத்துங்கள். இந்தச் சகதியில் இறங்கி மல்லு கட்டுவதை விட தமிழிலக்கியத்திற்கு உங்களால் சிறப்பாக பங்களிக்க முடியும். இதைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கூறி வருகிறேன். உங்கள் ஆர்வமின்மையும், அலட்சியப்போக்கும் நான் அறிந்தது தான். குறைந்தபட்சம் இந்த நேரத்தை நித்திலனுடன் செலவிட்டால் அவனுடைய எதிர்காலமாவது சிறக்கும்.

==================================

Blogger -/பெயரிலி. said...

/இன்று பெயரிலியைத் தாக்கினால் தமிழ்மணம் தூக்கிவிடும் என்பது போன்ற சூழல்/

ஒசை செல்லா

உங்களின் விதண்டாவாதமான பேச்சுகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்துவந்தேன். ஆனால், தொடர்ந்தும் நீங்கள் விடயங்களைத் திரிக்கும்போது, பதிவர்களிடம் என்னைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்துகின்றீர்கள்.

தமிழ்மணத்தின் செயற்பாடுகள் பற்றி நான் / தமிழ்மணம் நிர்வாகிகள் விவரிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், தேர்தெடுத்துத் தாக்கும் உங்களைப் போன்ற சிலரின் செயற்பாடுகள் உங்களைப் பண்புகளைத் தெளிவாகத் தெரியவைக்கின்றன. அப்படியான மற்றவர்களைப் பற்றி ஏதும் சொல்லவரவில்லை. ஆனால், நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் அறிந்தே பொய்யாகவும் ஆங்காங்கே பதித்து வருவது முறையல்ல.

1. -/பெயரிலி.யுடனான தனிப்பட்ட பிரச்சனைக்காகவே பதிவர்களை விலக்குவதாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்படியேதும் நடக்கவில்லை. தமிழச்சி பதிவு அப்படியாகத்தான் நீக்கப்பட்டது என்றால், நீங்கள் தமிழ்மணம் செயற்பாட்டுக்குழுவினுள்ளே பேசப்பட்ட அனைத்தினையும் உங்களைப்போன்ற omsbudman இனிடம் கொடுத்து வாசித்துப்பாருங்கள் என்று விடவேண்டியதுதான். ஒவ்வொருவரும் தன் இயல்பினை வைத்தே மற்றவர்களின் இயல்புகளையும் எடைபோடுதலைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

2. தமிழ்மணத்திலே என் பங்கு ஓர் எள்ளுப்பூ அளவிலே மட்டுமே. சேர்த்தல்/விலத்துதல் இவற்றிலே தமிழ்மணம் குழுநிர்வாகத்தின் இவ்வாண்டு துணைப்பேராசிரியராக ஒரு வேலையிலே புதிய இடத்திலே புகுந்தபின்னால், தமிழ்மணத்திலே சேர்கின்றவர்களின் பட்டியலைக்கூட நான் கண்டதில்லை. புதியவேலையின் கற்பிப்பு/ஆய்வு அழுத்தம் பகலிலேயென்றால், மாலையிலே வீட்டுக்குவந்து சமைத்து மகனின் தேவையைக் கவனித்துத் தூங்க வைத்துப் பின் அடுத்த நாள் வேலைக்கான ஆயத்தங்களிலே இறங்கவே நேரம் போய்விடுகிறது. மனைவி வேறிடத்திலே கல்வியின் காரணமாக வாழ்ந்து கொண்டிருப்பதாலும், போஸ்ரர் ஒட்டிப் பெற்றோர் சம்மதத்துடன் தாலி கட்டி/கட்டாமற் செய்யும் புரட்சித்திருமணம் என்று அறிக்கை விட முடியாதெனினும், அதைவிட மிகவும் அழுத்தமான நிலையிலே தனிப்பட்ட வாழ்க்கையை நாம் தீர்மானித்துக்கொண்டிருப்பதாலே, மகனை நான் மட்டுமே பார்த்துக்கொண்டாலே உண்டு. இந்நிலையிலே, மனைவி, அம்மா, ஹோட்டல் சமைத்துப்போட, வந்திருந்து பெண்ணியம், பின்நவீனத்துவம், பழப்புளி, கொடுக்காப்புளி தட்டச்சிடும் நிலையோ, தமிழ்மணத்திலே என் இஷ்டப்படி சேர்க்க-விலக்க, விளக்கம் கொடுக்க நிலையோ இவ்வாண்டிலே என்னிடமில்லை. இத்தனை என்னைத் திட்டும் நீங்களோ எப்பதிவரோ, தொழில்நுட்பரீதியிலே தமிழ்மணத்தினை மேம்படுத்தும் தமிழ்மணம் நண்பர்களை அடையாளம் கண்டு தனிப்படப் பாராட்டியிருந்தால் மேலாகவிருக்கும். உங்களுக்குத் தமிழ்மணத்தினைத் தாக்க ஒரு வசதியான அடையாளமாக நான் பயன்படுகின்றேன் என்றால், எழுதும் மொழி புரிந்துகொள்ள முடியாத ஈழத்துத்தட்டுக்கழுவி என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினையேனும் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்திருக்கின்றீர்களா? மற்றைய திரட்டிகளுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றீர்களே? தமிழ்மணத்திலேயிருப்பதானால், தமிழ்மணத்துக்கும் கொடுங்கள் என்று தமிழ்மணம் எப்போதாவது அடவடித்தனமேனும் பண்ணியேனுமிருக்கின்றதா? குறைந்த பட்சம் சேர்ந்திருக்கும் ஒரு திரட்டி, தாம் எடுத்த விதத்திலெல்லாம் எண்ணியபடி விமர்சிக்கப் பொறுத்திருக்கும் திரட்டி என்ற அளவிலேகூட தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக் கொடுக்கமுடியாத பதிவர்களெல்லாம் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் கொண்ட வலைவீரர்களாக வலம் வருவதைப் பார்க்கும்போது சிரிக்கவும் முடியவில்லை; வருந்தவும் முடியவில்லை. தமிழ்மணத்துக்கு இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? தமிழ்மணத்திலிருக்கும் என்னைப் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையிலே விழுந்து பிராண்டாதவரையிலே சரிதான் என்றுதான் படுகின்றது

3. செல்லா, நீங்கள் எவ்வளவு பொய்யான முகம் கொண்டவர் என்று இவர்களுக்குத் தெரியவேண்டாமா? இவை தமிழ்மணம் திரட்டியிலேயிருப்பவன் என்றவளவிலே நான் பேசக்கூடாதது. இத்தனை நாளும் தமிழ்மணத்திலே இருக்கும் ஒவ்வோர் உறுப்பினரும் செய்வதுபோலவே, எத்தனை தாக்குதல் என் மீது நிகழ்ந்தாலும், தனிப்பட்ட அளவிலே மட்டுமே பதிலளித்து வந்திருக்கின்றேன். போலி சல்மா விவகாரம், விடாது கருப்பு விவகாரம் எல்லாவற்றிலுமே தமிழ்மணம் அப்படியான விவரங்களை விடாமலே பதிலளித்ததாலேதான், அழுத்தப்பட்டது. ஆனால், உங்கள் உருவாக்கங்கள் வெட்கத்துக்குரியன. அவற்றினை நீங்கள் தமிழ்மணம் என்று சுட்டும் அளவிலே அதை வைத்துத்தான் சொல்லவேண்டும்.

