“அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுகளில்” எப்படி தமிழ்மணக்குழுவில் இருக்கும் இரண்டு நிர்வாகிகளுக்குள்ளும் இவ்வளவு முரண்பாடான கருத்துவரமுடியும். பொதுவில் வைத்தாகிவிட்டது. சொல்லிவிட்டுப்போங்கள். நன்றி. - அன்புடன் ஓசை செல்லா
==== My prev post for reference purpose only ===
தமிழ்மணக் குழப்பங்கள் உதாரணம் = பெயரிலி Vs சுந்தரமூர்த்தி
இந்த மாதிரி சில விசயங்களுக்குத்தானே காத்துக்கொண்டிருந்தான் செல்லா. உண்மைகள் சந்தியேறட்டும் அனைவர் சாட்சியாக என்றுதான் இந்த வலைப்பூவே. பாருங்கள் முதல் கோணலை...பெயரிலியின் வாக்குமூலம்:
அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள்.
சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:
தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.
இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?
9 comments:
இது ஒரு மின்னரட்டையிலோ ஒரு தனி மடல் மூலமோ முடிச்சிருக்கலாமே? இதைப் பொதுவில் வைத்து வெற்றி யாருக்கு? யார் மீது குத்தம்?னு தெரிஞ்சிக்கிறதுதான் தமிழன் குணமா? விட்டுக்கொடுத்து போவறது எல்லாம் பழங்கதையா? வயசுல மூத்தவங்க நீங்களே இப்படி பண்ணினா சின்னஞ்சிறுசுங்க என்ன நினைப்பாங்க?
Dear Thambi, why this comment in the public forum as a 'proper comment' and not with a dont publish alert? Same intentions!?
Let me get my reply from the concerned ppl and I am simply asking them to clear their own confusion in an open forum so that no heart feelings or suspicions in the minds of us and also in the minds of readers. Thanks.
Comments which are more "off the topic" and less "on the topic" can be avoided in this post. thanks in advance.
//Same intentions!?//
nothing is lingering other than to get rid of this quarrels. Now is the issues is narrowed down and keeping my finger crossed. Hoping this come to an end.. END
One more self confession of PEYARILI is caught by Mr Mayavarathan.
/// ILA said...
இது ஒரு மின்னரட்டையிலோ ஒரு தனி மடல் மூலமோ முடிச்சிருக்கலாமே? இதைப் பொதுவில் வைத்து வெற்றி யாருக்கு? யார் மீது குத்தம்?னு தெரிஞ்சிக்கிறதுதான் தமிழன் குணமா? விட்டுக்கொடுத்து போவறது எல்லாம் பழங்கதையா? வயசுல மூத்தவங்க நீங்களே இப்படி பண்ணினா சின்னஞ்சிறுசுங்க என்ன நினைப்பாங்க? ////
மதிப்பிற்குரிய இளா அவர்களுக்கு ப்ளீஸ் இது போன்ற சிந்தனைகள் நல்லதல்ல.
நம் சமூகம் ஆரோக்கிமல்லாமல் கெட்டுப்போவதற்கும் சர்வாதிகாரம் மண்டிக் கிப்பதற்கும் இந்த சிந்தனைதான் காரணம்.
எல்லோரும் ஆராயப்பட வேண்டியவர்களே! நான் உட்பட....
இதில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஏன் புனித பிம்பம் கட்ட வேண்டும்?
பல்வேறு நல்ல விசயங்கள் இதன்மூலம் ஏற்பட்டதாக சிலர் கருதினால் வாழ்த்துக்கள். நான் ஒன்றும் சுந்தரமூர்த்தி சொன்னதுபோல் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கருணையால் எழுதும் புத்தியும் கொண்டவனல்ல. இனியும் தொடர்ந்து எழுத வேறு இடங்கள் உள்ளது. ஆனால் கேள்வி கேட்டால் என்ன ஆகும் என்று மட்டும் பதிவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். நிர்வாகி1, நிர்வாகி2, நிர்வாகி3 நிர்வாகிn வரை ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் ரொம்ப நன்றி. பலருக்கும் பல இன்சைட் கள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கடைசியாக ஒரு சில வார்த்தை புதுப்பதிவர்களுக்கு. எழுத்தாளர்கள் என்ற சுயமரியாதையை எக்காரணம் கொட்டும் இழக்கவேண்டாம். இந்த உரையாடல்களிலே பார்த்தீர்களானால் தமிழ்மண நிர்வாகிகளில் பெயரிலியும் செல்வராஜும் மற்ற பதிவர்களின் எழுத்துக்களை எவ்வளவு கிண்டலிட்டு தரக்கட்டுப்பாடு நிர்வாகிகள் மாதிரு கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதை கவனிக்க. ஆயிரக்கணக்கில் பதிவர்கள் வரும்பொழுது இத்திரட்டிகள் பயனற்றுப்போகும். மற்றபடி அனைத்தையும் விவாதத்திற்கு உட்படுத்துங்கள். மனதுக்குள் அசைபோடுவதை விட வெளியே கேட்டுவிடுங்கள். தீர்வாக சில விளக்கங்களாவது வரும். இணையம் மிகப்பெரியது. ஓரிடமே கதியென்று கிடக்காதீர்கள். மிக மிக முக்கியமாக மற்ற திரட்டிகளையும் தினமொருமுறை பார்ப்பது உங்கள் பேனாக்களுக்கு மிகவும் நல்லது (இந்த கருத்தைச்சொன்ன என் பதிவுக்குதான் இவ்வளவு ரெஸ்பான்ஸ்!!!)என்ற வரிகளோடு விடைபெறுகிறேன்.
அன்புடன்...
ஓசை செல்லா
வழக்கம்போல ஒரு சிறு பின்குறிப்பு: “நாங்கள் பதில் சொல்லத் தேவையிருக்கவில்லை என்று தெனாவெட்டாக ஆரம்பித்து கடைசியில் தங்களுடைய இரகசியக ்குசுகுசுக்களையெல்லாம் வெளியிடும் வரை சென்ற அனைத்து தமிழ்மண நிர்வாகிகளுக்கும் எனது ஸ்பெசல் நன்றிகள்!!;-)
இந்தப்பதிவின் கதை முற்றிற்று! யாரும் பின்னூட்டமிடவேண்டாம். பின்னூட்டங்கள் அடைக்கப்பட்டுவிட்டன. பிரிவோம். சந்திப்போம்!
Post a Comment