My Last 2 Posts
நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!
வலைப்பதிவுலகில் தமிழ்மணம் தடைக்கல்லா?
- பாரிஸ் திவா (Blogger since April 2004)
Monday, June 23, 2008
தசாவதாரம் ஹாலிவுட் தரமா?
ஒரு சில நாட்களுக்கு முன் கமல் அவர்களின் பேட்டியை படிக்க நேர்ந்தது. ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு அறிவு ஜீவி என்பது ஒருபுறம் ஆனாலும் அவர் பேசுவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. பாதி இடங்களில் படம் அமெச்சூர் தரத்திலான 3 டி அனிமேசன் மூலம் பார்க்கவே பரிதாபமாக இருக்கையில், மேக்கப் போடுவதற்கு கூட வெள்ளைத் தோலுடையவர்கள் தேவைப்படுகையில் நாம் ஹாலிவுட் தரம் என்றெல்லாம் பேசுவது ராமணாரயனன் படத்தில்வரும் நாயையும் 101 டால்மேசியன் படத்திற்கும் முடிச்சுப்போடுவது போலாகும். நம்மால் இன்னும் ஒரு ஹெர்பி கோஸ்டு பனானாஸ் கூட அவர்கள் தரத்தில் செய்யமுடியாது என்பது நிசமாக இருக்கையில் கமலின் ஆசை நப்பாசை அல்லது வயிற்றெரிச்சல் என்றே படுகிறது. முதலில் ஒரு சில வேடத்தில் மட்டும் நடித்து அவர் திறமையை உலகத்தரம் என்று நிரூபிக்கட்டும், ஒரு எட்டி மர்பி போல! அதைவிட்டுவிட்டு ஏதே மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்வதைப்போல சிறிது செய்துவிட்டு (பாதி பாத்திரங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றது) உலக நாயகன், உலகத்தரம் என்றெல்லாம் வாயடிக்காமல் அடக்கமாக இருப்பது அவருக்கு ஓரளவு பெருமை சேர்க்கும். இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
தரமான படம் தான் அனால் இன்னும் நன்றாக செதுக்கி சில கதாபாத்திரங்கள் மட்டும் நடித்து இருக்கலாம்.
ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் குரலில், உடலசைவில் நிறைய மெனக்கெட்டு மாற்றம் செய்திருக்கிறார். உலக தரத்தை விடுங்கள், மேக் அப்ஐ விடுங்கள், அனால் ஒவ்வுறு கதா பத்திரத்துக்கும் அவர் எடுத்துள்ள உழைப்பை குறை சொல்ல கூடாது. என்ன இதை விட சில கதாபாத்திரங்கள் நடித்திருந்தார் என்றால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம்.
/////கமலின் ஆசை நப்பாசை அல்லது வயிற்றெரிச்சல் என்றே படுகிறது///
வேறு என்ன செய்வது? இங்கு கமல் ஒத்தை ஆள். அங்கு இவரைப் போல் ஒரு 25 பேர் இருப்பார்கள். ஆனால் அங்கே விட இங்கு 25 மடங்கு அதிகமாக backtrack பார்ட்டிகள் இருக்கிறோமே!
//வேறு என்ன செய்வது? இங்கு கமல் ஒத்தை ஆள். அங்கு இவரைப் போல் ஒரு 25 பேர் இருப்பார்கள். ஆனால் அங்கே விட இங்கு 25 மடங்கு அதிகமாக backtrack பார்ட்டிகள் இருக்கிறோமே!//
நண்பரே கமல் ஒத்தை ஆள் என்று எப்படி சொல்கிறீர்கள்? பாலா போன்ற டைரக்டர்கள் ஒரு சீயானை சிருஸ்டித்ததை மறக்கிறீர்களா. சப்பாணியையும் மயிலையும் முதல் படத்திலேயே குடுத்த பாரதிராஜா தெரியவில்லையா உங்கள் கண்ணுக்கு. இவற்ரோடு ஒப்பிட்டால் இப்படம் ஒரு மாறுவேடப்போட்டிக்கு மட்டுமே இணையானது. மேக்கப்பால் நடிக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா சல்ஜாப்பு. கீழே எட்டி மர்பியின் பஞ்சாவதாரம் உள்ளது பாருங்கள். கமல் ஒரு ரேசனல் மனிதர் என்று சொல்லிக்கொள்பவர். அவருக்கு ஹாலிவுட் காரர்கள் எவ்வளவு மெனக்கெடுபவர்கள் என்பது தெரியாததல்ல. சும்மா இங்கே இருப்பவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற தைரியத்தில் வாயடித்திருக்கிறார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.
தமிழன ஒரு விஷயத்தில் மட்டும் அடிசிகவே முடியாது ...அதுதான் அடுத்தவன் செய்வதை குறை சொல்வது ..கமல் என்ன சொன்னாருன்னு ..திரும்ப கேளு ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் ..அப்படினுதான் சொல்லிருகாரு.நான் கொடுக்கும் நிலை வரும் சொல்லலை.அவர் இருக்கும் துறையில் அவருக்கு நம்பிக்கை இருக்கு.இதுல என்ன அறிவு ஜீவி தனம் இருக்கு ?
ஒரு விசயத்தை விமர்சனம் செயும்போது நிறை ,குறை இரண்டையும் சொல்லணும். ஜாக்கி ஜான் அவருடைய இணையத்தில் உலக சினிமா ,இந்திய சினிமாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்படின்னு சொல்லி இருகாரு.
படத்தில் குறைகள் இல்லாமலில்லை ..ஆனால் குறைகள் மட்டுமே சொல்லுவது விமர்சனம் ஆகாது ..நன்றி ..
சரண், அவர் தன்னை உலகநாயகன் என்று எதைவைத்து சொல்லி விளம்பரப்படுத்திக்கொள்கிறார்? இதற்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது. ஜாக்கிசானின் வரிகளால் திரைப்படங்கள் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு இவளுக்கு திரைப்பட அறிவும் இல்லை, உங்களைப்போல. முடிந்தால் என் ஆர்வத்தைப்பற்றி என் புரொபைலில் படித்துவிட்டு பின் எழுதுங்கள்.