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள். அது பற்றி எனக்கேதும் கிஞ்சித்தும் வருத்தமில்லை. ஏனென்றால், விலக்கவேண்டிய பதிவு என்றால், தமிழ்மணத்தின் முடிவே என் முடிவும். தமிழச்சியின் ஒரு பதிவு பற்றிய என் நிலைப்பாடு என்னவாகவிருந்தது என்பது பற்றித் தமிழ்மணத்தின் மற்றைய உறுப்பினர்கள் விளக்கம் தந்ததைக்கூட மண்டையிலே போட்டுக்கொள்ளும் நிதானம் உங்களிடமோ உங்கள் தோழர்களிடமோ இல்லை)

ஆ. தடாலென, உங்கள் முன்னைய திரட்டி ஒன்றுக்குப் பெண்வாசம் சேர்த்துவிட்டீர்கள்.

இ. பிறகு, பதிவிடாமலே காணமலே போனீர்கள்

ஈ. "தமிழ்சசி, சங்கருடன் மட்டுமல்ல பெயரிலியுடனும் தொடர்பு கொள்வேன்" என்று அறிக்கை விட்டது மிக அண்மையிலேதான்

உ. தமிழ்மணத்தின் ஓர் உறுப்பினருடன் தனிப்படப் பேசி, தமிழ்மணத்திலே நீங்கள் இணைவது பற்றிக் கதைத்தது (let me put it gracefully in that way) அதன் பிறகு.

ஊ. இப்போது திரும்ப -/பெயரிலி.யோடு தனிப்பட மரத்திலேறியிருக்கின்றீர்கள்.

ஆக, உங்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கும் பகிரங்கச்செயற்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. இப்போது தமிழ்மணத்திலே சேர்த்துக்கொண்டால், செல்லாவுக்கான வெற்றிப்பரணி உங்கள் தோழர்களாலே இசைக்கப்படும். தமிழ்மணத்துக்கும் அதன் "வெறுமனே தாக்/ங்குகுறியான" எனக்கும் பக்கவாட்டிலே ஓர் உதை விழும்.

4. இந்தக்குழந்தைப்பிள்ளைத்திரட்டி~காமக்கதைத்திரட்டி பற்றியும் விரிவாக, உங்களைப் போன்றவர்களின் பின்நவீனத்துவக்கூத்துகள் பற்றியும் விளக்கமாக எழுதலாம். சமைத்ததைச் சூடாக்கி, பிள்ளைக்குப் பாலையும் சீரியலையும் கொடுத்துவிட்டு, அவனின் காப்பகத்திலே விட்டுவிட்டு, கோடைவகுப்பெடுக்க ஓடவேண்டும். நேரம் முடியவில்லை.

Let me finish with one thing. I know what postmodernism and freedom of speech are even before some of you were born and some of you got your first fresh pubic hair under your bellies. Shut the fuck up rather than making rattling-noise..... pure noise that can not be filtered from any signal - of course, if any.

Now go on; amplify your decibels

=====================================
பதிவர்களில் சிலர் சொல்லும் கருத்துக்கள்...

Blogger பரிசல்காரன் said...

நீங்கள் பேசிய இந்த வாதத்தைதான் பதிவாக எழுத எண்ணியிருந்தேன்.. என் தரங்கெட்ட மூளை வேறெதையோ எழுதி, என்னை நானே நொந்து கொண்டேன்!

செல்லா... உங்கள் இந்த வாதம் முழுக்க நியாயமானது. நான் நட்சத்திரக் கதை என்று முதலிலேயே யூகித்துவைத்திருந்த கதைகளை ****கதைகள் என்று வெளியிட பாலாவை கூப்பிட்டு “எதுனா பிரச்னை பண்ணுவாங்களா?” என்று கேட்க அவர் சொன்னார்.. ”போடுங்க.. எதிர்த்தா எதிர்ப்போம்” என்றார். கேட்ட பிறகு எனக்கே என்னை நினைத்து கேவலமாக இருந்தது!


நீங்கள் சொல்வது போல போஸ்டருக்கு தட்டி தேடும் நமக்கு இதெல்லாம் ஜீரணிக்க இயலாத விஷயம்தான்!!

July 15, 2008 12:10 AM

==================
Anonymous said... //முதலில் வந்தது வலைப்பூக்கள். பின்பு வந்தது தட்டிகள். அதில் ஒரு தட்டியையே பார்ப்பதால் அந்தத்தட்டி கொஞ்சம் அதட்டி பார்க்கிறது. நாங்கள் தட்டியை நோகவில்லை. மற்ற தட்டிகளையும் பார்க்கவே சொன்னோம். மற்றபடி தட்டிக்காக போஸ்டர்கள் அடிக்கும் புத்தி உங்களுக்கு இருக்கலாம். எங்களுக்கு போஸ்டர்களுக்குத் தான் தட்டி தேடி அலைகிறோம்!

அன்புடன்..
ஓசை செல்லா//

சூப்பரபு. செல்லாவின் நச் வரிகளை ரொம்பத்தான் மிஸ் பண்ணியாகிவிட்டது. நல்லதோ கெட்டதோ மாற்றுப்பார்வையை வரவேற்கவேண்டும். மேலும் படைப்பாளிகளின் அருமையை, உள்ளக்கிடங்கை வெலியிட்ட விதம் அருமை. மேலும் இதில் தாங்கள் தமிழ்மணத்தை கண்டனம் செய்யவோ பகிஷ்கரிக்கவோ சொல்லவேயில்லை என்ற விடயத்தையும் நோக்குகிறேன். அருமையான சிந்தனைகள் மற்றும் உதாரணங்கள். மைக்ரோ சாஃப்ட் மற்றும் போஸ்டர்கள், தட்டிகள். அருமை. நிறைய எழுதுங்கள் தோழரே.

பெயர் வெளியிட சிறிது சிக்கல்
(மின்னஞ்சலில் மேல்விபரம்)

==========================

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான்/

பெயரிலி, இது அபாண்டமான அவதூறு. அப்படியொரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை. கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொன்ன சில பின்னூட்டங்களை வெளியிட்டே உள்ளேன்.

பெயரிலி சொல்லியிருப்பது அப்பட்டமான பொய் எனச் சொல்லவே இப்பின்னூட்டம்.

I request Peyarili to take back his allegations. அதுதான் குறைந்தபட்ச நேர்மை!

=================================

இந்த டிராமா முடியும்பொழுது பல விசயங்கள் தெளிவாகும் என்பது மட்டும் உண்மை!

அன்புடன்...
ஓசை செல்லா

Monday, July 14, 2008

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

இன்று காலை ஓசை செல்லா அண்ணாவிடமிருந்து வந்த சூடான கடிதம். உங்கள் சிந்தனைக்கு. -வா. தமிழரசி.

