My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Wednesday, July 16, 2008

தமிழ்மணக் குழப்பங்கள் உதாரணம் = பெயரிலி Vs சுந்தரமூர்த்தி

இந்த மாதிரி சில விசயங்களுக்குத்தானே காத்துக்கொண்டிருந்தான் செல்லா. உண்மைகள் சந்தியேறட்டும் அனைவர் சாட்சியாக என்றுதான் இந்த வலைப்பூவே. பாருங்கள் முதல் கோணலை...

பெயரிலியின் வாக்குமூலம்:

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள்.

சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:
தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.

இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?


13 comments:

said...

///சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:


தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.

இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?///


தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த பிறகுதான் நீங்கள் சர்வாதிப்போக்குகளும் பதிவர்களை இழிபடுத்துவதும் பதிவர்களை எந்த வித முன்னறிவிப்பு இன்றி நீக்க ஆரம்பித்ததும் நடந்தது.

திரு.சங்கரபாண்டியன், திரு.தமிழ் சசி அவர்களும் தமிழ்மணம் சார்பாக அறிக்கைகளோ, கோரிக்கைகளோ வைக்கும் போது அடாவடியான வார்த்தைகளை கையாலுவதில்லை. ஆனால் புதியதாக புகுந்திருக்கும் கூட்டத்தைக் கண்டால் சட்டசபைக்குள் புகுந்த குண்டர்கள் போல் இருந்தால் இருங்கள் போவதென்றால் போங்கள் என்றால் பதிவர்கள் என்ன கரிவேப்பிலைகளா?


நான் என்று கோணேஸ்வரி குறித்து எழுதினேனோ அன்றே தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் நான் தமிழ்மணத்தில் நீக்க முயற்சி எடுத்திருப்பதாகவும் கவனமாக இருக்கும்படியும்
எச்சரிக்கப்பட்டேன்.


முதலில் நீங்கள் யார்? புதியதாக புகுந்திருக்கும் நிர்வாகிகள் அனைவரும் தமிழ்மணம் மூலம் இயங்கும் பதிவர்களிடம் புகைப்படத்துடன் அறிமுகம் செய்ய முடிமா?

இன்னொன்று தமிழ்மணத்தில் இடது பக்க ஓரத்தில் சின்னதா படம் போட்டுக் கொண்டிருப்பீர்களே! அதான் எல்.டி.டி.ஈ சம்பந்தமான படக்காட்டசிகள்! அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள் திரட்டியை நீங்கள் நிர்வகிப்பதால் என்ன வேண்டுமானாலும் புடுங்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு.

அமெரிக்க சட்டத் திட்டத்தின்படி இயங்கும் திரட்டி தான் தமிழ்மணம். உள்ளே புகுந்து ரவுடித்தனம் செய்வோம் என்றால் பதிவர்கள் இருந்தால் தானே?

said...

அப்படியா?


உங்கள் அஞ்சல்களும் விலக்கல்களும் காலவாரியாக விட்டாலேதான் சாத்தியப்படும்.

நீங்கள் தமிழ்மணத்துக்கு அனுப்பிய அஞ்சல்களை வெளியிட அனுமதி தருவதாக நீங்கள் தமிழ்மணத்துக்கு உங்கள் தரவுகளை ஓர் அஞ்சல் அனுப்புங்கள். அதன் பிறகு தமிழ்மணம்நிர்வாகமும் அனுமதித்தால், போடுகிறேன். -/பெயரிலி., சுந்தரமூர்த்தி சொல்வதிலே உள்ள காலவாரியான தெளிவு உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் கிடைக்கும். அதற்கு அனுமதியில்லாவில்லால், நீங்களே தமிழ்மணத்துக்கு உங்களை விலக்கக்கேட்ட அஞ்சலின் பிரதியை இங்கே போட்டுவிட்டு, என்னைத் தாராளமாகக் குற்றம் சாட்டலாம்.

