My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Friday, July 4, 2008

தசாவதாரத்தில் ஆழமான கதை என்று ஒன்று இல்லை! - கமல்

அவரே சொல்லிட்டார்! நடிப்புதான் பல அவதாரங்களில் ஊத்திக்கிச்சுன்னா இப்ப கதையும் ஓட்டைதான்ன்னு அவரே ஒத்துக்கிட்டார். இதோ படிங்க ..

Kamal Haasan on a recent visit to Kerala to promote his Dasavatharam had some interesting and blunt questions to answer.


The actor was thrown a volley of questions and most prominent among them was: "Do you agree that Dasavatharam has no story?" Reacting to this, Kamal said that he did agree with that but also reiterated that he never promised that there would be a strong storline.

Disclosing how Dasavatharam came into making, Kamal Haasan said that it was his idea to don ten roles that set the whole project in motion. The story was weaved on these ten characters, he added.
On the Punjabi Singh character that gets cured of cancer miraculously by a gunshot, Kamal said this idea was inspired from a real-life incident involving the Late Tamil Nadu Chief Minister of Tamil Nadu M.G. Ramachandran. Explaining further, Kamal said that the TN CM acted in films and was able to talk even better after the gunshot wound.

Source: http://www.tamilstar.com

Sunday, June 29, 2008

எனக்குப்பிடித்த அவதாரம்!

எண்ணிக்கை தோற்கும் இவனிடம். இவனும் தற்கால தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத நடிகன். நடிப்பிலக்கணம் தெரிந்தவன். பாத்திரமாகவே பரிமளப்பவன். தமிழ் நாயகர்களுக்கு சிறிதும் சளைத்தவன் அல்ல. வில்லனாக, குணச்சித்திரனாக, நாயகனாக, இயக்குனராக இவனது அவதாரங்கள் தொடரும்...

இவளுக்குப் பிடித்த அவனது அவதாரப் பாடல்... உறுத்தாத மண்ணின் மனம் கலந்த காட்சி அமைப்பு மற்றும் நடிப்பு, 'ராஜா”ங்கமே நடத்தும் இசை என்று ஒரு அழகான தரமான படைப்பு.. நாசரின் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு நல்ல கலைஞனை ஆவணப்படுத்துவதும் நம்மால் முடிந்த ஒரு சிறுசேவை தானே!?

Thursday, June 26, 2008

சிங்கிளா வந்த சிங்கம் ரஜினி!


ரஜினி என்ற காந்தம் ஏன் சூப்பர் ஸ்டாரனது? அவருக்கு நடிக்கத்தெரியாதா? அவரது குணநலன் என்ன? அவர் எந்த வகையில் கமலுடன் வேறுபடுகிறார்? போன்ற பல கேள்விகள் என் மனதை உலுக்கியதால் இந்த பதிவு! ஆனால் இப்பொழுது மும்பையில் மழைக்காலமாகையால் என் உடனுறை தோழியின் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் நாளை பதிவு போடுகிறேன். ஆனால் இப்போ ஒரு கேள்வி உங்க எல்லாத்துக்கும்! இந்தியா மட்டுமல்ல ஜப்பான் காரர்களை கூட கவர்ந்திழுக்கும் அக் காந்தம் ஏன் சிங்கிளாகவே வருது ரொம்ப நாட்களாக? கமல் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறது! பதில்கள் பஞ்ச் டயாலாக் ஆகவும் இருக்கலாம்! தலைப்பைப் போல! சும்மா அதிருதில்ல!
(அனானிமஸ் பின்னூட்டமாகவும் இடலாம். செட்டிங்க்ஸை மாற்றிவிட்டிருக்கிறேன் தற்காலிகமாக)

Wednesday, June 25, 2008

அறிவுடை நம்பி கமல் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி?



உலக நாயகன் கமல் இந்தப்படத்தில் இஞ்சி யை தமிழ்ப்படவுலகில் முதலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். அதற்க்காக நான் பாராட்டுகிறேன். சென்ற பதிவின் பின்னூட்டத்தில் இம்சை அக்கா சொன்னது போல் எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை! நாம் அதிகம் முன்னோக்கி நடக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவள். அவ்வளவுதான். சரி. இந்த இஞ்சியை கண்டுபிடிக்க உலகின் மிகப்பெரிய காட்டின் தலைமை நிர்வாகி கூட சில பல கோடிகளை கொடுத்துள்ளார். சரி கண்மனிகளே. உங்களுக்கு ஒரு சில கேள்விகள்...

௧. கமலின் எந்த அவதாரம் இஞ்சியை படத்தில் உபயோகப்படுத்துகிறது?
௨. இஞ்சியை கண்டுபிடித்தவர் யார்?
௩. அவரது பிற முக்கியமான கண்டுபிடிப்புகள் யாவை?

Monday, June 23, 2008

தசாவதாரம் ஹாலிவுட் தரமா?


ஒரு சில நாட்களுக்கு முன் கமல் அவர்களின் பேட்டியை படிக்க நேர்ந்தது. ஹாலிவுட் கலைஞர்களுக்கு நாம் விருது கொடுக்கும் நிலை வரும் என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு அறிவு ஜீவி என்பது ஒருபுறம் ஆனாலும் அவர் பேசுவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. பாதி இடங்களில் படம் அமெச்சூர் தரத்திலான 3 டி அனிமேசன் மூலம் பார்க்கவே பரிதாபமாக இருக்கையில், மேக்கப் போடுவதற்கு கூட வெள்ளைத் தோலுடையவர்கள் தேவைப்படுகையில் நாம் ஹாலிவுட் தரம் என்றெல்லாம் பேசுவது ராமணாரயனன் படத்தில்வரும் நாயையும் 101 டால்மேசியன் படத்திற்கும் முடிச்சுப்போடுவது போலாகும். நம்மால் இன்னும் ஒரு ஹெர்பி கோஸ்டு பனானாஸ் கூட அவர்கள் தரத்தில் செய்யமுடியாது என்பது நிசமாக இருக்கையில் கமலின் ஆசை நப்பாசை அல்லது வயிற்றெரிச்சல் என்றே படுகிறது. முதலில் ஒரு சில வேடத்தில் மட்டும் நடித்து அவர் திறமையை உலகத்தரம் என்று நிரூபிக்கட்டும், ஒரு எட்டி மர்பி போல! அதைவிட்டுவிட்டு ஏதே மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்வதைப்போல சிறிது செய்துவிட்டு (பாதி பாத்திரங்கள் மிகவும் செயற்கையாக இருக்கின்றது) உலக நாயகன், உலகத்தரம் என்றெல்லாம் வாயடிக்காமல் அடக்கமாக இருப்பது அவருக்கு ஓரளவு பெருமை சேர்க்கும். இந்த விசயத்தில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ தேவலை!