”தமிழ் வலைப்பூக்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்ற அவாவில் உருவாக்கப்பட்ட அட்டவணையானது திரட்டியாக மறுவடிவம் பெற்றது என்பது வரலாறு. ஆங்கிலம் போன்று உலகலாவிய மொழியில் ஏன் திரட்டிகள் பிரபலமாகவில்லை என்ற கேள்விக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். அது இயலாத காரியம். 4000 மெம்பர்கள், ஆயிரம் ஆக்டிவ் மெம்பர்கள் உள்ள தமிழ் பூவுலகுக்கே 10 நிமிடம் மட்டுமே பதிவு தெரிகிறது என்கிற பிரச்சினை நிலவுகையில் 15 மில்லியன் அல்லது ஒன்றரைக்கோடி ஆங்கில வலைப்பூக்களைத் திரட்டினால் பதிவுகள் மைக்ரோ செகண்டுகள் கூட தாங்காது என்ற உண்மையை உணரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அது அங்கு சாத்தியமற்ற ஒன்று! அதனாலேயே பிளாக் லைன்ஸ் போன்ற உபயோகிப்பாளர் விருப்பம் சார்ந்த பதிவுகளைத் திரட்டும் சேவையைத் தந்தனர் எனலாம்.

தமிழில் இன்று பல திரட்டிகள் வந்தாலும் பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் திரட்டியாக இன்றும் வலம் வருவது தமிழ்மணம் மட்டுமே. காரணம் டெக்னாலஜி என்று நிச்சயம் சொல்லமுடியாது. அவ்வகையில் பார்த்தால் தேன்கூடு இன்னொரு தமிழ் ப்ளாக்லைனாக வரக்கூடிய அளவுக்கு விருப்பம்சார் திரட்டியாக இயங்கவல்ல முறையில் உருவாக்கப்பட்டது. திரு சாகரன் அவர்கள் அகால மறைவுக்குப் பின் அதன் வளர்ச்சி மட்டுப்பட்டு இருந்தாலும் ஒரு சரியான வல்லுனர்குழு பொறுப்பேற்று குழுவாக இயங்கினால் அது இந்தியாவின் நிகரற்ற தேசி திரட்டியாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்து தமிழ்வெளியைச் சொல்லவேண்டும். தமிழ்மணத்தின் ஆரம்ப ஆதரவோடு வந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும் அதை நிர்வகிப்பவர் ஒரு மிகச்சிறந்த தொழில்நுட்ப இணைய மென்பொருளாளர் என்ற முறையில் அதன் புதுமைகள் புகுத்தப்படும் தன்மை, வளர்ச்சி போன்றவைகள் எதிர்காலத்தில் நிச்சயம் தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இத்திரட்டியில் நம் பின்னூட்டங்களும், பதிவுகளும் நம் பூவில் எந்த மாற்றங்களையும் செய்யத் தேவையில்லாத அளவில் மிகவிரைவாக திரட்டப்படுவதும் இன்றும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் தமிழ்கணிமை, திரட்டி, தமிழ்பதிவுகள் போன்றவைகளும் வரத்துவங்கியுள்ள நிலையில் தமிழ்மணம் இன்னும் கோலோச்சுவதன் காரணம் என்ன என்று பார்த்தோமானால் அவர்கள் முன்னோடிகள் என்ற தகுதியை உடையவர்கள். மேலும் தேன்கூடு தவிர்த்து அனைத்து திரட்டிகளும் இவர்கள் செய்யும் அதேவேலையையே செய்கிறார்கள் என்ற காரணத்தால் வாசகர்கள் ஆதரவு தமிழ்மணத்தையே நம்பர் ஒன் திரட்டியாக முதலாமிடத்தில் வைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு அபாயமும் அபத்தமும் காத்திருக்கிறது எனலாம்.

சமீபகாலமாக அதன் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவது கவனிக்கத்தக்கது. தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி, அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்ற பதிவர்களின் மாற்று எழுத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மழலையர் திரட்டி போல “குழந்தைகளும் படிக்கிறார்கள்” என்றெல்லாம் சொத்தைவாதங்களை வைத்துக்கொண்டு பலரும் கூப்பாடு போடும் வேளையில் படைப்பாளியை சிறுதும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கும் மேட்டிமைத்தனம் சுகுணா திவாகர் போன்ற ஒரு சில படைப்பாளிகளை எவ்வளவு எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

பொதுவாகவே இணையம் என்ற ஊடகத்தில் காமக்கதைகள் படிக்க தமிழ்மணம் வருவார்கள் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம். அதே வார்த்தைகளை கூகிளில் அடித்தால் மிகமிக அழகான அல்லது அருவருப்பான காமக்கதைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை பதின்ம வயது இணையம் மேயும் பாலகர்கள் கூட அறிவார்கள். இங்கியங்கும் பதிவர்களுக்கே கூட பாலியல் அறிவு, பாலியல் அழகு, பாலியல்/ஒழுக்கவியல் அதிர்ச்சி போன்றவற்றை படிக்க நல்ல ஒரு வாய்ப்பு என்ற வகையிலேயே ஜ்யோவ்ராமின் பதிவுகள் மிக நல்ல வரவேற்பை பெற்றன எனலாம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அவரின் வரிகளுக்கு நட்சத்திரமிட்டு என்ன சாதித்தார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. **** கதைகள் என்றால் அனைவருக்கும் இனி புரியத்தானே போகிறது போங்கள். இம்மாதிரி விசயங்களை தான் எழுதும் எழுத்துக்கு சிந்தனைக்கு முழுப்பொறுப்பு எடுத்து எழுதும் முகமுள்ள சுகுணாக்களுக்கும், தமிழச்சிகளுக்கும், ஓசை செல்லாக்களுக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்களுக்கும் ஒரு சின்ன முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் ஏதோ அனானி ஆட்டக்காரர்கள் மாதிரி நடத்தும் இவர்கள் மனப்பான்மை நிச்சயம் மாறவேண்டும். ஒரு தமிழ்மணம் போல் இன்னொரு தேன்கூடு வரலாம், திரட்டலாம், ஆனால் ஒரு சுகுணாவையோ, செல்லாவையோ, வளர்மதியையோ பிரதியெடுப்பது சாத்தியமா என்பதை மரியாதையின்றி மட்டுறித்தி.. முன்னெச்சரிக்கை.. சீ எழுதவே அசிங்கமாக இருக்கிறது.. முன் தகவல் இன்றி இந்த படைப்பாளிகளை அலட்சியப்படுத்த நினைக்கும் தமிழ்மணப் படிப்பாளிகள் உணரவேண்டும்.

சுயசிந்தனை, தன்மானம், தமிழார்வம் உள்ள பதிவர்கள் இந்த மாதிரியான மேட்டிமைத்தன்மை வாய்ந்த ஒரே ஒரு திரட்டியை இனியும் வளர்ப்பது என்பது ஒரு மோனோபொலி பிற்போக்கு செயாலாகவே முடியும் என்பதை ”இந்தப்பதிவை தமிழ்மணம் நீக்குமா” என்றெல்லாம் வரும் சில இலகுப் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அச்சமே உறுதிசெய்கிறது எனலாம். எனவே பதிவர்களும் வாசகர்களும் தமிழ்மணத்தோடு மற்ற திரட்டிகளையும் ஆதரிக்கவேண்டிய சூழலை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு பதிவரும் தங்கள் வலைப்பூவில் தமிழ்மணத்தோடு, தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்க்கணிமை, தமிழ்ப்பதிவுகள், திரட்டி என்ற பல திரட்டிகளுக்கும் தொடுப்புக்கொடுப்பதோடின்றி மற்ற திரட்டிகளையும் தினமும் ஒரு முறையாவது பார்வையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த திரட்டிகளுக்கும் சில நூறு ஹிட்கள் வரும்பொழுது அவர்களும் புதிய யுத்திகளை புகுத்த முயல்வார்கள். இல்லையேல் மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜிக்கு/புதுக்கண்டுபிடிப்புகளுக்கு எப்படி சுமையாகிப் போனதோ அதேபோல தமிழ் இணைய வலைப்பூ ஊடகத்திற்கு தமிழ்மணம் சுமையாக வாய்ப்புள்ளது. இப்படிச் செய்தால் ஒரு மோனோபொலி அல்லது தனித்திரட்டி சர்வாதிகாரம் இனிமேலும் வளர வாய்ப்பில்லாமல் தமிழ் மாற்றுச் சிந்தனைகளும் எழுத்துக்களும் வாழ்வாங்கு வாழும் என்று கூறி எனது இந்த முழுநீள கட்டுரையை பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வெல்க தமிழர்களின் மாற்றுச்சிந்தனைத்தளம். வாழ்க இணையத்தமிழ் சூழல்.