பெண்கள் தமிழ் பதியவேண்டும்.
//தமிழன ஒரு விஷயத்தில் மட்டும் அடிசிகவே முடியாது ...அதுதான் அடுத்தவன் செய்வதை குறை சொல்வது//
தமிழன் மட்டும் தான் குறை சொல்றான்னு நெனைக்காதீங்க, ஊர்ல எல்லோரும் அப்படித்தான் இருக்கான்.
குறை இருந்த எவனும் சொல்வான், உங்களுக்கு நிறைனு சொல்றது பலருக்கு குறை என்று படும்.
இந்த படத்தை உலகத்தரம் என்று சொல்பவர்கள் எல்லோரும் உலகத்தரம் என்றால் என்ன அதற்கு என்ன அளவுகோல் என்று முதலில் சொல்லுங்க, உலகத்தரத்துக்கு எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய செலவு ஆகும், செலவை எடுக்க இந்தியா முழுவதும் படத்தை பார்த்தால் ஒழிய முடியாது, தமிழ் சினிமா எல்லை சிறிது அதற்குள் மட்டுமே நம்மவர்களால் செலவு செய்ய முடியும்.
உலகத்தரத்தில் எடுக்க நினைத்துள்ளார், உழைத்துள்ளார், அனால் அந்த கிராபிக்ஸ் காட்சிலேயே நாம புரிஞ்சுக்கணும் படத்த உலகத்தரம் அளவுக்கு எதிர்பாக்க கூடாதுன்னு
////நண்பரே கமல் ஒத்தை ஆள் என்று எப்படி சொல்கிறீர்கள்?/////
நான் ஒத்தை என்று சொன்னது எண் ஒன்றை குறிப்பது அல்ல. மிகக்குறைந்த என்ற அர்த்தம் தரும் வகையில் பயன்படுத்தினேன்.
நீங்கள் பதிவின் தலைப்பை மட்டும் தசாவதாரத்திற்கு சம்பந்தமாக வைத்துவிட்டு பதிவெங்கும் கமலின் வெட்டிப்பேச்சு பற்றியே அங்கலாய்க்கிறீர்கள். அவர் பேச்சை விமர்சிக்க தசாவதாரத்தை மட்டும் உதாரணம் காட்டுகிறீர்கள். உலகத்தரமான படங்களை கமல் கொடுக்கவே இல்லையா? பாலாவை விட, பாரதிராஜாவை விட நல்ல இயக்குனர் தான் கமல் என்று உங்களுக்கு தெரியாதா?
///முதலில் ஒரு சில வேடத்தில் மட்டும் நடித்து அவர் திறமையை உலகத்தரம் என்று நிரூபிக்கட்டும்///
நடிப்பிலும் உலகத்தரத்தை அவர் பலமுறை நிரூபித்து விட்டார். இல்லை என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் கருத்து மட்டுமே. பெரும்பான்மையோனோர் (ஒப்புக்குச் சப்பாணிகள் அல்ல, தகுதியானவர்கள் தான்) இதை ஏற்றுக்கொண்டு விட்டனர்.
////கீழே எட்டி மர்பியின் பஞ்சாவதாரம் உள்ளது பாருங்கள்.////
உலகத்தரம் பற்றி பேச கமல் உலகத்தரத்தில் நடித்தால் போதும், வேறு யாருடைய தரத்திலும் அவர் நடித்து காட்டத்தேவையில்லை. எட்டி மர்பி நடிப்பு என்ன தரம்? ஒருவேளை பிரபஞ்ச தரமோ?
////ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் என்றெல்லாம் பேசினார்.////
கமல் ஹாலிவுட்டை அறியாத பாமரன் அல்ல (ஒரு வேளை உங்க அளவுக்கு தெரியாமல் இருக்கலாம்), வீண் பெருமை பேசும் வெத்து வேட்டும் அல்ல. அவர் ஏன் அவ்வாறு பேசினார் என்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஆஸ்கார் தான் தனது லட்சியம் எனக்கொண்டிருந்தார். ஆஸ்கார் உலகத்தரத்திற்கு அளவுகோல் அல்ல என்பதை அறிந்தபோது (எல்லாமே ஒவ்வொன்றாகத்தானே அறிய முடியும்) ஆஸ்கார் பேச்சை விட்டு விட்டார். சேகர் கபூரும் அப்படித்தான். ஆனால் நிருபர்களும் ரசிகர்களும் ஆஸ்காரை விடுவதாயில்லை. போகிறப் போக்கில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆஸ்கார் ஏன் நமக்கு தேவையில்லை என்று புள்ளி விபரத்தோடு அவரால் விளக்கிக்கொண்டிருக்க முடியுமா? அதனால் தான் இவ்வாறு சொல்கிறார். உண்மையிலேயே ஹாலிவுட் காரன் தமிழகம் விருது வாங்குவானா? கமல் சொன்னதை லிட்டரலாக எடுத்துக்கொண்டு நாம் அறிவு ஜீவி விவாதம் செய்யத்தேவை இல்லை.
மற்றபடி கமல் உலகத்தர கலைஞன் தான். ஆனால் தசாவதாரம் உலகத்தரம் அல்ல.
"இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!"
it is a good joke Tamilarasi
so you are simple identified your
thought who are you!!
good, best wises your view..
puduvai siva.
//இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!
//
சந்தடி சாக்கில் இப்படி ஒரு விதயம் சொல்லியிருக்கீங்களே,கொஞ்சம் விளக்க முடியுமா?
(ஜாக்கிசானின் வரிகளால் திரைப்படங்கள் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு இவளுக்கு திரைப்பட அறிவும் இல்லை)ஒரு படத்தை உலகத்தரம் என்று வேறு யார் சொன்னால் ஏற்று கொள்வீர்கள்?உலக தரத்தில் உள்ள படத்தில் நடித்த நடிகருக்குத்தான் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன் ..
பலருக்கும் நான் சொல்வதன் அர்த்தம் அனர்த்தமாக பட்டிருக்கிறது. சில விளக்கங்கள்
1. முதலில் இது ஜேம்ஸ்பாண்ட் ரகக் கதை என்றால் விட்டுவிடலாம் தானே, காரணம் ஹாலிவுட் மசாலாக்கள் உலகப்பிரசித்தமானவை. ஆனால் அங்குள்ள தரமான படங்கள் பற்றி பார்க்கும்பொழுது நம் பார்வை வேறுபடுகிறது.
