My Last 2 Posts
நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!
வலைப்பதிவுலகில் தமிழ்மணம் தடைக்கல்லா?
- பாரிஸ் திவா (Blogger since April 2004)
Friday, June 6, 2008
உனை நினைத்து
அந்தத் தருணங்கள் அழகானவை தான்............
உன் விரல்கள் என் கேசத்தின் இடையே பயணித்த அந்த வருடல் நிமிடங்கள்,
உன் சுவாசத்தை அதன் சூடு ஆரும் முன்பே நான் சுவாசித்த அந்த நெருடல் வினாடிகள்,
உன் பார்வை என்னை ஆக்கிரமிப்பதை அறிந்தும் தெரியாதது போல் விரும்பி ரசித்த தருணங்கள்,
இருட்டு திரையரங்கில் குருட்டு வெளிச்சத்தில் மெல்லிசாய் அத்துமீறிய உன் விரல்களின் சில்மிசங்கள்,
போதுமடா, தனிமை எனை காவுகேட்கிறது! வந்துவிடு ஒரு பின்னிரவில்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//இருட்டு திரையரங்கில் குருட்டு வெளிச்சத்தில் மெல்லிசாய் அத்துமீறிய உன் விரல்களின் சில்மிசங்கள்,
போதுமடா, தனிமை எனை காவுகேட்கிறது! வந்துவிடு ஒரு பின்னிரவில்! //
wow.. how romantic.. :P
கமலை தவிற மற்றெல்லாமும் பற்றியும் நல்லா தான் எழுதறிங்க :))
தமிழரசி தமிழ் பதிவுலகில் தவிர்க்க முடியாத நபராக இருப்பீர்கள். கலக்கறீங்க.
பாராட்டு இந்த கவிதைக்கு மட்டுமில்லை.எல்லா போஸ்ட்டுக்கும் சேர்த்து( தசாவதாரம் பதிவு உட்பட)
இதே போல் அடித்து ஆடுங்கள். வாழ்த்துக்கள்
கவிதை நன்றாக வந்திருக்கிறது.
//உன் சுவாசத்தை அதன் சூடு ஆரும் முன்பே நான் சுவாசித்த அந்த நெருடல் வினாடிகள்,//
சூடு ஆறும் முன்னே சுவாசிப்பது என்பது ஒரு ஜிவ்வான மேட்டர் தானே? அதிலென்ன நெருடல்?
Post a Comment