அன்புடன்
ஓசை செல்லா

(நூறு பேருக்கு மேல் பார்த்தும் யாரும் மறுமொழியிடவில்லை! அவ்வளவு பயமா இணிஅய்த்தில் எழுத. சரி போங்கள். அனானியாகவாவது சொல்லிவிட்டுப்போக ஏதுவாக அனானி ஆப்சன் ஆன் செய்யப்பட்டுள்ளது)

இக்கட சூடு'ங்க! ஒரு அரசியல் புகைப்படக்கலை!


நான் சமீபத்தில் சின்னமனூரில் சுட்ட ஒரு படம். இதுநாள் வரை இந்த சுவர் பிரச்சினை தென்மாவட்ட தேவர் தலித் பிரச்சினை என்று நினைத்திருந்தேன், இந்த போஸ்டரை பார்க்கும் வரை! அரசியல் தெரிஞ்ச பதிவர்கள் புகைப்படத்திற்கு விளக்கம் குடுக்கலாமே. யாராவது இருக்கிறீர்களா?!

கமல் என்னும் கலைஞன் - ஒரு க்ளைமாக்ஸ் பதிவு!


இதுவரை போட்ட டைட்டில் போஸ்ட்களில் எனைப்பற்றிய மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த கமல் ரசிகர்களுக்கு முதலில் என் நன்றி. இது நான் ஆராதிக்கும் கமல் பற்றிய பதிவு! (சினிமாவுக்கு மட்டும் தான் உச்சஸ்தாயியில் வயலின்கள் அலற அலற க்ளைமாக்ஸ் சீன் வைக்க வேண்டுமா என்ன!)

'நான் இதுவரை அதிகம் முறை பார்த்த படம் விக்ரம் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகத் தானிருக்கும். உண்மையில் அது ஒரு மிக மிக இலகுவான ஒரு படத்திற்கு எடுத்துக்காட்டு! (வழக்கம் போல பட்ஜெட் பிரச்சினையால் ப்ளைவுட் ராக்கெட் சிறுது அசைந்தாடுவது ஒரு சில காட்சிகளில் தெரியும், ஊர்ந்து கவனித்தால்!). கமல் ஒரு சகாப்தம் என்றால் தமிழ் திரையுலகில் யாரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. மூன்று பா'க்களால் பட்டை தீட்டப்பட்டவர் அவர். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்ற இம் மும்மூர்த்திகளும் இவரை பல்வேறு பரிமாணங்களில் காட்டியிருப்பார்கள். முதலில் சப்பாணியைப் பார்ப்போம்.

அதுவரை செட்களில் அடங்கிக் கிடந்த கதைகளும் காமிராக்களும் நம் தமிழ்மணம் கமழும் கிராமத்துப் புழுதிக்காற்றை சுவாசிக்கக் கிளம்பிய காலம் அது. அதுவரை நகரத்து காதல் மன்னனாக இருந்த கமலை வாயில் வெற்றிலை குதப்பியபடி, அழுக்குவேட்டி சப்பாணியாக அழகு மயில் ஸ்ரீதேவியுடன் நடிக்கவைத்து தமிழ் சினிமாவில் புது அத்தியாயத்தை தொடங்கிவைத்தார் பாரதிராஜா. கூடச் சேர்ந்து ராக தேவனாக கிராமத்து மக்கள் கூட அசைபோடக்கூடிய மெட்டுகளை இசையால் ஸ்ரிஷ்டித்தான் கிராமப்புழுதிக்கிடையே ஆர்மோனியம் பயின்ற இளையராஜா. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ... இப்பாடல்தான் என்ன ஒரு மறுமலர்ச்சியை அப்பொழுது ஏற்படுத்தியிருக்கவேண்டும்? நிவாசின் காமிரா அந்தத் தமிழ் கிராமத்தை அப்படியே இரு கரம் கொண்டு அள்ளி இளையாரஜாவின் கிராமிய இசையால் சீவிச் சிங்காரித்து அழகு பார்த்த அந்த ஆரம்பக் காட்சியிலேயே ஒவ்வொரு தமிழனும் தன் மனத்தை பறிகொடுத்தான் என்றால் மிகையல்ல.

இல்லாத ஒரு பூவை கவிதையில் வடித்த கங்கை அமரனையும், ஆட்டுக்குட்டியை முட்டையிட வைத்து அறிமுகமாகிய மலேசியா வாசுதேவனையும் கூட தமிழ் திரைக்கு அளித்த இந்தப்படம் ஒரு மைல்கள் என்றால் மிகையல்ல. நான் சொல்ல வருவது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல தன் ஹீரோ அந்தஸ்தை, நகர அழகன் இமேஜை தூக்கிக் கடாசிவிட்டு ஒரு புதிய இயக்குனரின் கைகளுக்குள் தஞ்சமடைந்தானே கமல் எனும் கலைஞன்!

அந்த பசி அடங்காமல்தானே ஐம்பதுகளைத் தாண்டியபின்பும் பரிசோதனைகளைத் தொடரும் ஒரு மகா கலைஞனாக தன் துறையில் வெற்றி நடை போடுகிறான் இவன்!'

Sunday, July 13, 2008

நான் எடுத்த சில புகைப்படங்கள் - உங்கள் விமர்சனம் வேண்டி

சமீபத்தில் நண்பர்களுடன் தேக்கடிக்கு மதுரையில் இருந்து பயணித்தேன். தேனி மாவட்டம் சின்னமனூர் என்னும் ஒரு ஊரில் நண்பர்கள் அனைவரும் இளநீர் சாப்பிடுவதற்க்காக எங்கள் இன்னுந்தை நிறுத்தினோம். அருகிலிருந்த வீட்டில் ஒரு கிராமத்து தேவதை ஒன்று வெகு இயல்பாய் என்னைக் கவர்ந்தது. நான் எடுத்த அந்த நிழற்படங்களை பதிவர் வட்டத்தில் காட்சிக்கு வைக்கிறேன். கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படமாக. உங்கள் விமரிசனங்களை வரவேற்கிறேன்.






பூனா திரைப்படக் கல்லூரி, யார் இவர்?

இப்புகழ்பெற்ற கல்லூரி (சட்டக்கல்லூரி ரோடு) எனது விடுமுறைக்கால சரணாலயம். 1961 ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி பாரிஸ் திரைப்படக்கல்லூரி இயக்குனர் ரெமி டெச்சன் என்பவரது வழிகாட்டுதல்படி மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

இங்கிருந்து உருவான சில பிரபலங்கள்

  1. சபனா ஆஸ்மி
  2. சுபாஷ் கை
  3. ஜயா பச்சன்
  4. சஞ்சய் லீலா பன்சாலி!
இப்பொழுது ஒரு கேள்வி!

