My Last 2 Posts

நாளுபேர் இப்படி கேள்வி கேட்டாலே போதும்!

Wednesday, July 16, 2008

நண்பர் பெயரிலிக்கு ஒரு சின்ன ரிக்வெஸ்ட்

நண்பரே சுற்றிவளைத்து பேசவேண்டாம். நான் நீக்கப்பட்டேன் என்று நீங்கள் சொல்வது உண்மையா? அல்லாது செல்லாவே விரும்பிக்கேட்டு விலகினார் என்று சுந்தரமூர்த்தி சொல்வது உண்மையா?

“அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுகளில்” எப்படி தமிழ்மணக்குழுவில் இருக்கும் இரண்டு நிர்வாகிகளுக்குள்ளும் இவ்வளவு முரண்பாடான கருத்துவரமுடியும். பொதுவில் வைத்தாகிவிட்டது. சொல்லிவிட்டுப்போங்கள். நன்றி. - அன்புடன் ஓசை செல்லா

==== My prev post for reference purpose only ===

தமிழ்மணக் குழப்பங்கள் உதாரணம் = பெயரிலி Vs சுந்தரமூர்த்தி

இந்த மாதிரி சில விசயங்களுக்குத்தானே காத்துக்கொண்டிருந்தான் செல்லா. உண்மைகள் சந்தியேறட்டும் அனைவர் சாட்சியாக என்றுதான் இந்த வலைப்பூவே. பாருங்கள் முதல் கோணலை...

பெயரிலியின் வாக்குமூலம்:

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள்.

சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:
தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.

இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?

தமிழ்மணக் குழப்பங்கள் உதாரணம் = பெயரிலி Vs சுந்தரமூர்த்தி

இந்த மாதிரி சில விசயங்களுக்குத்தானே காத்துக்கொண்டிருந்தான் செல்லா. உண்மைகள் சந்தியேறட்டும் அனைவர் சாட்சியாக என்றுதான் இந்த வலைப்பூவே. பாருங்கள் முதல் கோணலை...

பெயரிலியின் வாக்குமூலம்:

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள்.

சுந்தரமூர்த்தியின் வாக்குமூலம்:
தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே.

இப்பொழுதாவது யாராவது ஒருவர் சொன்னது பொய் ஆகுமா ஆகாதா ? பதில்தான் என்ன?


Tuesday, July 15, 2008

பொதுவில் வைக்கிறேன்: காசி+சுந்தரமூர்த்தி+ பெயரிலி+ தமிழ்மணம்+ சுந்தர்

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிற ரீதியில் பல விசயங்கள் வெளியில் வரத்துவங்குகின்றன. நான் இவற்றைப்பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். நேரம் வரும்பொழுது. இப்பொழுது எனது சென்ற படைப்பு ஏற்படுத்திய அதிர்வலைகளை, எதிரலைகளை உங்கள் முன் பொதுவில் வைக்கிறேன்!

முதலில் காசி அண்ணன் அவர்கள் எனக்களித்த கண்டனம்

Kasi Arumugam - காசி said...

என் பெயரும் இழுக்கப்பட்டிருப்பதாலும் இதை எழுதுபவர் ஓசை செல்லா என்று வெளிக்காட்டப்பட்டுப்பதாலும் சில வார்த்தைகள்:

செல்லா சொல்லியிருப்பதில் பல உண்மைக்குப் புறம்பானவை. பெயரிலி சொல்லியிருப்பவை நான் அறிந்தவரையில் பெரும்பாலும் உண்மை. செல்லா தன் தனிப்பட்ட சன்டைக்கு தீர்வு காண வேறுவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். தேவையில்லாமல் வலைப்பதிவர்களைக் குழ்ப்புவதைக் கண்டிக்கிறேன்.

==============================

அடுத்து நண்பர் சுந்தரமூர்த்தி எழுதியது...

Blogger மு. சுந்தரமூர்த்தி said...

செல்லா, லக்கிலுக், தமிழச்சி மற்றும் அனாமதேயங்களுக்கு:

தமிழ்மணத்தின் மீது தேவையின் பேரிலோ, தேவையில்லாமலோ யாருக்காவது கோபம் ஏற்படும்போதெல்லாம் பெயரிலி பலி கடாவாக ஆக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. மீண்டும், மீண்டும் கத்தி அவர் கத்தில் விழுந்து அவருடைய தலை உருட்டப்படுவது தமிழ்மணத்தோடு தொடர்புடைய எனக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் தனிப்பட்ட முறையில் இந்த விளக்கத்தை அளிக்கத் தோன்றியது. இதுவாவது காரண, காரியமின்றி அவருடைய தலையைக் கொய்ய அலைபவர்களைச் சிறிது சிந்திக்க வைக்குமா என்று பார்ப்போம்.