நிற்க, உங்களின் அடுத்த இடுகையிலே (http://tamilmanam.net/forward_url.php?url=http://thenukegirl.blogspot.com/2008/07/blog-post_15.html&id=161484) ஓர் அநாநிப்பின்னூட்டம் - உங்களின் தனிப்பட்ட "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை"க்காக வெட்கப்படவே வெட்கப்படாத தன்மைக்காக விட்டிருந்தேனே? அதற்குப் பிறகு உங்கள் ஜால்ராக்களின் பின்னூட்டங்களினை அனுமதித்திருக்கின்றீர்கள். நான் போட்டவற்றை விடவில்லையே? இதுவும் நேற்றினைப் போலத் தற்செயல்தானா? ;-) என்ன இனி நாளைக்கு அனுமதித்தாலுங்கூட, blogger வசதியின்படி, பின்னூட்டம் வந்த அன்றைய காலவரிசைப்படியே நிற்கப்போகிறது. நீங்கள் நான் அனுமதித்திருக்கிறேனே என்று சொல்லிவிடலாம். இந்த இடுகையின் சீத்துவத்துக்கு ஒவ்வொரு நிமிடத்துக்குமென்ன screen shot எடுத்துச் சேகரிக்கவா முடியும்?

முழுலூசுத்தனமான என் பின்னூட்டங்களை விடமுடியாது; அரைலூசுத்தனமான தோழர்களின் பின்னூட்டங்களை விடமுடியுமாக்கும்.

==============

இனி அடிச்சு ஆடுங்க.


ஒரே ஒரு வருத்தம்; உம்மைப்போல ஒருவரையும் பாலா பிள்ளையின் காரணமாக பூலா+ஒம்லா விடயத்திலே தாங்கிப்பிடித்துப் போன ஆண்டு ஓர்குட் குழுமங்களிலே அந்தப்பயல்களுடன் சண்டை போட்டு நேரத்தை வீணாக்கவேண்டியதாகப் போயிற்றே என்பதுதான். விதீஇ வலியது :-)

said...

ஆஹா, செல்லாவைத் தெரியுது, என் இணைய குரு பாலாவைத் தெரியுது, தோழன் அமலாவைத் தெரிகிறது. ABC என்று அமலா, பாலா, செல்லாவை ஆயிரக்காணவர்கள் சூழ்ந்துகொண்டு பாடாய்ப்படுத்தியது அல்லது நாங்கள் ஆர்குட்டில் பட்டபாடு தெரிகிறது! எங்களுக்காக நீங்களும் போராடியிருக்கிறீர்கள் வேறு பெயரில்! சூப்பர் நண்பா! இவ்வளவும் தெரிந்தும் என்னை தமிழச்சி சொன்னதுபோல் கறிவேப்பிலை மாதிரி, தூக்கியெறிந்தேன், இருந்தால் இரு இல்லாட்டி போ என்று சொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது நண்பா. வாழ்க்கையின் பெரும்பகுதியை இணையப்போர்களிலே கழித்து நிசவாழ்வில் அன்றாடச் சூழலுக்கே கஷ்டப்படும் என்னையெல்லாம் உங்கள் இலக்காக்கி ... என்ன வன்மம் உன் மனதில்? நிச்சயம் புரியவில்லை. ஒருவேளை நேரில் சந்தித்தால் நிச்சயம் பேசுவோம் மனம் விட்டு. மற்றபடி என் கேள்விக்கு சாக்குப்போக்கு சொல்லாமல் நேர்மையாக பதில் சொல்லிப்பழகுங்கள். யார் சொன்னது உண்மை? நான் விலகினேன் என்று சுந்தரமூர்த்தியார் சொல்வதா அல்லது தூக்கியெறியப்பட்டேன் என்று மாட்சிமை தாங்கிய தாங்கள் சொல்வதா?

said...

தோழியே நான் ”மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” என்று மிக நிதானமாகப் போகிறேன். தங்கள் பின்னூட்டங்களை சேகரிக்கிறேன். திசைமாறாமல் இருக்க பின்பு பதிப்பிக்கிறேன். நன்றி.

Anonymous said...