இங்கு படிக்கும்பொழுது கோல்டு மெடல் வாங்கியவர் ஒருவர் நம் தமிழ் திரையுலகில் இருக்கிறார். மிகச்சிறந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்! யாரென்று யூகியுங்களேன்!?

கோவை பதிவர் சந்திப்பில் என்னைத் தேடிய சஞ்சய்!

இன்று காலை முதல் மாலை வரை கோவை பதிவர் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிகளை என் வலையுலகச் சகோதரர் மூலம் கேட்டறிந்தேன். நான் வர இயலாததற்கும் நடிகர் கமல்தான் காரணம் என்றெல்லாம் நிச்சயமாக சொல்லமாட்டேன்! ;-)

செல்லா அண்ணாவுடன் இப்பொழுதுதான் பேசினேன். பதிவர் சஞ்சய் என்னை சைட் அடிக்க மிகவும் ஆவலாக இருந்ததாகத் தெரிவித்தார். (என்னைக் காணாத கடுப்பில் செல்லா அண்ணாவிடன் 'செல்லா, நீங்களும் லக்கி லுக்கும் தானே தமிழரசி என்ற பேரில் கலாய்ப்பது?” என்றெல்லாம் கலாய்த்தாராம்”. இதைக் கேள்விப்பட்டதும் இரு பெரும் பதிவுலக கலக்கல் பதிவர்கள் அளவுக்கு நம்மையும் நினைக்கிறார்களே என்று மனம் நிறைய சந்தோசம்.
நான் இவர்கள் இருவரின் தீவிர வாசகி என்பது (மற்றொருவரை விட்டுவிட்டேன், அவர் செந்தழல் ரவி) எனையறிந்த ஒரு சில பதிவர்களுக்குத் தெரியும்.

பதிவர் சஞ்சய் அவர்களுக்கு ஒரு பன்ச் வரி! நான் எப்ப வருவேன், எங்க வருவேன்னு சொல்லமுடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்! ஓகே, வா, டியர்!

Wednesday, July 9, 2008

சில்வஸ்டர் ஸ்டலோன் - மறுபக்கம்

எனக்குப்பிடித்த ஹீரோ இவர் என்றதும் பலரும் நக்கலடித்து தங்கள் அறிவூணத்தை பறைசாற்றியது நடந்தது. அவரை ஏதோ அடிதடி ஆக்சன் கிங் என நினைத்துவிட்டது இவர்களின் அறிவின்மை தவிர வேறென்ன? அவர் ஒரு சிறந்த கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர். மார்லின் பிரண்டோ அளவுக்கு வந்திருக்க வேண்டியவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஒரு மாபெரும் ஹீரோ. ராக்கி படம் 10 ஆஸ்கார் நாமினேசன்கள் பெற்ற படம் (முழுவதும் படித்துப்பாருங்கள் புரியும்)

கிட்டத்தட்ட பாதிமுகம் கட்டுப்பட்டை இழந்து கிடக்கும் ஒருவன் நான் ஹீரோவாக நடித்தே தீருவேன் என்ற எண்ணத்தில் நிசத்தில் போராடி ஜெயித்தவனின் வலி மைதாமாவு ரசிகர்களுக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது என்று நினைத்துக்க்கொண்டேன். இதோ ஸ்டாலோனின் மறுபக்கம் ஆங்கிலத்தில்...

He is considered by many (including the mayor of Philadelphia) as the one who made the city of Philadelphia an international tourist attraction with the Rocky Steps. His immense popularity there has led to a statue of his Rocky character being placed permanently near the Philadelphia Museum of Art as a cultural landmark. On August 2007, a statue of Rocky was also erected in the Serbian village of Žitište. Stallone's film Rocky has also been inducted into the National Film Registry as well as having its film props placed in the Smithsonian Museum as a national treasure.

ஸ்டலனும் ஆஸ்கார் அவார்டு நாமினேசனும்

Stallone did not gain world-wide fame until his starring role in the smash hit Rocky (1976). The film was awarded with the 1976 Academy Award for Best Picture. On March 24, 1975, Stallone saw the Ali-Chuck Wepner fight which inspired the foundation idea of Rocky. That night Stallone went home, and in three days he had written the script for Rocky. After that, he tried to sell the script with the intention of playing the lead role. Robert Chartoff and Irwin Winkler in particular liked the script (which was suggested by Stallone after a casting), and planned on courting a star like Burt Reynolds or James Caan for the lead role. The final result was an unequalled success; Rocky was nominated for ten Academy Awards in all, including Best Actor and Best Original Screenplay

பில்லியன் டாலர் வியாபாரம் 4000 கோடி!

Stallone had another major franchise success as Vietnam veteran John Rambo in the action adventure film First Blood (1982). The first instalment of Rambo was both a critical and box office success. The critics praised Stallone's performance, saying he made Rambo seem human as opposed to the way he is portrayed in the book of the same name, First Blood and in the other films. Two Rambo sequels Rambo: First Blood Part II (1985) and Rambo III (1988) followed. Although box office hits, they met with much less critical praise than the original. He also continued his box office success with the Rocky franchise and wrote, directed and starred in two more sequels to the series: Rocky III (1982) and Rocky IV (1985).

It was during this time period that Stallone's work cultivated a strong overseas following. He also attempted, albeit unsuccessfully, roles in different genres when he wrote and starred in the comedy film Rhinestone (1984) where he played a wannabe country music singer and the drama film Over the Top (1987) where he played a truck driver who enters an arm wrestlingCobra (1986) and Tango and Cash (1989) did solid business domestically but overseas they did blockbuster business grossing over $100 million in foreign markets and over $160 million worldwide. The Rocky and Rambo franchises at the end of the decade were billion dollar franchises internationally. competition to impress his estranged son. These films did not do well at the box office and were poorly received by critics. The action films

ஆயிரம் கோடி வசூல் ராஜா ..
After starring in the critical and commercial failures Oscar (1991) and Stop! Or My Mom Will Shoot (1992) during the early 90s, he made a major comeback in 1993 with the blockbuster hit Cliffhanger which became an enormously successful film grossing over US$255 million worldwide.

கம்பேக் கிங்

After a few years hiatus from films, Stallone made a comeback in 2006 with the sixth and final installment of his successful Rocky series; Rocky Balboa, which was both a critical and commercial hit. After the critical and box office failure of the previous and presumed last installment Rocky V, Stallone had decided to end the series with a sixth installment which would be a more appropriate climax to the series. The total domestic box office came to $70.3 million (and $155.3 million worldwide). The budget of the movie was only $24 million. His performance in Rocky Balboa has been praised and garnered mostly positive reviews.[25]

Stallone's newest release is the fourth installment of his other successful movie franchise, Rambo, with the sequel being titled simply Rambo. The film opened in 2,751 theaters on January 25, 2008, grossing $6,490,000 on its opening day and $18,200,000 over its opening weekend.

Its current box office stands at $42,653,401 in the US and $112,481,829 worldwide.


Sylvester Stallone has always been something of the underdog, a trait which runs parallel Sylvester Stallonewith his most famous characters. Often written-off, ridiculed, and mocked, Sly has had his fair share of hard knocks, but always seems to come out of his corner fighting, with a grace, defiance, and intelligence often overlooked.