2. முதலில் திரைக்கதை: கமலுக்கு ரா எப்படி இயங்கும் என்று தெரியாதா அல்லது ரவிக்குமார் சொன்னபடி நடந்தாரா? ஒரு கேணத்தனமான ஒரு பல்ராம் நாயுடு கேரக்டர் எப்படி வந்தது? இதோ கீழே படியுங்கள்... Training of R&AW Agents[17]
RAW headqurters on Lodhi Road in New Delhi at 28°35'N 77°14'E.
RAW headqurters on Lodhi Road in New Delhi at 28°35'N 77°14'E.
Recruitment[18] Initially, R&AW relied primarily on trained intelligence officers who were recruited directly. These belonged to the external wing of the Intelligence Bureau. In times of great expansion, many candidates are also taken from the police and other services. Later R&AW began directly recruiting graduates from universities. Today R&AW has its own service cadre, the Research and Analysis Service (RAS) to absorb talent. Recruitment is mostly by deputation of Civil Service Officers ( All India or Central Civil Service-Group A or B). The Armed Forces and the Paramiltary Forces remain a source of recruits. The Indian Police Service was and is the major source of recruits. The Civil Service Officers permanently resign their cadre and join the Research and Analysis Service (RAS). Despite the strong hold of the national police on the agency, it is a cosmopolitan organization with people from all professions of life joining. R&AW also employs a number of linguists.
Basic Training[19] Basic training commences with 'pep talks' to boost the morale of the new recruit. This is a ten-day phase in which the inductee is familiarized with the real world of intelligence and espionage, as opposed to the spies of fiction. Common usages, technical jargon and classification of information are taught. Case studies of other agencies like CIA, KGB, Chinese Secret Agency and ISI are presented for study. The inductee is also taught that intelligence organisations do not identify who is friend and who is foe, the country's foreign policy does.
Advanced Training[20]The recruit is now attached to a Field Intelligence Bureau (FIB). His training here lasts for six months to a year. He is given firsthand experience of what it was to be out in the figurative cold, conducting clandestine operations. During night exercises under realistic conditions, he is taught infiltration and exfiltration. He is instructed to avoid capture and, if caught, how to face interrogation. He learns the art of reconnoiter, making contacts, and, the numerous skills of operating an intelligence mission. At the end of the field training, the new recruit is brought back to the school for final polishing. Before his deployment in the field, he is given exhaustive training in the art of self-defense, an introduction to martial arts and the use of technical espionage devices. He is also drilled in various administrative disciplines so that he could take his place in the foreign missions without arousing suspicion. He is now ready to operate under the cover of an Embassy to gather information, set up his own network of informers, moles or operatives as the task may require.
(will continue tomorrow! Damager is watching me!)
One more fact: Eddie Murphy never won an OSCAR!
// Dhans..உலகத்தரத்துக்கு எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய செலவு ஆகும்//
Dear Dhans many worldclass movies were taken with minimum budget. Oscars are not for High Budget Films but high quality films/treatments. With so many plastic charectors and half baked casting it is not a worldclass attempt by kamal. But he talks too much on academy awards, an institution with high standards! See the other noted noble work they have done...
he Academy Film Archive is part of the Academy Foundation, the educational and cultural arm of the Academy of Motion Picture Arts and Sciences. Dedicated to the appreciation, study and preservation of our motion picture heritage, the Archive's activities include collection, preservation, documentation, exhibition and research access to films.
The Academy announced its plan to collect motion pictures upon its founding in 1927 and made its first film acquisition two years later, in 1929.
The Archive’s collection now includes over 100,000 items, covering some 70,000 individual titles. The interests of the Academy Film Archive have historically included:
சகோதரி மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கமல் சொன்னார் " பிரபுதேவா நல்ல காலம் இந்தியாவில் பிறந்தார். அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஒரு சாதாரண நடனகலைஞனாகவே இருந்திருப்பார் ஏன்னா அமெரிக்காவில் தெருவுக்குதெரு பல நடனகலைஞர்கள் இருக்கின்றார்கள் "
ஆக கமலுக்கும் தனது நிலையும் தனது படத்தின் தரமும் தெரியும். இதனால்தான் தற்போதெல்லாம் ஆஸ்கார் வாங்குவேன் என ஸ்டேட்மெண்ட் விடுவதை நிறுத்திவிட்டார். ஆனால் தமிழ்நாட்டில் ஹீரோக்கள் எப்போதுமே ஸீன் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதான் படம் பிச்சுக்கிட்டு ஓடும்.அதனால் கமல் விடும் பில்டப் இந்த மாதிரி மாறீட்டுது, அம்புட்டுதான்.
ஆனால் பெரும்பாலும் குப்பை படங்களை எடுத்த டைரக்டர் ஷங்கரில் பில்டப்புக்கு கமல் பில்டப் தேவலை. ஏன்னா, காலக்கொடுமைக்கு ஜீன்ஸ் படத்தை, ஹாலிவுட்டில் சில சீன் எடுத்த ஒரே காரணத்துக்காக தனது இன்புளூயன்ஸ் மூலம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் அவார்டு போட்டிக்கு (1998-ல்) அனுப்பினார். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்!
ஆனால் நீங்கள் ரஜினியை ரொம்பப நல்லவர் என்று சொல்வதுதான் இடிக்கிறது. கமல் உலகத்தரம்ன்னு சொன்னால் கொஞ்சம் யோசனைக்கு பின்புதான் ஆளு ஏமாத்தறார்னு புரியும். ஆனா ரஜினி உலகத்தரம்ன்னு சொல்ல 'உ' ந்னு ஆரம்பிச்சாலே சிரிச்சிட மாட்டோம்? அதனால ரஜனியின் பில்டப்பு வேறு மாதிரியானது. பட ரிலிஸப்ப இதுதாம் என்னோட கடைசிப்படம், நான் இமயமலைக்கு போறன் இல்லை அரசியலுக்கு வரான் என ரஜினி வேறு திசையில் பில்டப்பை ஆரம்பித்து விடுவார்.
