My Last 2 Posts
நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!
வலைப்பதிவுலகில் தமிழ்மணம் தடைக்கல்லா?
- பாரிஸ் திவா (Blogger since April 2004)
Monday, June 30, 2008
70களில் தலை சிறந்த நடிகர் எம்.ஜி.ஆர்!
ஆம். ஒரே வரியில் முடித்துவிடுகிறேன். 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டு காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான தேசிய விருதுகளை தமிழகம் ஒரே ஒருமுறை பெற்றது. அதைப் பெற்றுக் கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
Sunday, June 29, 2008
குழந்தைகளை உயிருடன் புதைக்கும் மூடநம்பிக்கை.. அதிர்ச்சியடைய வைத்த குறும்படம்
in a very disturbing video , children are buried alive in an Amazonian tradition, including a little boy who dies because no one will raise him. It is rare footage of a practice involving hundreds of children a year.
Warning, this video is very disturbing. I was unaware of this practice until seeing this video. However, one of the great values of the Internet and video sites is to educate people on such barbaric practices. Regardless of the cultural norms and sensitivities, it should be the obligation of Brazil and other nations to end this horrible practice. Perhaps if enough people watch this video, something might be done.
This site has one such description:
After being born, November 21, 2003 at 7 am, he was buried alive by his mother, Kanui. She was carrying out a ritual prescribed by the cultural norms of the Kamaiurás, which require that children of unwed mothers be buried alive. To seal the fate of Amalé his grandparents walked on top of the mound. Nobody heard even a cry from the child. Two hours after the ceremony, in a gesture of defiance against the whole tribe, his aunt Kamiru set out to disinter the baby. She recalls that his eyes and nose were bleeding profusely and that he first began to cry only eight hours later. The older Indians believe that Amalé only escaped death because that day the earth of the pit was mixed with numerous leaves and sticks, which could have created a small air bubble.
எனக்குப்பிடித்த அவதாரம்!
இவளுக்குப் பிடித்த அவனது அவதாரப் பாடல்... உறுத்தாத மண்ணின் மனம் கலந்த காட்சி அமைப்பு மற்றும் நடிப்பு, 'ராஜா”ங்கமே நடத்தும் இசை என்று ஒரு அழகான தரமான படைப்பு.. நாசரின் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு நல்ல கலைஞனை ஆவணப்படுத்துவதும் நம்மால் முடிந்த ஒரு சிறுசேவை தானே!?
Friday, June 27, 2008
சினிமா - ரெட் - லைட் ஏரியா
1. இந்நிறுவனம் மக்களிடம் சலனப்படக்கலையை எடுத்துச் செல்லவிரும்புகிறது.
2. இணையத்தின் மூலம் விற்பனையை பெருக்க நினைக்கிறது
3. இதன் இணையத்தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருமுறை பாருங்கள்.
4. விலையோ அமரிக்காவில் 30 ஆயிரம் டாலருக்குள் .
5. இது வெறும் காமிரா மட்டுமல்ல, ஒரு காமிரா சிஸ்டம். அதாவது நமது விருப்பத்திற்கேற்ற எல் சிடி ஸ்க்ரீன், லென்ஸ், மெமரி போன்றவற்றை தனித்தனியாக வாங்கி இணைத்துக்கொள்ளும் வசதி பொருந்தியது.
6. இதன் படப்பிடிப்பு ஏரியா (டிஜிடல் சினிமா 4கே ஐ விட அதிகம்) பற்றி அறிய கீழே எலியால் சுட்டவும்.
கீழே ஒரு க்ளோசப் மற்றும் லாங் ஷாட் டில் ரெட் காமிரா (பார்த்தாலே பத்திக்கும் போல, மவுசால் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். ஹை ரெஸ் படங்கள்)
ரெட் காமிரா பற்றி இந்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்...
"It's not that the RED is really that far ahead of the technological curve, it's just that everything else is so far behind."
- Scott Billups
"The Red camera is extraordinary. The Redvolution marks the tipping point of the democratization of filmmaking."
- Dean Devlin
Producer of Independence Day, Godzilla, The Patriot and Flyboys
"If the technical branch of the AMPAS, sometime in the next five years, doesn’t present RED with something heavier than a piece of paper, then they’re fools, and inattentive to boot.
Shooting with RED is like hearing The Beatles for the first time. RED sees the way I see. Someday I hope to find out exactly how Jim and his team made something so technologically advanced seem so organic, so beautifully attuned to that most natural of phenomena, light. But for now I'm just glad I've got my hands on the damn thing, because it's actually making the film(s) better because of it emotionality. At the same time, I am still figuring it out, still trying to discover its secrets, still interacting with it. For me, this is Year Zero; I feel I should call up Film on the phone and say, "I've met someone." Is it perfect? Not yet. But the flaws are fixable (the heat issue, which is being worked on; buttons that should be recessed; power cable from the rear of the camera), and anybody who doesn’t embrace the flashcard--regardless of time restraints--is an idiot.
But the best news of all is: If my lame hyperbole could adequately describe the image, it wouldn’t be RED." Steven Soderbergh
- Academy Award winning
Director, Steven Soderbergh
Director and Cinematographer of Ocean's Eleven, Traffic and Solaris
Thursday, June 26, 2008
சிங்கிளா வந்த சிங்கம் ரஜினி!