He is an extremely underrated Actor, Producer, Director, and above all, a masterful Screenwriter. He has an ear for language and honest characterisations (yes his characters may be laconic, but the characters that move around him are always well drawn: think Paulie and Adrianna from Rocky or Sheriff Will Teasle from First Blood), and his stories seem to move at a break-neck pace. He has written, or co-written, nineteen movies, more than half of which have been monumentally successful.

That’s something most full time Hollywood writers cannot say.

Stallone had an extremely difficult birth and was yanked from his mother's womb by a doctor's forceps. This severed a facial nerve, paralyzing the lower left side of his face. As an actor, this now trademark snarling look and slightly slurred speech have made him an easy target for ridicule. But when Rocky was released in 1976, celebrated movie critic (and bizarrely, once Russ Meyer’s regular screenwriter) Roger Ebert likened him to a young Marlon Brando. This isn’t too far off the mark either.

Stallone is magnificent in Rocky, brimming with a power, hunger and subtlety that simply towers over his other work. Not to say that his other films are to be dismissed out of hand though. Much has been written about Stallone’s impressive performance in 1997’s Copland, often citing that only that film’s character, Sheriff Freddy Heflin and Balboa are worth mentioning in Stallone’s cannon of performances. But that is to over look some fairly forgotten films that came out in the wake of Rocky.

F.I.S.T and Paradise Alley were both released in 1978. Both were written by Stallone, or at least co-written (his collaborator on F.I.S.T was Joe Eszterhas, future writer of Basic Instinct and Flashdance), and both contained masterful performances from Sly and his supporting players. F.I.S.T was an epic, social drama about a warehouse worker who becomes involved in the labour union leadership. Hardly a box office crowd pleaser, but the film was thoughtful and moving, and contained shades of On the Waterfront.

Paradise Alley on the other hand was Stallone’s directorial debut and told the story of three brothers, living in the slums of 1940s New York, who band together to fight a sleazy wrestling manager. Stallone wrote a strong and hard-edged script, which he directed with the confidence of a seasoned filmmaker.

Although they were critically praised, neither film was successful, so Stallone cracked and gave the world what it wanted - another Rocky movie. But if either, or both these films were success stories at the box office, Stallone’s career would have taken an entirely different route. He may well have made good on his brooding Brando-like intensity and made (written) more ‘serious’ and thought-provoking pictures.

(Another film to look out for in his early career is 1974’s cult hit Lord of Flatbush, co-written and co-starring a young Stallone alongside an excellent Henry Winkler, it is an effectively written teen gang film.)

Sunday, July 6, 2008

என் மனங்கவர் ஹீரோ இவர். யாரென்று சொல்லுங்களேன்?

க்ளூவெல்லாம் நிறைய தருகிறேன் நண்பர்களே! இதோ படியுங்கள்...
  • இவருடைய இரண்டு திரைப்பாத்திரங்கள் இவருக்கு அழியாப்புகழை பெற்றுத்தந்தன.
  • அதில் ஒன்று வியட்நாம் போரில் ஈடுபட்டு நாடு திரும்பியபின் சொந்தமக்களால் அலட்சியப்படுத்தப்பட்டு போலீசால் துன்புறுத்தப்பட்ட ஒரு வீரன்!
  • இவரது குழந்தைப்பருவம் மிகவும் கடுமையாக அமைந்தது. பள்வேறு பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டவர்.
  • இவரது முகத்தின் ஒரு பகுதி நரம்புகள் செயலிழந்ததால் அவரால் நன்றாக பேசவோ, முகபாவனைகள் காம்பிக்கவோ சரியாக இயலாததால் நிறைய வாய்ப்புகளை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல் திரைக்கதை எழுத்தாளராக முயன்றார். அதில் ஒரு காதாபாத்திரம் பலருக்கும் பிடித்துப்போனது. அதில் நான் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்ததால் ஒரு தயாரிப்பாளர் அவரையே ஹீரோவாக்கி படம் எடுத்தார். படம் உலக அளவில் மாபெரும் ஹிட்! பல கோடி ரசிகர்களை அவர் பெற்றார் ஒரே படத்தின் மூலம்.
  • அவரது சூப்பர் ஹிட் படத்தின் பின்பாதி பெயர் நமது சூப்பர் ஸ்டாரின் ஒரு படத்தின் முன்பாதி பெயர்.
என் ஹீரோ யாரென்று கண்டுபிடித்துவிட்டீர்களா நண்பர்களே! ஸ்டார்ட் ஆக்சன் கமெண்ட்!

Friday, July 4, 2008

தசாவதாரத்தில் ஆழமான கதை என்று ஒன்று இல்லை! - கமல்

அவரே சொல்லிட்டார்! நடிப்புதான் பல அவதாரங்களில் ஊத்திக்கிச்சுன்னா இப்ப கதையும் ஓட்டைதான்ன்னு அவரே ஒத்துக்கிட்டார். இதோ படிங்க ..

Kamal Haasan on a recent visit to Kerala to promote his Dasavatharam had some interesting and blunt questions to answer.


The actor was thrown a volley of questions and most prominent among them was: "Do you agree that Dasavatharam has no story?" Reacting to this, Kamal said that he did agree with that but also reiterated that he never promised that there would be a strong storline.

Disclosing how Dasavatharam came into making, Kamal Haasan said that it was his idea to don ten roles that set the whole project in motion. The story was weaved on these ten characters, he added.
On the Punjabi Singh character that gets cured of cancer miraculously by a gunshot, Kamal said this idea was inspired from a real-life incident involving the Late Tamil Nadu Chief Minister of Tamil Nadu M.G. Ramachandran. Explaining further, Kamal said that the TN CM acted in films and was able to talk even better after the gunshot wound.

Source: http://www.tamilstar.com

நீச்சல் உடை கதாநாயகர்களுக்கு கிடையாதா?

ஏன் பெண்கள் மட்டுமே நீச்சல் உடையில் கிளுகிளுக்க வைக்கவேண்டும்? அந்தக் காலத்து கே ஆர் விஜயா முதல் இந்தக் காலத்து நயனதாரா வரை நீச்சல் உடையில் கலக்கி பின் விமரிசனங்களால் கலங்கி ஸ்டேட்மென்ட் விடவேண்டிய சூழல் தான் ஆணாதிக்க சூழலை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது தலைமுறை தலைமுறையாக. காதாநயகர்கள் நீச்சல் உடையில் நடிக்கத் தயங்குவது ஏன்? ஒருவேளை தங்கள் தொப்பைகள் மீதுள்ள அபிமானமா? பெண்கள் பார்க்க சகிக்காது என்ற தாழ்வுமனப்பான்மையா? இப்பொழுதுள்ள கதாநாயகர்களில் யாருக்கு நீச்சல் உடை பொறுத்தமாக இருக்கும்? சொல்லுங்க ப்ளீஸ்! சக பதிவாளினிகளும் கலந்துகொள்ள ஏதுவாக அனானி பின்னூட்டங்கள் அலவ்ட்!

( The the post is aimed at Women, few pics For my Jollu Bros and machans. Never Click ;-) to blow it up)

Tuesday, July 1, 2008

முதல்படத்திலேயே உலக விருதுகள் வாங்கிய டைரக்டர்!

தான் இயக்கிய முதல் படத்திலேயே ஆஸ்கார்,கோல்டன் க்ளோப், அமெரிக்க டைரக்டர்கள் கூட்டமைவு என்று முப்பெரும் விருதினை பெற்ற டைரக்டர் சாம் மெண்டிஸ் ஆவார். நாடகத்துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்து தமது முதல் படமான 'அமெரிக்கன் பியூட்டி' மூலம் இச்சாதனையைச் செய்தார்.