அவர் உலக தரம், உலக நாயகன் என்றெல்லாம் கூறுவதை விட்டு விடலாம்.
இந்தப் படம் தமிழ் சினிமாவில் தொழில் நுட்ப தரத்தில் சிறந்த படம் என்று கூடவா உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
//
பாதி இடங்களில் படம் அமெச்சூர் தரத்திலான 3 டி அனிமேசன் மூலம் பார்க்கவே பரிதாபமாக இருக்கையில்
//
Real World Animation செய்வதற்கு சுமார் ஆயிரம் கோடி பணம் வேண்டும். 60 கோடியில் இவ்வளவு தான் முடியும்.
கடைசி சண்டையில் மூன்று கமல்கள் இருப்பது போலவா இருந்தது?
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்தது போல குரலையும், உடல் மொழியையும் மாற்றி நடித்தது சிறந்த நடிப்பல்லவா?
//
With so many plastic charectors and half baked casting it is not a worldclass attempt by kamal. But he talks too much on academy awards, an institution with high standards!
//
ஆஹா எங்கள் அனைவருக்கும் தெரியாத செய்தியை தந்து எங்களை உய்வித்து விட்டீர்கள்.
Denzel Washington க்கு Training Day விற்கும், Russell Crowe விற்கு Gladiator க்கும் விருது கொடுத்த நிறுவனம் அல்லவா?
நமது கல்லாபெட்டி சிங்காரம் கூட அவர்களை விட நன்றாக அந்தப் படத்தில் நடித்திருப்பார்.
சும்மாவா சொன்னான் பாரதி
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
இவர் வாய்ச் சொல்லில் வீரரடி
//அதைவிட்டுவிட்டு ஏதே மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்வதைப்போல சிறிது செய்துவிட்டு//
இதெல்லாம் ரொம்ப ஓவர்.. சும்மா எதோ காழ்புணர்ச்சியில் பேசுவது போல இருக்கு.. நீங்கள் சொன்னது போல சில வேடங்கள் செயற்கையாக தான் இருக்கு. ஆனா பூவராகன், பல்ராம் நாயுடு போன்ற வேஷங்களும் அந்த வில்லன் மற்றும் புஷ் கேரக்டருக்கு அவர் பேசும் ஆங்கிலமும் எந்த வகையில் குறைந்து விட்டது? அந்த ஜப்பான்காரர் வேடம் கூட நன்றாக தான் இருக்கு..
//(பாதி பாத்திரங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றது) உலக நாயகன், உலகத்தரம் என்றெல்லாம் வாயடிக்காமல் அடக்கமாக இருப்பது அவருக்கு ஓரளவு பெருமை சேர்க்கும். இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!//
உங்கள் விமர்சனத்தின் நோக்கம் புரிகிறது. கமல் 3 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
//ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு அறிவு ஜீவி என்பது ஒருபுறம் ஆனாலும் அவர் பேசுவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை//
நிதி மேலாண்மை படித்ததாக தெரிவிக்கும் நீங்கள் குறிபிட்ட துறையில் இருக்கும் ஒருவரின் நம்பிக்கையை ஏளனம் செய்வது சரியாக இல்லை..
//Unsettled Woman said...
சரண், அவர் தன்னை உலகநாயகன் என்று எதைவைத்து சொல்லி விளம்பரப்படுத்திக்கொள்கிறார்? இதற்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது.//
நீங்கள் கடைசியாக குறிப்பிட்டிருக்கிறிர்களே சூப்பர் ஸ்டார்.. அவர் எதை வைத்து தன்னை சூப்பர் ஸ்டார் என்று விளம்பரப் படுத்திக் கொள்கிறார்?
சூப்பர் ஸ்டாரே தேவலை என்று நீங்கள் அவரை கமலுடன் ஒப்பிடாமல் இருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது.
//ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்தது போல குரலையும், உடல் மொழியையும் மாற்றி நடித்தது சிறந்த நடிப்பல்லவா? //
இந்த விசயத்தில் விக்ரம் தான் என் மனதில் வருகிறார். சீயான், ஆறுச்சாமி, அம்பி, ரெமோ, அந்நியன் என்று என்னமாய்க் கலக்கியிருக்கிறார். கொஞ்சம் அவரோடு ஒப்பிடுங்களேன்!
இன்னும் சொல்லப்போனால் பிரகாஷ் ராஜுடன் அவர் வரும் ஒரு சில நிமிடங்களில் சில ஷாட்டுகளிலிலேயே எந்த பிரமாண்டத்திற்கும் இடமின்றி அந்நியனில் கலக்கியதை என்ன சொல்ல! ஆனால் கென்னி கமல் மாதிரி மண்டக்கனத்தோடு பேட்டிகொடுப்பவரல்ல.
//ஏன்னா, காலக்கொடுமைக்கு ஜீன்ஸ் படத்தை, ஹாலிவுட்டில் சில சீன் எடுத்த ஒரே காரணத்துக்காக தனது இன்புளூயன்ஸ் மூலம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் அவார்டு போட்டிக்கு (1998-ல்) அனுப்பினார். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்!//
Jeans was produced by Ashok Amirtharaj, owner of Hydepark Entertainment, a notable production house in Hollywood. Being brought up in Chennai, he thought of making a Tamil film and assigned Shankar to helm the affairs. Ashok Amirthraj's influence helped Jeans to be nominated for the Academy awards (yeah, it is Oscars!!) under the "Best Foreign Film" category. Looking at the end product, i.e Jeans, Ashok Amirtharaj vowed not to make any Tamil movies in future.
பின்னூட்டம் இட்ட அனைவரும் சரியாகத் தான் சொல்லி இருக்காங்க... கிட்டத் தட்ட அனைவரும் ஒரே மாதிரி கருத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தமிழரசி அவர்கள் சொல்வது நிச்சயம் சப்பை கட்டாக தான் இருக்கு.. நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது போல்... நாங்கள் என்ன சொன்னாலும் உங்களால் கமலை உயர்வாக பார்க்க முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது... பலரும் உயர்த்தி பேசும் ஒருவர் மீது (கமல் அல்ல.. அது யாராக இருந்தாலும்..) பொதுவாக ஏற்படும் வெறுபுணர்வு தான் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தெரிகிறது.