ரஜினி என்ற காந்தம் ஏன் சூப்பர் ஸ்டாரனது? அவருக்கு நடிக்கத்தெரியாதா? அவரது குணநலன் என்ன? அவர் எந்த வகையில் கமலுடன் வேறுபடுகிறார்? போன்ற பல கேள்விகள் என் மனதை உலுக்கியதால் இந்த பதிவு! ஆனால் இப்பொழுது மும்பையில் மழைக்காலமாகையால் என் உடனுறை தோழியின் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் நாளை பதிவு போடுகிறேன். ஆனால் இப்போ ஒரு கேள்வி உங்க எல்லாத்துக்கும்! இந்தியா மட்டுமல்ல ஜப்பான் காரர்களை கூட கவர்ந்திழுக்கும் அக் காந்தம் ஏன் சிங்கிளாகவே வருது ரொம்ப நாட்களாக? கமல் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறது! பதில்கள் பஞ்ச் டயாலாக் ஆகவும் இருக்கலாம்! தலைப்பைப் போல! சும்மா அதிருதில்ல!
(அனானிமஸ் பின்னூட்டமாகவும் இடலாம். செட்டிங்க்ஸை மாற்றிவிட்டிருக்கிறேன் தற்காலிகமாக)
Wednesday, June 25, 2008
அறிவுடை நம்பி கமல் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி?
உலக நாயகன் கமல் இந்தப்படத்தில் இஞ்சி யை தமிழ்ப்படவுலகில் முதலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். அதற்க்காக நான் பாராட்டுகிறேன். சென்ற பதிவின் பின்னூட்டத்தில் இம்சை அக்கா சொன்னது போல் எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை! நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள். அவ்வளவுதான். சரி. இந்த இஞ்சியை கண்டுபிடிக்க உலகின் மிகப்பெரிய காட்டின் தலைமை நிர்வாகி கூட சில பல கோடிகளை கொடுத்துள்ளார். சரி கண்மனிகளே. உங்களுக்கு ஒரு சில கேள்விகள்...
௧. கமலின் எந்த அவதாரம் இஞ்சியை படத்தில் உபயோகப்படுத்துகிறது?
௨. இஞ்சியை கண்டுபிடித்தவர் யார்?
௩. அவரது பிற முக்கியமான கண்டுபிடிப்புகள் யாவை?
Monday, June 23, 2008
தசாவதாரம் ஹாலிவுட் தரமா?
ஒரு சில நாட்களுக்கு முன் கமல் அவர்களின் பேட்டியை படிக்க நேர்ந்தது. ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு அறிவு ஜீவி என்பது ஒருபுறம் ஆனாலும் அவர் பேசுவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. பாதி இடங்களில் படம் அமெச்சூர் தரத்திலான 3 டி அனிமேசன் மூலம் பார்க்கவே பரிதாபமாக இருக்கையில், மேக்கப் போடுவதற்கு கூட வெள்ளைத் தோலுடையவர்கள் தேவைப்படுகையில் நாம் ஹாலிவுட் தரம் என்றெல்லாம் பேசுவது ராமணாரயனன் படத்தில்வரும் நாயையும் 101 டால்மேசியன் படத்திற்கும் முடிச்சுப்போடுவது போலாகும். நம்மால் இன்னும் ஒரு ஹெர்பி கோஸ்டு பனானாஸ் கூட அவர்கள் தரத்தில் செய்யமுடியாது என்பது நிசமாக இருக்கையில் கமலின் ஆசை நப்பாசை அல்லது வயிற்றெரிச்சல் என்றே படுகிறது. முதலில் ஒரு சில வேடத்தில் மட்டும் நடித்து அவர் திறமையை உலகத்தரம் என்று நிரூபிக்கட்டும், ஒரு எட்டி மர்பி போல! அதைவிட்டுவிட்டு ஏதே மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்வதைப்போல சிறிது செய்துவிட்டு (பாதி பாத்திரங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றது) உலக நாயகன், உலகத்தரம் என்றெல்லாம் வாயடிக்காமல் அடக்கமாக இருப்பது அவருக்கு ஓரளவு பெருமை சேர்க்கும். இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!
பெண்களும் அரசியலும்
Friday, June 6, 2008
உனை நினைத்து
அந்தத் தருணங்கள் அழகானவை தான்............
உன் விரல்கள் என் கேசத்தின் இடையே பயணித்த அந்த வருடல் நிமிடங்கள்,
உன் சுவாசத்தை அதன் சூடு ஆரும் முன்பே நான் சுவாசித்த அந்த நெருடல் வினாடிகள்,
உன் பார்வை என்னை ஆக்கிரமிப்பதை அறிந்தும் தெரியாதது போல் விரும்பி ரசித்த தருணங்கள்,
இருட்டு திரையரங்கில் குருட்டு வெளிச்சத்தில் மெல்லிசாய் அத்துமீறிய உன் விரல்களின் சில்மிசங்கள்,
போதுமடா, தனிமை எனை காவுகேட்கிறது! வந்துவிடு ஒரு பின்னிரவில்!