இவரை விட இவரது மனைவி நம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை! யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்! இணையத்தில் மூழ்காமல்!

(க்ளூவெல்லாம் கேட்கக் கூடாது.அதை தான் முதலிலேயெ கொடுத்துவிட்டேனே)

Monday, June 30, 2008

70களில் தலை சிறந்த நடிகர் எம்.ஜி.ஆர்!


ஆம். ஒரே வரியில் முடித்துவிடுகிறேன். 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டு காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான தேசிய விருதுகளை தமிழகம் ஒரே ஒருமுறை பெற்றது. அதைப் பெற்றுக் கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !

1980 Naseeruddin Shah Sparsh Hindi
1979 Arun Mukherjee Parashuram Bengali
1978 Gopi Kodiyettam Malayalam
1977 Mithun Chakraborty Mrigaaya Bengali
1976 M.V. Vasudeva Rao Chomana Dudi Kannada
1975 Sadhu Mehr Ankur Hindi
1974 P. J. Antony Nirmalyam Malayalam
1973 Sanjeev Kumar Koshish Hindi
1972 M.G. Ramachandran Rickshawkaran Tamil
1971 Sanjeev Kumar Dastak Hindi
1970 Utpal Dutt Bhuvan Shome Hindi

Sunday, June 29, 2008

குழந்தைகளை உயிருடன் புதைக்கும் மூடநம்பிக்கை.. அதிர்ச்சியடைய வைத்த குறும்படம்

நான் ஏதேச்சையாக சற்றுமுன் யூ டியூபில் டாகுமெண்டரிகள் தேடிக்கொண்டிருந்தபோது சிக்கியது. பார்த்ததும் ஒரு நிமிடம் கண்ணில் நீர் ததும்பியது. நம்மூர் கள்ளிப்பால் கூட பரவாயில்லை போல் தோன்றியது. மனிதன் பழங்காலத்தை நோக்கி திரும்பினால் இதைப்போன்று ஆயிரமாயிரம் நிகழ்வுகள் நடக்கலாம்.

in a very disturbing video , children are buried alive in an Amazonian tradition, including a little boy who dies because no one will raise him. It is rare footage of a practice involving hundreds of children a year.

Warning, this video is very disturbing. I was unaware of this practice until seeing this video. However, one of the great values of the Internet and video sites is to educate people on such barbaric practices. Regardless of the cultural norms and sensitivities, it should be the obligation of Brazil and other nations to end this horrible practice. Perhaps if enough people watch this video, something might be done.

This site has one such description:

After being born, November 21, 2003 at 7 am, he was buried alive by his mother, Kanui. She was carrying out a ritual prescribed by the cultural norms of the Kamaiurás, which require that children of unwed mothers be buried alive. To seal the fate of Amalé his grandparents walked on top of the mound. Nobody heard even a cry from the child. Two hours after the ceremony, in a gesture of defiance against the whole tribe, his aunt Kamiru set out to disinter the baby. She recalls that his eyes and nose were bleeding profusely and that he first began to cry only eight hours later. The older Indians believe that Amalé only escaped death because that day the earth of the pit was mixed with numerous leaves and sticks, which could have created a small air bubble.

எனக்குப்பிடித்த அவதாரம்!

எண்ணிக்கை தோற்கும் இவனிடம். இவனும் தற்கால தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத நடிகன். நடிப்பிலக்கணம் தெரிந்தவன். பாத்திரமாகவே பரிமளப்பவன். தமிழ் நாயகர்களுக்கு சிறிதும் சளைத்தவன் அல்ல. வில்லனாக, குணச்சித்திரனாக, நாயகனாக, இயக்குனராக இவனது அவதாரங்கள் தொடரும்...

இவளுக்குப் பிடித்த அவனது அவதாரப் பாடல்... உறுத்தாத மண்ணின் மனம் கலந்த காட்சி அமைப்பு மற்றும் நடிப்பு, 'ராஜா”ங்கமே நடத்தும் இசை என்று ஒரு அழகான தரமான படைப்பு.. நாசரின் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு நல்ல கலைஞனை ஆவணப்படுத்துவதும் நம்மால் முடிந்த ஒரு சிறுசேவை தானே!?

Friday, June 27, 2008

சினிமா - ரெட் - லைட் ஏரியா

போன சில பதிவுகளால் திமிர்பிடித்தவளாக பலர் எண்ணியிருந்தாலும் சில பின்னூட்டங்கள் வயிறார (எரிச்சலோடு!) வாழ்த்தியிருந்தார்கள். அதிலும் ஒருவர் கல்யாணமாகி செட்டில் ஆக வாழ்த்தியிருந்தார். அவருக்கு என் ஸ்பெசல் நன்றி. நானா மாட்டேன் என்கிறேன். என்னவரிடம் இதைக் காட்டினால் என்ன அவசரம் என்று கமல் ஸ்டைலில் ஒரு இச் கொடுத்து எஸ்கேப்பாகிவிடுகிறார். சுயகதை போதும். விசயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருப்பது திரைப்படத்துறையில் ஒரு புரட்சி அத்தியாயயத்தை படைக்க இருக்கும் ஒரு படைப்பை பற்றியது. அது தான் ”ரெட்” என்னும் புதிய மூவி டிஜிட்டல் காமிரா. அதைப்பற்றிய ஒரு சில விவரங்கள் சுருக்கமாக.

1. இந்நிறுவனம் மக்களிடம் சலனப்படக்கலையை எடுத்துச் செல்லவிரும்புகிறது.
2. இணையத்தின் மூலம் விற்பனையை பெருக்க நினைக்கிறது
3. இதன் இணையத்தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருமுறை பாருங்கள்.
4. விலையோ அமரிக்காவில் 30 ஆயிரம் டாலருக்குள் .
5. இது வெறும் காமிரா மட்டுமல்ல, ஒரு காமிரா சிஸ்டம். அதாவது நமது விருப்பத்திற்கேற்ற எல் சிடி ஸ்க்ரீன், லென்ஸ், மெமரி போன்றவற்றை தனித்தனியாக வாங்கி இணைத்துக்கொள்ளும் வசதி பொருந்தியது.
6. இதன் படப்பிடிப்பு ஏரியா (டிஜிடல் சினிமா 4கே ஐ விட அதிகம்) பற்றி அறிய கீழே எலியால் சுட்டவும்.



கீழே ஒரு க்ளோசப் மற்றும் லாங் ஷாட் டில் ரெட் காமிரா (பார்த்தாலே பத்திக்கும் போல, மவுசால் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். ஹை ரெஸ் படங்கள்)





ரெட் காமிரா பற்றி இந்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்...

"It's not that the RED is really that far ahead of the technological curve, it's just that everything else is so far behind."


- Scott Billups

"The Red camera is extraordinary. The Redvolution marks the tipping point of the democratization of filmmaking."

- Dean Devlin
Producer of Independence Day, Godzilla, The Patriot and Flyboys

"If the technical branch of the AMPAS, sometime in the next five years, doesn’t present RED with something heavier than a piece of paper, then they’re fools, and inattentive to boot.