//
Unsettled Woman said...
இந்த விசயத்தில் விக்ரம் தான் என் மனதில் வருகிறார். சீயான், ஆறுச்சாமி, அம்பி, ரெமோ, அந்நியன் என்று என்னமாய்க் கலக்கியிருக்கிறார். கொஞ்சம் அவரோடு ஒப்பிடுங்களேன்!
//
இதெல்லாம் சரி, நகைச்சுவை நடிப்பு?
நடனத்திறமை?
நீங்கள் மைக்கேல், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, ஏன் தசாவும் கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் தெரிந்த திரைக்கதை எழுதும் நுட்பம்?
அதில் விக்ரம் எங்கே கமல் எங்கே?
//
இன்னும் சொல்லப்போனால் பிரகாஷ் ராஜுடன் அவர் வரும் ஒரு சில நிமிடங்களில் சில ஷாட்டுகளிலிலேயே எந்த பிரமாண்டத்திற்கும் இடமின்றி அந்நியனில் கலக்கியதை என்ன சொல்ல!
//
அந்தப் படத்தின் முடிவில் நான் விக்ரமிற்கு எழுதிய மடலில், "Eclipsed Kamalhaasan" என்றே குறிப்பிட்டேன். (மடல் முகவரி அந்த திரைப்படத்தின் இணைபக்கத்தில் இடம் பெற்றது. அதனை அவர் படித்தாரா என்பதை நான் அறியேன்.)
ஆனால் அதே காரணத்திற்காக கமலை விட அவர் சிறந்த நடிகர் என்றெல்லாம் கூறுவது ..........
//
ஆனால் கென்னி கமல் மாதிரி மண்டக்கனத்தோடு பேட்டிகொடுப்பவரல்ல.
//
இருக்கட்டுமே. மீண்டும் பாரதியையே நினைவூட்டுகிறேன்.
"நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச்செருக்கு"
என்ன செய்வது பாரதி என்னுடன் கலந்து விட்டவன். அவனை தொடாது என்னால் வாக்குவாதங்களில் ஈடுபட முடியவில்லை.
சரி எனது மற்ற கருத்துக்களை வசதியாக மறந்து விட்டீர்களே?
\\இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!//
இதிலிறுந்தே உங்கள் உலகதர ரசனை என்னெவென்று தெரிந்து விட்டது ..நிச்சயமாக சூப்பர் ஸ்டார் போல் உலகதர படத்தை கமலால் கொடுக்க முடியாது ..
No more tidbits on Oscar, Hollywood, RAW please. Don’t underestimate Kamal Hasan or any commenter here.
Dasavadaram deserves critique for its inherent disparities, appreciation for its proven qualities. But I’m interested discussing Kamal’s qualification to claim his deserved position in world cinema. If this discussion furthers beyond Dasavadaram, I would be glad participating in it. Else, I shall meet you in the next post.
/////விக்ரம் தான் என் மனதில் வரு கிறார். சீயான், ஆறுச்சாமி, அம்பி, ரெமோ, அந்நியன் என்று என்னமாய்க் கலக்கியிருக்கிறார். கொஞ்சம் அவரோடு ஒப்பிடுங்களேன்!////
இது உங்களுக்கே அடுக்குமா, Unsettled Woman?
நீங்களே ஒப்பிட்டு விட்டு கொஞ்சம் சொல்லிவிடுங்கள். இருவரில் யாருக்கு அதிக மதிப்பெண் என்று.
///ஆனால் கென்னி கமல் மாதிரி மண்டக்கனத்தோடு பேட்டிகொடுப்பவரல்ல.////
கென்னி -யின் மண்டக்கனத்தைப் பற்றி இயக்குனர் அமீரிடம் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். இன்னும் கொஞ்சம் புகழ் பெறட்டும், பிறகு பாருங்கள் பூனைக்குட்டி வெளியே வரும், அப்போ தெரியும் மண்டகனத்துக்கு தகுதி யாருக்கு உள்ளது, கென்னி -க்கா அபு -வுக்கா என்று.
////ஆக கமலுக்கும் தனது நிலையும் தனது படத்தின் தரமும் தெரியும். இதனால்தான் தற்போதெல்லாம் ஆஸ்கார் வாங்குவேன் என ஸ்டேட்மெண்ட் விடுவதை நிறுத்திவிட்டார்./////
திரு நந்தவனத்தான்,
ஆஸ்கார் வாங்கும் அனைத்துப் படங்களும் உலகத்தர படங்கள் அல்ல, கமல் எடுக்கும் படங்கள் எல்லாமும் குப்பைகள் அல்ல. (ஆஸ்காரின் அரசியல் பற்றி வேறு சமயத்தில் விவாதிக்க ஆவலாய் உள்ளேன்). நமக்கு ஆஸ்கார் தேவையில்லை என்று முடிவு செய்துதான் ஆஸ்கார் பேச்சை நிறுத்தி விட்டார் கமலகாசன். நீங்கள் சொல்லும் காரணம் கிஞ்சித்தும் இல்லை. வெகு சில "சிறு சமரச" ங்களுடன் வெளிவந்த "மஹாநதி" உலகத்தரமல்ல என்று விவாதிப்பீர்களா? இவ்வாறு கமலின் உலகத்தர படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றாலும் மற்றெவரையும் ஒப்பிட்டால் இவ்வெண்ணிக்கை அதிகம் தானே. மார்லன் பிராண்டோ படங்களில் எத்தனை உலகத்தரம்? அல் பச்சினோ -வின் படங்களனைத்தும் உலகத்தரமா?. நீங்கள் கேட்கலாம் "இவ்விருவர்தான் ஹாலிவுட்டின் காட் பாதர்களா?" என்று. இல்லைதான்( ஆனால் இவர்கள் உலகத்தர கலைஞாகள் என்பதில் எவர் சந்தேகிக்க முடியும்?). எனினும், உலகத்தரம் என்றதும் இவ்விருவரை கூட்டிவந்து தான் கும்மி அடிக்கிறார்கள் பெரும்பாலும். வெள்ளைக்காரனாக இருந்தாலும், இத்தாளிக்காரனாக இருந்தாலும், தமிழனாக இருந்தாலும்.
