My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Sunday, June 29, 2008

எனக்குப்பிடித்த அவதாரம்!

எண்ணிக்கை தோற்கும் இவனிடம். இவனும் தற்கால தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத நடிகன். நடிப்பிலக்கணம் தெரிந்தவன். பாத்திரமாகவே பரிமளப்பவன். தமிழ் நாயகர்களுக்கு சிறிதும் சளைத்தவன் அல்ல. வில்லனாக, குணச்சித்திரனாக, நாயகனாக, இயக்குனராக இவனது அவதாரங்கள் தொடரும்...

இவளுக்குப் பிடித்த அவனது அவதாரப் பாடல்... உறுத்தாத மண்ணின் மனம் கலந்த காட்சி அமைப்பு மற்றும் நடிப்பு, 'ராஜா”ங்கமே நடத்தும் இசை என்று ஒரு அழகான தரமான படைப்பு.. நாசரின் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு நல்ல கலைஞனை ஆவணப்படுத்துவதும் நம்மால் முடிந்த ஒரு சிறுசேவை தானே!?

19 comments:

M.Rishan Shareef said...

நாசர் , எனக்கும் பிடித்த சிறந்த கலைஞர்.
எந்தப்பாத்திரம் கொடுக்கப்பட்டாலும் மிகச் சிறப்பாகச் செய்யும் ஆற்றலுள்ளவர்.
நிறைய வாசிப்பவர்..இலக்கியத் துறையிலும் ஆர்வமுண்டு.
இவ்வளவு காலம் சினிமாவிலிருந்தும் எந்தக் கெட்டபெயரும் எடுக்காத நடிகர்களில் இவரும் ஒருவர் என எண்ணுகிறேன்.
'அவதாரம்' பாடலுக்கு நன்றி !

Sanjai Gandhi said...

ஹாய் தமிழ்.. இங்கயும் வந்துட்டேன்ல :P..

நாசரின் நடிப்பு ரொம்ப அற்புதமா இருக்கும்.. குறிபிட்டு சொல்ல நிறைய இருக்கு... நானும் ஒரு கிராமத்தான் என்ற முறையில் இரண்டு பெரிய குடும்பங்களின் சண்டை எப்படி இருக்கும் என்று நன்கு தெரிந்தவன்... நீண்ட இடைவெளிக்கு பிறகு எங்க ஊர்ல திருவிழா நடக்க போகுது.. காரணம் ஊரில் இரண்டு குழுக்களாக செயல் பட்டது தான். அதே போன்றதொரு கதை கொண்ட தேவர் மகனில் நாசர் பின்னி எடுத்திருப்பார்.

எனக்கு மிகவும் பிடித்த நாசர் தேவர்மகன் நாசர் தான்...

கமல் தனது பெரும்பாலான் படங்களில் நாசருக்கு வாய்ப்பு தந்திருப்பார். அந்த அளவுக்கு நல்ல நடிகர். :P

Sanjai Gandhi said...

அட.. என்னங்க இது? என்னை பத்தி பெருமையா போட்டிருந்ததை எடுத்துட்டிங்க? :(((((((((((((

ஓசை செல்லா said...

//SanJai said...

அட.. என்னங்க இது? என்னை பத்தி பெருமையா போட்டிருந்ததை எடுத்துட்டிங்க? :(((((((((((((//
நேற்று உங்கள் லொள்ளை பற்றி இன்று காலை ஒருவர் தொலைபேசினார் :-) ஜொள்ளைப் பற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லை என்று நான் சொல்லவில்லை ;-)

நாசரின் அருமை கமலுக்கு நிச்சயம் தெரியும். ரஜினிக்கும் தெரியும்! படையப்பாவாக இருந்தாலும் சரி, அன்பே சிவமாக இருந்தாலும் சரி, அவருடைய மரியாதையை ரஜினி கமல் இருவருமே கொடுத்துள்ளார்கள். ஒன்பது ரூபாய் பாய் வேடத்தில் அசத்தியுள்ளாரே சமீபத்தில்!

thamizhparavai said...

அருமை

Sanjai Gandhi said...

//Unsettled Woman said...

நேற்று உங்கள் லொள்ளை பற்றி இன்று காலை ஒருவர் தொலைபேசினார் :-) ஜொள்ளைப் பற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லை என்று நான் சொல்லவில்லை ;-)//

சொல்லி இருக்கனுமே.. அதுக்கு தானே நேத்து அவரோட உங்கள பத்தி அவ்ளோ நேரம் பேசினேன்..:P
நான் போட்டிருந்த ஒரு பின்னூட்டத்தை பத்தி சொல்லி இருப்பாரே.. :))) நேத்து பேசினதெல்லாம் எங்கே வீணாகிவிடுமோ என்று நினைத்திருந்தேன்.. :)

//நாசரின் அருமை கமலுக்கு நிச்சயம் தெரியும். ரஜினிக்கும் தெரியும்! படையப்பாவாக இருந்தாலும் சரி, அன்பே சிவமாக இருந்தாலும் சரி, அவருடைய மரியாதையை ரஜினி கமல் இருவருமே கொடுத்துள்ளார்கள். //
எஸ்.. எஸ்... :)

//ஒன்பது ரூபாய் பாய் வேடத்தில் அசத்தியுள்ளாரே சமீபத்தில்!//

ச்சாரி.. அழுகாச்சி காவியங்களை எல்லாம் நான் பாக்கறதிலை.. சேரன், தங்கர் பச்சான், பாலா, பாலுமகேந்திரா, வி.சேகர் வகயறாக்களை எல்லாம் நான் ரசிக்கிறதில்லை... :)

Sanjai Gandhi said...