Shooting with RED is like hearing The Beatles for the first time. RED sees the way I see. Someday I hope to find out exactly how Jim and his team made something so technologically advanced seem so organic, so beautifully attuned to that most natural of phenomena, light. But for now I'm just glad I've got my hands on the damn thing, because it's actually making the film(s) better because of it emotionality. At the same time, I am still figuring it out, still trying to discover its secrets, still interacting with it. For me, this is Year Zero; I feel I should call up Film on the phone and say, "I've met someone." Is it perfect? Not yet. But the flaws are fixable (the heat issue, which is being worked on; buttons that should be recessed; power cable from the rear of the camera), and anybody who doesn’t embrace the flashcard--regardless of time restraints--is an idiot.

But the best news of all is: If my lame hyperbole could adequately describe the image, it wouldn’t be RED." Steven Soderbergh

- Academy Award winning
Director, Steven Soderbergh

Director and Cinematographer of Ocean's Eleven, Traffic and Solaris

Thursday, June 26, 2008

சிங்கிளா வந்த சிங்கம் ரஜினி!


ரஜினி என்ற காந்தம் ஏன் சூப்பர் ஸ்டாரனது? அவருக்கு நடிக்கத்தெரியாதா? அவரது குணநலன் என்ன? அவர் எந்த வகையில் கமலுடன் வேறுபடுகிறார்? போன்ற பல கேள்விகள் என் மனதை உலுக்கியதால் இந்த பதிவு! ஆனால் இப்பொழுது மும்பையில் மழைக்காலமாகையால் என் உடனுறை தோழியின் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் நாளை பதிவு போடுகிறேன். ஆனால் இப்போ ஒரு கேள்வி உங்க எல்லாத்துக்கும்! இந்தியா மட்டுமல்ல ஜப்பான் காரர்களை கூட கவர்ந்திழுக்கும் அக் காந்தம் ஏன் சிங்கிளாகவே வருது ரொம்ப நாட்களாக? கமல் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறது! பதில்கள் பஞ்ச் டயாலாக் ஆகவும் இருக்கலாம்! தலைப்பைப் போல! சும்மா அதிருதில்ல!
(அனானிமஸ் பின்னூட்டமாகவும் இடலாம். செட்டிங்க்ஸை மாற்றிவிட்டிருக்கிறேன் தற்காலிகமாக)

Wednesday, June 25, 2008

அறிவுடை நம்பி கமல் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி?



உலக நாயகன் கமல் இந்தப்படத்தில் இஞ்சி யை தமிழ்ப்படவுலகில் முதலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். அதற்க்காக நான் பாராட்டுகிறேன். சென்ற பதிவின் பின்னூட்டத்தில் இம்சை அக்கா சொன்னது போல் எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை! நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள். அவ்வளவுதான். சரி. இந்த இஞ்சியை கண்டுபிடிக்க உலகின் மிகப்பெரிய காட்டின் தலைமை நிர்வாகி கூட சில பல கோடிகளை கொடுத்துள்ளார். சரி கண்மனிகளே. உங்களுக்கு ஒரு சில கேள்விகள்...

௧. கமலின் எந்த அவதாரம் இஞ்சியை படத்தில் உபயோகப்படுத்துகிறது?
௨. இஞ்சியை கண்டுபிடித்தவர் யார்?
௩. அவரது பிற முக்கியமான கண்டுபிடிப்புகள் யாவை?

Monday, June 23, 2008

தசாவதாரம் ஹாலிவுட் தரமா?


ஒரு சில நாட்களுக்கு முன் கமல் அவர்களின் பேட்டியை படிக்க நேர்ந்தது. ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு அறிவு ஜீவி என்பது ஒருபுறம் ஆனாலும் அவர் பேசுவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. பாதி இடங்களில் படம் அமெச்சூர் தரத்திலான 3 டி அனிமேசன் மூலம் பார்க்கவே பரிதாபமாக இருக்கையில், மேக்கப் போடுவதற்கு கூட வெள்ளைத் தோலுடையவர்கள் தேவைப்படுகையில் நாம் ஹாலிவுட் தரம் என்றெல்லாம் பேசுவது ராமணாரயனன் படத்தில்வரும் நாயையும் 101 டால்மேசியன் படத்திற்கும் முடிச்சுப்போடுவது போலாகும். நம்மால் இன்னும் ஒரு ஹெர்பி கோஸ்டு பனானாஸ் கூட அவர்கள் தரத்தில் செய்யமுடியாது என்பது நிசமாக இருக்கையில் கமலின் ஆசை நப்பாசை அல்லது வயிற்றெரிச்சல் என்றே படுகிறது. முதலில் ஒரு சில வேடத்தில் மட்டும் நடித்து அவர் திறமையை உலகத்தரம் என்று நிரூபிக்கட்டும், ஒரு எட்டி மர்பி போல! அதைவிட்டுவிட்டு ஏதே மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்வதைப்போல சிறிது செய்துவிட்டு (பாதி பாத்திரங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றது) உலக நாயகன், உலகத்தரம் என்றெல்லாம் வாயடிக்காமல் அடக்கமாக இருப்பது அவருக்கு ஓரளவு பெருமை சேர்க்கும். இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!

பெண்களும் அரசியலும்

என் தோழிகள் பலரும் பட்டமேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு உறையாடும்பொழுது “என்னப்பா பாமக திமுக பிரிந்துவிட்டார்களே என்றால் அடுத்தநிமிடமே என்னை ஆதோ வேற்றுக்கிரக ஜந்துபோல் பார்க்கிறார்கள். இன்றை மகளிரின் அரசியல் ஆர்வம் என்னை கோபப்படுத்துகிறது! இவர்கள் புதுமைப்பெண்களா அல்லது பதுமைப் பெண்களா? புரியவில்லை!

Friday, June 6, 2008

உனை நினைத்து



அந்தத் தருணங்கள் அழகானவை தான்............

உன் விரல்கள் என் கேசத்தின் இடையே பயணித்த அந்த வருடல் நிமிடங்கள்,

உன் சுவாசத்தை அதன் சூடு ஆரும் முன்பே நான் சுவாசித்த அந்த நெருடல் வினாடிகள்,

உன் பார்வை என்னை ஆக்கிரமிப்பதை அறிந்தும் தெரியாதது போல் விரும்பி ரசித்த தருணங்கள்,

இருட்டு திரையரங்கில் குருட்டு வெளிச்சத்தில் மெல்லிசாய் அத்துமீறிய உன் விரல்களின் சில்மிசங்கள்,

போதுமடா, தனிமை எனை காவுகேட்கிறது! வந்துவிடு ஒரு பின்னிரவில்!

Thursday, June 5, 2008

ஊர்ப் பெருமை

ஆயிரம் ஊர்கள் சுற்றியிருந்தாலும் என் சொந்த நீலகிரியின் சிகரங்கள் தாம் என் மனதை இன்றும் சுண்டியிழுக்கின்றன. பலரும் சென்று பார்த்திராத அவலஞ்சி மற்றும் மேல்பவானி போன்ற இடங்களின் அழகை சமீபத்தில் இண்டர்நெட்'ல் பார்த்த போது மகிழ்ந்தேன். நீங்களும் எங்கள் ஊரின் அழகில் மகிழலாமே! (ஆர்குட் தளத்தில் அதிகம் பரிச்சயமிருந்தாலும் பிளாகருக்கு புதியவளாகையால் ஒரு சிறு தடுமாற்றத்துடனே என் கன்னிப்பதிவ.ு)