இணையத்தில் ஒரு அசடு அரிய, பெரிய தரவுகள் எல்லாம் தந்து நீண்ட விவாதங்கள் செய்து இறுதியில் சொல்கிறது "The most versatile hero in the world next to Al Pacino is Shah Rukh Khan" என்று. ஷாருக்கான் இதைக்கேட்டால் ஊடு பூந்து உதைப்பார்.
ஆனால் "The Most versatile hero in the world next to Al Pacino is Kamal Hasan" என்று சொல்லிப்பாருங்கள்!, சற்றே மொள்ள மாரித்தனம் மாதிரி தெரிந்தாலும் விவாதத்திற்கு ஏற்கக்கூடியதுதான். அதற்கு கமல் தகுதி வுடையவர் தானே?
எனக்கு கூட ஒன்று புரியவில்லை. எதை வைத்து கமல் உலக நாயகன் என அழைக்கபடுகிறார்.
துணிச்சலான பதிவு. வாழ்த்துக்கள்.
I dont mind the Fans of Kamal's comments calling him as the acting benchmark of INDIA! I can only tell them to see the achievements of ppl like Mammutty, Nandita Das, Om Puri, Naseeruddin Shah in the Indian scenario first before scribling here. Any real Film Critics here?
மோகன் கந்தசாமி அவர்களுக்கு,
நீங்கள் சொல்லுவதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.எல்லாக் கமல் படங்கள் குப்பைகள் இல்லை. ஆஸ்கரின் அரசியல் ஏற்கனவே பல இடங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான்.
சக்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ தான் கமல். மகாநதி உலகத்தரம் என்பதெல்லாம் ஜோக், ஸாரி. மகாநதிக்கு கிடைத்ததெல்லாம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது, அவ்வளவுதான். இந்தியாவைத் தாண்டி பப்பு வேகவில்லை. அப்படி இருக்க தசாவதாரம் உலகத்தரம் என்பதெல்லாம் தாங்க முடியாத சமாச்சாரம். ஒரு நல்ல தமிழ் பொழுதுபோக்குப் படம் என நான் ஒப்புக் கொள்ளுவேன், அம்புட்டுதான்.
செவன் சமுராய் போலவோ அல்லது பைசைக்கிள் தீஃப்ஸ் போலவோ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு கமல் படம் சொல்லுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படிப் பட்ட ஒரே இந்தியப் படம் பதேர் பாஞ்சாலி.
அதே போல பிராண்டோவும் அல்பசினோவும் நடித்த காட்பாதர் போதும் அவர்கள் பெயர் சொல்ல.ஆனால் அப்படிப்பட்ட தரங்கொண்ட படத்தில் கமல் இனிமேல்தான் நடிக்க வேண்டும்.மேலும் அவர்கள் நடித்த எந்தப் படமும் காதலா காதலா அல்லது பம்மல் கே சம்பந்தம் அளவிற்க்கு 'உலகத்தரம்' வாய்ந்தாக இருக்காது என நினைக்கிறேன்,
//Unsettled Woman
I can only tell them to see the achievements of ppl like Mammutty, Nandita Das, Om Puri, Naseeruddin Shah in the Indian scenario first before scribling here. Any real Film Critics here? //
HaHaHa.. what u meant by real film critic mam? நீங்க சொல்லி இருக்கிறது தான் சரினு சொல்றவங்களா? :P... ஏன் மத்தவங்க கருத்த மதிக்க மட்டேங்கறிங்க? சிலர் உங்கள ரொம்ப தைரியமானவங்கனு சொல்லி இருக்காங்க. தைரியம்னா யார் என்ன வேணாலும் பேசுங்க. நீங்க சொல்றத பத்தி எனக்கு கவலை இல்ல. நான் சொல்றது தான் சரி.. அப்படினு சொல்றது இல்ல... மத்தவங்க சொல்றது சரியாக இருந்தால் கொஞ்சம் மண்டகனத்தை இறக்கி வைத்து விட்டு ஒத்து போகறது தான் தைரியம். சும்மா வீம்புக்கு வாதம் பண்றது தைரியம் இல்லை மேடம். :)
//I can only tell them to see the achievements of ppl like Mammutty, Nandita Das, Om Puri, Naseeruddin Shah //
...ஸ்ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆஆ... தாறுமாறா கண்ணக் கட்டுதே... உங்கள் விலாசம் குடுக்க முடியுமா? கமலை தசாவதாரத்தில் அறிமுகமான புதுமுக நடிகர் என்று நினைத்து விட்டீர் போல இருக்கு... அவர் இதற்கு முன்பே ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அதில் சில படங்களை அனுப்பி வைக்கிறேன். பாருங்கள்.:))
//I dont mind the Fans of Kamal's comments calling him as the acting benchmark of INDIA!//
:-))))))))))))))))))))
தயவு செய்து கமல் மண்டகனத்துடன் பேசுகிறார் என உங்கள் வாயால் சொல்லாதிங்க.இந்த வரிகளில் உங்கள் மண்டைகனம் நன்றாக தெரிகிறது.
மேலும் இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுவது அட்டர் வேஸ்ட்... அடுத்த பதிவு ப்ளீஸ்.. :(
Dear Mohan Kandasamy, no issues calling me a boy cause u would have never seen a girl make sense in arguements. But the poor fact is in the course of events you shown your ignorance than your wisdom on Indian cinema sans Global Cinema. For your information the following lines about Mammooty (who started acting after becoming a lawyer - not from the Kalathur Kannamma age!) who won THREE NATIONAL AWARDS ... and his subtle acting is matchless in comparison to the so called OLAKA NAYAKAN :-).. Read more to improve your basic Cinema Understanding (INDIA LEVEL ofcourse)...
Apart from the heroic roles he enacted in pure commercial films, Mammootty was fortunate to have got the chances to portray the meaty roles of M T Vasudevan Nair’s (M T) characters. M T’s films like Aalkootathil Thaniye catapulted him to new realms of stardom. His controlled acting, never crossing the limits, and his presentation of M T ‘s dialogues, which were always pregnant with meaning, gave Malayalam cinema a new concept of hero.