செல்லாண்ணை.. உந்த வேலிச் சண்டையளை விட்டுட்டு நீங்க ஈழகாவியத்த தொடங்குங்கோ..
பெயரிலியண்ணை.. நீங்களும்தான்.. தெருச்சண்டையை நிறுத்திட்டு வேறை ஏதாவது செய்யுங்கோ... உங்கடை புத்தகம் வந்திட்டுதோ..?

தமிழச்சியக்கா.. நீங்கள்... வேணாம்.. ஒண்டும் சொல்லவில்லை. வேலியில போற ஓணாணை எடுத்து மடியில விடக் கூடாது.

Anonymous said...

/// திரு.சங்கரபாண்டியன், திரு.தமிழ் சசி அவர்களும் தமிழ்மணம் சார்பாக அறிக்கைகளோ, கோரிக்கைகளோ வைக்கும் போது அடாவடியான வார்த்தைகளை கையாலுவதில்லை. ஆனால் புதியதாக புகுந்திருக்கும் கூட்டத்தைக் கண்டால் சட்டசபைக்குள் புகுந்த குண்டர்கள் போல் இருந்தால் இருங்கள் போவதென்றால் போங்கள் என்றால் பதிவர்கள் என்ன கரிவேப்பிலைகளா? ///


தமிழச்சி அவர்களுக்கு நீங்கள் தமிழ்மணத்தில் இல்லை. ஆகையால் உங்களுக்கு இது தேவையில்லாத பிரச்சனை! நாங்கள் தமிழரசி என்னும் செல்லாவிடம் பேசிக் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது போல் எந்த தமிழ்மண நிர்வாகியும் சொல்லவில்லை.

ஓர் வாசகன்

said...

//இருந்தால் இருங்கள் போவதென்றால் போங்கள் என்றால் பதிவர்கள் என்ன கரிவேப்பிலைகளா? ///

தமிழச்சி சொல்வதில் தவறொன்றுமில்லை. என் கருத்தும் இதுவேதான். மற்றபடி இந்தப்பதிவு இனிமேல் பெயரிலி மற்றும் சுந்தரமூர்த்தி அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது இன்னும்! அவர்கள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வரட்டும்! பிறகு பார்ப்போம். இன்னும் ஒருபாக்கம் என் மனம் சில காரணங்களால் கனக்கிறது. இடையில் இந்த செல்வராஜ் போன்றவர்கள் பதிவிட்டு பாலபாடம் நடத்தி கடுப்பேற்றுகிறார்கள். இவர் யாராயிருந்தால் எனக்கென்ன? நான் யாரென்று வேண்டுமானால் மற்ற இணையம் சார் இளையதலைமுறையிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளட்டும்! காத்திருக்கிறேன் பெயரிலி நண்பா!

said...

//செல்லாண்ணை.. உந்த வேலிச் சண்டையளை விட்டுட்டு நீங்க ஈழகாவியத்த தொடங்குங்கோ..
பெயரிலியண்ணை.. நீங்களும்தான்.. தெருச்சண்டையை நிறுத்திட்டு வேறை ஏதாவது செய்யுங்கோ... உங்கடை புத்தகம் வந்திட்டுதோ..? //

நீ யாரென்று தெரியும். நான் ஒன்றும் பலர் நினைப்பதுபோல் மறுபடியும் பதிவெழுத வரவில்லை. காவியங்கள் படைக்க ஆசைதான். சில வேளைகளில்தான் ஈடுபட்டு வருகிறேன். மின்னி மறையும் பதிவுகளை விட சில முக்கிய விடயங்கள் நட்ந்துகொண்டிருக்கின்றன. அவை முடியட்டும். ஆனால் எனக்கெதிராக சில விடயங்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கு நான் கேள்விகள் கேட்டுப்பார்த்தேன் அவ்வளவே! மற்றபடி ஒன்றுமில்லை!

அதுசரி உன்விசயம் வருகிறேன். பகடிக்கு பகடைக்காயாக்க நினைக்காதே என்னை. நீயும் கொஞ்சம் அடக்கிவாசி தம்பி! :-)

அன்புடன்
இணைய நாடோடி ( எனக்கும் டி விகுதி!)
ஓசை செல்லா

Anonymous said...

//தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த பிறகுதான் நீங்கள் சர்வாதிப்போக்குகளும் பதிவர்களை இழிபடுத்துவதும் பதிவர்களை எந்த வித முன்னறிவிப்பு இன்றி நீக்க ஆரம்பித்ததும் நடந்தது. //

இல்லை.. காசி செய்ததுதான் இதுவும். குசும்பன், PKS மற்றும் பலரை ஒரே நேரத்தில் தூக்கிவிட்டு "தொழில் நுட்பம் காரணமாக" அப்படின்னு சொன்னார். யாரையாவது நீக்கிவிட அந்தக் காரணத்தையே இன்னும் சொல்கிறது தமிழ்மணம் குழு. யாரை வேண்டுமானாலும் நீக்கி விடலாம் பின்னர் தொழில் நுட்பக் காரணம் என்று நொண்டிச் சாக்கும் சொல்லுவது எவ்வளவு காலத்துக்கு என்று தெரியவில்லை..

Anonymous said...

நீயும் கொஞ்சம் அடக்கிவாசி தம்பி! :-)//

வாசிக்கும் போது அடக்கித்தான் வாசிக்கிறேன் :)
எழுதும் போதுதான் கொஞ்சம் எகிறிடுது..
இருந்தாலும்.. பின்னூட்டங்களை அடக்கித்தானே வைச்சிருக்கிறேன்.

said...

anony athu veru kaalakattam. Kasi's walking on the razor edge and integrity is well known to me than anybody. Read the below comment in the same page. This is my view also. Moreover I know the technical limitations he faced too. Just for the blame game I wont join with ENEMY's ENEMEY IS OUR FRIEND gangs!

October 20, 2005 9:41 AM க்கு நம்ம Blogger முகமூடி சொல்றது என்னன்னா ::

ஸ்ரீரங்கன், நன்றி...

குமரேஸ், காசியின் உழைப்பின் மீதும், தமிழ்மணத்தின் செயல்பாடுகளின் மீதும் எனக்கு மிகவும் மதிப்புண்டு. நன்றி சொல்ல வேண்டிய தருணங்களிலே சொல்லியும் வந்திருக்கிறேன்.

இப்போது காசி ஒரு முடிவெடுத்திருக்கிறார். அதை பலர் வரவேற்கிறார்கள், பலர் அதில் தமக்கு உடன்பாடில்லை என்கிறார்கள். என் கருத்து என்ன என்பதை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறேன். இதில் தீட்டிய மரத்தில் கூர் பார்க்கப்படுவது என்று நீங்கள் கருதுவதை தெரிவிக்க இயலுமா? காசியை சக வலைப்பதிவர் என்ற முறையிலேயே பார்க்க ஆசைப்படுகிறேன், அவரை(யும்) Idol ஆக பார்ப்பவர்கள் குறித்து எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

said...

/// தமிழச்சி அவர்களுக்கு நீங்கள் தமிழ்மணத்தில் இல்லை. ஆகையால் உங்களுக்கு இது தேவையில்லாத பிரச்சனை! நாங்கள் தமிழரசி என்னும் செல்லாவிடம் பேசிக் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது போல் எந்த தமிழ்மண நிர்வாகியும் சொல்லவில்லை. ///

அனானி அவர்களுக்கு உங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும் சொல்கின்றேன்.

காமக்கதை ஜட்டி கதை பிரச்சனை இரண்டு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. நான் தலையிட்டது இல்லை. இந்த பதிவில் மூ.சு தமிழ்மண நிர்வாகி என்னைப்பற்றி குறிப்பிட்டு உள்ளதால் பதில் சொல்ல வேண்டிய சூழல்!

said...

ஓசைசெல்லா,

1 = 0.999' இனை உறுதிப்படுத்தும் முகமாக இங்கே பதிவிட்டிருக்கிறேன். பாருங்கள்.