//கமல் தனது பெரும்பாலான் படங்களில் நாசருக்கு வாய்ப்பு தந்திருப்பார். அந்த அளவுக்கு நல்ல நடிகர். :P//

ச்ச.. இதுக்கு ரியாக்ஷன் இவ்ளோ சபுனு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. என்ன இப்டி ஏமாத்திட்டிங்களே.. நான் இந்த்ய்ஹ பின்னூட்டம் போடும் போது சென்னை 28 படத்தில் கேட்டதை இங்கே போட்டுடறேன்.. " என்ன கொடுமை சார் இது? " :(

Sanjai Gandhi said...

//அறிவிப்பு மூலை!
திங்கள் காலை பத்து மணிக்கு நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “தசாவதாரம்” முழுநீள விமர்சனத்தின் மூலம் சந்திக்கிறேன். வார இறுதி வாழ்த்துக்கள்!

அன்புடன்...
வா.தமிழரசி//
பத்து பத்து வரிகள்ல பதிவு போட்டாலும் ங்கொக்க மக்க இந்த சீனுக்கு மட்டும் குறைச்சலில்ல..

ஓசை செல்லா said...

//சேரன், தங்கர் பச்சான், பாலா, பாலுமகேந்திரா, வி.சேகர் வகயறாக்களை எல்லாம் நான் ரசிக்கிறதில்லை... :)//
ha ha. adhuthaan ithuvarai eluthina comment kalai padichchaale theriyuthe! Confirmed Aachi Fan! aachi masala vai sonnen!

ஓசை செல்லா said...

//பத்து பத்து வரிகள்ல பதிவு போட்டாலும் ங்கொக்க மக்க இந்த சீனுக்கு மட்டும் குறைச்சலில்ல..//

நல்ல படங்களுக்கு நாளு பக்கத்துல நாலுமணிநேரம் எழுதி பதிவு போடலாம். மாறுவேடப்போட்டி வ்ர்ணனைக்கு நாலுவரியே அதிகம் தானே நண்பா?!

ஓசை செல்லா said...

Nandri Rishan and thamil paravai!

சென்ஷி said...

ஏண் நீங்க கமளை இந்த மாதீரி திட்டூரீன்க..

Udhayakumar said...

http://soundparty.blogspot.com/2006/09/blog-post_27.html

நினைவுகளை கிளரி விட்டு விட்டீர்களே? ஏறத்தாழ 2 வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு இது.

rapp said...

மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி ரொம்பப் பிடிக்கும்.

ஓசை செல்லா said...

Sound Party... I just came from your post. excellent lines. the way u related it with modern arts is lovely. Yes the greatness of a creation is THAT IT CHANGED YOUR PERCEPTION!

// இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.

கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.

கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...

http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?//

லக்கிலுக் said...

//நாசரின் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள்.//

”தேவதை” எனக்கு பிடித்திருந்தது. துரதிருஷ்டவசமாக அது யாருக்குமே பிடிக்கவில்லை :-(

nagoreismail said...

நாசரிடம் தங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்க வேண்டும் என இளைஞர் பட்டாளம் கேட்ட போது, "இந்த வயது உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டம், இந்த வயதில் நீங்கள் ஒரு நடிகனுக்கு போஸ்டர் ஒட்டுவதையும் கொடி கட்டுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது.." என்று பதில் கூறியதாக நான் படித்திருக்கிறேன்.
இதில் அவர் நடிகருக்கே உண்டான குணத்திலிருந்து வேறுபட்டு ஒரு நல்ல மனிதனாக பரிணமிக்கிறார்

லக்கிலுக் said...

//"இந்த வயது உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டம், இந்த வயதில் நீங்கள் ஒரு நடிகனுக்கு போஸ்டர் ஒட்டுவதையும் கொடி கட்டுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது.." என்று பதில் கூறியதாக நான் படித்திருக்கிறேன். //

இதே வரிகளை சிவக்குமாரும் சொன்னதாக நான் படித்திருக்கிறேன் :-)

முகவை மைந்தன் said...

//இதே வரிகளை சிவக்குமாரும் சொன்னதாக நான் படித்திருக்கிறேன் :-)//

கமல் பலமுறை மேற்கோள் காட்டியதாகப் படித்திருக்கிறேன்.