Then came his Oru CBI Diary kurippe, which some observers of Malayalam films say was a landmark. It brought to fore a new concept of villainy, fresh presentation of politicians and above all a refreshing idea of hero. Without even a single song or dance number, Oru CBI Diary kurippe went on to create box-office history in Kerala. For all these, a large portion of credit goes to Mammootty for his enactment of the role of an upright CBI officer and his immaculate ways of unfolding the secrets of a murder shrouded in mystery. His theatrical representation of a Tamil Brahmin CBI officer became a topic of household discussion in Kerala.
Mammootty touched higher pinnacles of his career in Oru Vadakkan Veeragatha, again an M T creation. His depiction of a man of distinguished valor but vilified by circumstances won him the top honors of the country, National Award for best acting. His histrionics matched the literary genius of M T. After his first national award, he made it almost a habit of winning the national award.
It was acting talents coupled with his willingness to go to any extent to rationally portray the roles that helped to him put his one leg in offbeat and commercial movies and other in art movies, and yet not to fall flat. Mammootty became almost a regular face in Adoor Gopalakrishnan’s films. He starred in three of his latest movies, Anantharam, Mathilukkal and Vidheyan. The easiness with which he illustrated on screen the protagonist in Mathilukkal won him national award for best acting once more. It was again in an art movie, Ponthan Mada, which won him the national award for a third time.
In between he had crossed the boundaries of Malayalam cinema and acted in Tamil, Telugu and Hindi movies. Though he proved a success in Tamil after Mani Ratnam’s Dalapati and continue to shine in Tamil films (Kandukondein Kandukondein is his latest Tamil flick), his maiden Hindi film, Dhartiputra went unnoticed. But his national presence was once again felt after Jabbar Patel’s Dr Baba Saheb Ambedkar. So realistic was his performance that it was reported thousands who watched the shooting of the film were in tears after the shooting. No wonder, he again bagged the coveted Rajat Kamal for best acting.
One more TRUTH about Mammooty is he too won the NATIONAL BEST ACTOR AWARDS THRICE! We ppl dont tknow what is happening in our neighbours home but speaking too much about OLAKAM!
Dear Unsettled Woman,
I’ve already decided not to discuss about the films in this platform further.
And, thanks for emancipating me with your inundation of information from my long-suffered ignorance. I will definitely recommend your therapy to my fellow ignorant living beings and they would also be thankful to your curative powers.
The purpose of this comment is to ask you sorry if my last comment hurts you. Actually, I never meant to call you a boy, but it was a direct speech I spoke to myself “(To me) Common boy! You got to get cool down…". Nevertheless, what actually made me laugh again now, if not hurt me, was that you had said I would never have seen a girl make sense in arguments. Mhm, I don’t want to discuss this either.
Have you ever seen a single trace of arrogance during the course of this discussion in my comments? But some of us who participated in this discussion have spotted more than one trace of arrogance in your arguments, but that is understandable as that is one of many styles of argument. Anyway I would never want to see such a girl in person but I don’t care discussing online though. Because I have also shown my vehemence, not just arrogance, when situation demanded in the past.
The bottom line is that I was not arrogant commenting that line but it was a direct speech I spoke to myself. Relaxing, you can verify it again. I will delete the comment in a day.
I just got a chance to look at your profile. Since you are also a newcomer to the blogs like me, Valentina “I don’t want to see the animosity building up any further”. See you next time.
Mohan Kandasamy
http://mohankandasami.blogspot.com/
Hi Mohan, what happened? common yaar. Leave apart the topic.. No issues though u dont wanna c me in person ;-)
//முதலில் ஒரு சில வேடத்தில் மட்டும் நடித்து அவர் திறமையை உலகத்தரம் என்று நிரூபிக்கட்டும், ஒரு எட்டி மர்பி போல! //
நீங்க கொஞ்சம் பைனான்ஸ் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தீங்கன்னா கட்டாயம் கமலை வச்சு ஒரு உலகத்தரப் படம் எடுத்திரலாம். :)
நீங்க சொல்ற உலகத்தரத்திற்குப் படமெடுக்க இந்தியாவுக்கு இன்னும் பத்தம்பது வருஷம் ஆகும்.
அப்ப நம்மூரு பாப்புலேஷனும் ரெண்டு மூணு பில்லியன் ஆயிடுச்சின்னா அறுபது கோடிக்கு பதிலா ஆயிரம் கோடி செலவழிச்சு எடுக்க முன் வருவாங்க.
அது வரைக்கும் ஊர்க்குருவியின் உயர உயரப் பறக்கும் முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
நூறு மீட்டர் ரேஸில் ஓட முடியாதுங்கறதுக்காக குழந்தையைத் தவழ விட்டுக்கிட்டேவா இருக்கோம்?. அது எந்திரிச்சு நின்னு தொப்புன்னு விழுந்தாலும் கைகொடுத்து தூக்கி நிப்பாட்டி நடக்க வைக்க முயற்சி பண்றதில்லையா? ஏன்? பின்னாடி அதுவும் ஓடும்ங்கற நம்பிக்கைதானே.?
தசாவைப் பாராட்டுவது பின்னாளில் அவர் இன்னும் தைரியமாக இன்னும் அதிக தரத்தில் படமெடுக்க முன்வருவார் என்ற நம்பிக்கையில்தான். 'நிக்கவே வக்கில்ல. நீ ஓடியா கிழிக்கப் போறே - பேசாம ஒக்காரு'ன்னு குழந்தை தலையில் தட்டி உட்கார வைக்கும் வேலையைச் செய்கிறீர்கள். செய்யுங்கள்! செய்யுங்கள்!
