My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Monday, July 14, 2008

கமல் என்னும் கலைஞன் - ஒரு க்ளைமாக்ஸ் பதிவு!


இதுவரை போட்ட டைட்டில் போஸ்ட்களில் எனைப்பற்றிய மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த கமல் ரசிகர்களுக்கு முதலில் என் நன்றி. இது நான் ஆராதிக்கும் கமல் பற்றிய பதிவு! (சினிமாவுக்கு மட்டும் தான் உச்சஸ்தாயியில் வயலின்கள் அலற அலற க்ளைமாக்ஸ் சீன் வைக்க வேண்டுமா என்ன!)

'நான் இதுவரை அதிகம் முறை பார்த்த படம் விக்ரம் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகத் தானிருக்கும். உண்மையில் அது ஒரு மிக மிக இலகுவான ஒரு படத்திற்கு எடுத்துக்காட்டு! (வழக்கம் போல பட்ஜெட் பிரச்சினையால் ப்ளைவுட் ராக்கெட் சிறுது அசைந்தாடுவது ஒரு சில காட்சிகளில் தெரியும், ஊர்ந்து கவனித்தால்!). கமல் ஒரு சகாப்தம் என்றால் தமிழ் திரையுலகில் யாரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. மூன்று பா'க்களால் பட்டை தீட்டப்பட்டவர் அவர். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்ற இம் மும்மூர்த்திகளும் இவரை பல்வேறு பரிமாணங்களில் காட்டியிருப்பார்கள். முதலில் சப்பாணியைப் பார்ப்போம்.

அதுவரை செட்களில் அடங்கிக் கிடந்த கதைகளும் காமிராக்களும் நம் தமிழ்மணம் கமழும் கிராமத்துப் புழுதிக்காற்றை சுவாசிக்கக் கிளம்பிய காலம் அது. அதுவரை நகரத்து காதல் மன்னனாக இருந்த கமலை வாயில் வெற்றிலை குதப்பியபடி, அழுக்குவேட்டி சப்பாணியாக அழகு மயில் ஸ்ரீதேவியுடன் நடிக்கவைத்து தமிழ் சினிமாவில் புது அத்தியாயத்தை தொடங்கிவைத்தார் பாரதிராஜா. கூடச் சேர்ந்து ராக தேவனாக கிராமத்து மக்கள் கூட அசைபோடக்கூடிய மெட்டுகளை இசையால் ஸ்ரிஷ்டித்தான் கிராமப்புழுதிக்கிடையே ஆர்மோனியம் பயின்ற இளையராஜா. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ... இப்பாடல்தான் என்ன ஒரு மறுமலர்ச்சியை அப்பொழுது ஏற்படுத்தியிருக்கவேண்டும்? நிவாசின் காமிரா அந்தத் தமிழ் கிராமத்தை அப்படியே இரு கரம் கொண்டு அள்ளி இளையாரஜாவின் கிராமிய இசையால் சீவிச் சிங்காரித்து அழகு பார்த்த அந்த ஆரம்பக் காட்சியிலேயே ஒவ்வொரு தமிழனும் தன் மனத்தை பறிகொடுத்தான் என்றால் மிகையல்ல.

இல்லாத ஒரு பூவை கவிதையில் வடித்த கங்கை அமரனையும், ஆட்டுக்குட்டியை முட்டையிட வைத்து அறிமுகமாகிய மலேசியா வாசுதேவனையும் கூட தமிழ் திரைக்கு அளித்த இந்தப்படம் ஒரு மைல்கள் என்றால் மிகையல்ல. நான் சொல்ல வருவது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல தன் ஹீரோ அந்தஸ்தை, நகர அழகன் இமேஜை தூக்கிக் கடாசிவிட்டு ஒரு புதிய இயக்குனரின் கைகளுக்குள் தஞ்சமடைந்தானே கமல் எனும் கலைஞன்!

அந்த பசி அடங்காமல்தானே ஐம்பதுகளைத் தாண்டியபின்பும் பரிசோதனைகளைத் தொடரும் ஒரு மகா கலைஞனாக தன் துறையில் வெற்றி நடை போடுகிறான் இவன்!'

7 comments:

said...

மெண்டல் ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா உங்கள?

said...

நன்றி, நேர்மறையான பதிப்பிற்கு (நான் நடிகர் திரு. கமலஹாசன் பற்றிய நேர்மறையான... என்று சொல்ல வரவில்லை). இதுபோன்ற பதிவுகள் இவ்வலைப்பூவில் தொடரியக்கமாகட்டும்.

வாழ்த்துக்கள்.

அதென்ன 'சலனப்படக்கலை' வகைப்பாடு?

- வேல்முருகன் ரெங்கநாதன்

said...

//அணுவைப்போலவே மீச்சிறு அளவினள்! உடைக்க நினைத்தால் (உங்களால் முடிந்தால்) வெடித்தெழுவேன்,தொடரியக்கமாய், பேரழிவாய்!//

இப்படி சொல்லிபோட்டு திடீர்னு சரண்டர் ஆகிட்டீங்களே அம்மணி :-)

said...

//இப்படி சொல்லிபோட்டு திடீர்னு சரண்டர் ஆகிட்டீங்களே அம்மணி :-)//

நானெங்கே சரண்டர் ஆனேன்! முதலில் இப்பதிவின் பின்பாதி நான் எழுதியது அல்ல!

said...

//Posted by Unsettled Woman //

இப்படின்னு போட்டு இருந்ததா அதுனால நீங்க தான் எழுதுனதுன்னு நினைச்சுட்டேன்...யாரோ மண்டபத்துல எழுதி குடுத்ததா...
:-)

said...

//மோகன் கந்தசாமி said...
மெண்டல் ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா உங்கள?
//

வழிமொழிகிறேன் :-)

said...

////Posted by Unsettled Woman //

இப்படின்னு போட்டு இருந்ததா அதுனால நீங்க தான் எழுதுனதுன்னு நினைச்சுட்டேன்...யாரோ மண்டபத்துல எழுதி குடுத்ததா...
:-)//

நாட்டாமை... Written Byனா இருக்கு... Posted Byனு தானே இருக்கு ;)