நன்றி
ஹயோ!ஹயோ! ஏன் தான் இப்படி "உலக தரம் , உலக தரம்"ம்னு பினாத்தராங்களோ. இந்த படம் உலகதரமான்னு தெரியலே( ஏன்னா எத வெச்சு சொல்ரதன்னு புரியலே). ஆனா இந்திய தரத்துக்கு மேலனாவது ஒத்துக்கங்க அம்மணி. இல்ல, கமல் மேல எனக்கு இருக்குற காழ்ப்புணற்சினால இத கூட நா ஒத்துக்கமாட்டேன்னு சொல்றீங்களா? பரவாயில்ல, குறஞ்சது வழக்கமான தமிழ் படத்துக்கு மேலனாவது ஒத்துக்கவீஙகளா? அழாகன, கவர்ச்சி வெடிகுண்டான(bomb) ரெண்டு கதாநாயகி இருந்தும் கூட, ஒரு டூயட் கூட வைக்காம திரைக்கதைய அமைக்க திராணி வேண்டாமா? இது ஹாலிவூட் ரேஞ்சு இல்லிங்களா. ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே ஸ்ரேயாவோட தோலக்காட்டித்தா (சற்று அதிகமாகவே) marketing பண்ண வேண்டியுள்ளது. ஷங்கருக்கும் அவருக்கும் , நடிப்புமேலயும் கத மேலயும் இல்லாத முழுநம்பிக்க, கமலுக்கும் ரவிகுமாருக்கும் இருக்குரப்போ ஏன் இந்த படத்த மைல்கல் (benchmark) படமாக ஏத்துக்கக்கூடது? படத்ல நெறய குறைகள் இல்லன்னு சொல்ல முடியாது ( குறையே இல்லாத படம்னு எதுவும்மே இல்ல). ஆனா, தமிழ் படங்கள் எந்த தரத்துக்கு போகனும்னு ஒரு வழிகாட்டி படமா இது இருக்கும்.
இது உலகதரமா என்பதை விடுங்கள் முதலில் இது கமல்ஹாசனின் தரத்துக்குக் கூட கிடையாது. கமல்ஹாசனோட பலமே நுட்பமான அவரோட ஸ்கீரின் பிளேதான். அந்த வகையில பாத்தாக் கூட இந்த படம் ஒன்னுத்துக்கும் தேறாது. வெறுமே டெக்னிகல் அம்சங்களில் உலக தரத்தை காப்பியடிச்சு ஒன்னத்துக்கும் பிரயோசனம் இல்லை.
அப்புறம் அசின், மல்லிகா டூயட் போடாதத சொல்றாரு ஒருத்தர். எனக்கு என்ன சந்தேகம்னா, ஏன் கமல்ஹாசனே அசின், மல்லிகா கேரக்டர்ல நடிக்கல அப்படிங்கறதுதான்.... :-P
மத்தபடி கமல்ஹாசனுக்கு நல்லா சொறிஞ்சுக்கனும்னு ஆசை... சுயசொறிதலை சேமம்மா செஞ்சுண்ட்டுட்டார்....
பீப்பா அறுக்க பீரங்கி எதுக்குன்னு கேக்க தோணுது... (முத்து பட வரிகளை கொஞ்சமா மாத்தி. நமக்கு ரஜினியையும் சுத்துமா பிடிக்காதுங்கோ)...
நான் ஒரு ரஜினி ரசிகன். அதனால் கமல் ரசிகர்கள் மேலே படித்து துன்புற வேண்டாம். ரஜினி படங்கள் இன்றும் வியாபார ரீதியில் நன்றாக போகின்றது. அதனால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடுகிறார். ஆனால் கமல் எதனால் உலகநாயகன் என்று அழைக்கபடுகிறார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த பட்டத்தை யாராவது வெளிநாட்டவர் அளித்திருந்தால் பரவாயில்லை. (ரஜினிக்காவது ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்கள்).
நான் ரசித்த கமல் படங்கள் கொஞ்சமே. அன்பே சிவம், தேவர்மகன், மகாநதி, சதிலீலாவதி... போன்றவை. இதில், அன்பே சிவமும், தேவர்மகனும் என்னை மிகவும் பாதித்தவை. நல்ல கதையில் சிறந்த டைரக்டர்களிடத்தில் கமல் நடித்தால் படம் உலகத்தரமாக வரக்கூடும். அதைவிட்டு விட்டு, கமலுக்காக கதைசெய்து, கமல் நடிப்பை காட்டுவதற்கு, ஒர் நாள் முழுக்க கரையாத makeup, அந்தரத்தில் கொக்கி மாட்டி தொங்குவது, கடலில் மூழ்கி உப்பு தண்ணீ குடிப்பது இப்படி செய்துக்கொண்டிடுந்தால் ஹாலிவுட் தரமாயிடாது. அமீர், மணிரத்னம், மிஷ்கின் போன்றவர்கள் படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலே போதுமானது.
இடுகையின் பொருளை விவாதிக்கிறதை விட்டுட்டு தனி நபர் அறிவின் அளவு விவாதிக்கப் பட்டதால் வந்த வினை, நொந்து கொள்ள வைக்கும் பின்னூட்டங்கள்.
வாழ்க, வளர்க!
Kamal never called himself as OlgaNayagan. He cares 2 hoots for such prefixes. If he is not OlagaNayagan, then explain, Puratchi Thalaivar, Puratchi Thalaivi, Ilaya Thalapathy and other such nonsenses. Has any Bollywood star anytime had a "title" like this? Even Big B is wary of these prefixes.
MoscowRam
Dasavatharam is a entertainment movie not a great movie . you are echoing my thoughts . but you should have done in proper way Kamal is great there is no doubt . We dont care about lesser rank students in class and expects the top rank to compete against state level and all india level , whats wrong in that . ( kamal is Universal hero ) .
FYI : i m a great Rajni Fan .
can mammootty do the roles which kamal did in salangai oli, anbe sivam, nayagan, aboorva sagodarargal, virumandi, devar magan, maha nadhi, pesum padam, sathya, hey ram,varumayin niram sivappu, punnagai mannan etc...
but kamal could have done oru vadakkan kadha, mirugaya,kazhchcha & oru CBI diary kurippu even better than mammootty & vanaprashtham, thanmaathra, kreedom, thoo vaanath thumbigal & spatigam even better than mohan lal.
there are lot of good actors in the world, but nobody is perfect, the speciality of kamal is, he is the only one who is closing the perfectness ( personality, dance, action, comedy, emotional, romance & all)
dasavatharam may not be a world class film,
but Anbe sivam, Virumandi, Hey ram, Devar magan, Kurudhip punal, Nayagan, Maha nadhi, slangai oli are well above than world class.
Post a Comment