முதலில் தமிழ்மணம் குழுவிற்கு இருக்கும் அரசியல், வணிக நோக்கங்கள் பற்றியும், அக்குழுவை ஆட்டிப்படைப்பது பெயரிலி என்ற ஒற்றை ஆள் அல்லது அவரைப் போன்ற ஓரிருவர் என்பது போன்றதான புனைவுகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பிரச்சினை தீவிரம் அடையும் சமயங்களில் வேதனையையும், விரக்தியையும் அளிக்கிறது.

தமிழ்மணத்தில் பதிவுகள், இடுகைகள் நீக்கங்கள் தொடர்பான முடிவுகள் எதுவும் எந்த ஒரு தனி ஆளாலும் தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்று நான் சொன்னால் அதை நம்புவதும், நம்பாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் அது உண்மையல்ல என்பதே யதார்த்தம்.

தமிழ்மணத்தை நாங்கள் வாங்கி நடத்த ஆரம்பித்த நாளிலிருந்து பதிவுகளை, இடுகைகளை நீக்குவதற்கான முடிவுகளை செய்தது மட்டுமே தமிழ்மணம் குழு என்றாலும், அவற்றைச் செய்வதற்கான தூண்டுகோல்கள் பதிவர்களும், வாசகர்களுமேயாவர். இதற்கு விதிவிலக்காக இருந்தது தமிழ்மணத்தின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய ஒரு பதிவர் அதற்கான ஆதாரத்தைக் கேட்டு தர மறுத்தபோது மட்டுமே. மற்றபடி எல்லா நீக்கங்களும் சில பதிவர்கள் தங்களே தங்கள் பதிவை நீக்கக் கோரியதாலோ (செல்லா, இதில் நீங்களும் அடக்கம்) அல்லது வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையிலோ மட்டுமே. பயனர்களிடமிருந்து வந்த புகார்களை விவாதத்திற்குட்படுத்தி முடிவு செய்வதற்கான குழுவில் நானும் இருப்பதால் இதை என்னால் சத்தியம் செய்து கூற முடியும் (அதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் இனி என் தலையும் சேர்த்து உருட்டலாம்). நிலைமை இப்படி கூட்டு விவாதம், கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்றவாறு இருக்கையில், தமிழ்மணத்தை ஆட்டுவிப்பது பெயரிலி என்ற தனி ஆள் என்ற பரவலான கருத்தும், பெயரிலியை ஆட்டுவிப்பது ஒரு "இயக்கம்" (அது என்ன எழவாக இருந்தாலும்) என்ற தமிழச்சியின் கண்டுபிடிப்பும் கேலிக்கூத்து. தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

தமிழ்மணத்தின் செயல்பாடுகள் பயனர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள் இவற்றை ஒட்டியே அமைந்தவை. எந்த ஒரு இயக்கத்திற்கும், அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அப்படி வெளிச் சக்திகள் எங்களை ஆட்டிப்படைக்கும் என்றால் அதில் நானோ, பெயரிலியோ, மற்ற நண்பர்களோ இருந்திருக்க மாட்டார்கள். இந்த அமைப்பு எப்போதோ காணாமல் போயிருக்கும். எல்லோரையும் போலவே, தமிழ்மணத்தோடு தொடர்புடைய நண்பர்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரே நிலைப்பாடு தான், அது தான் தமிழ்மணத்தை இயக்குகிறது என்று சிலர் நினைப்பது 'மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்' போன்ற கதை தான்.

பலருக்கு உள்ளது போலவே தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இருக்கும் முழுநேரத் தொழில், குடும்பம், வாழ்விட சூழல்கள் சார்ந்த அன்றாட பிரச்சினைகளைத் தாண்டி, செலவிட கொஞ்ச நேரமும், தமிழ் மொழி, சமூகத்தின் மீதான ஆர்வக்கோளாறும் மட்டுமே தமிழ்மணத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்மணத்தை வைத்து பெரிய அரசியல் லட்சியத்தை அடையவோ, மில்லியனர்களாக ஆகும் எண்ணமோ, கலாச்சாரப் போலிஸ் ஆகும் ஆசையோ, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் குரூர மனமோ அல்லது வேறு சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கமோ இல்லை. இது எனக்கும் பொருந்தும். பெயரிலிக்கும் பொருந்தும். பிற நண்பர்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, வலைப்பதிவு மகானுபவர்களே, பாவம் பெயரிலியை இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்.

தனிப்பட்ட அளவில், பெயரிலிக்கு எனது வேண்டுகோள், இதுபோன்ற தெருச்சண்டைகளில் இறங்காமல், உங்கள் படைப்பூக்கத்தை ஆக்கப்பூர்வமான திசையை நோக்கிச் செலுத்துங்கள். இந்தச் சகதியில் இறங்கி மல்லு கட்டுவதை விட தமிழிலக்கியத்திற்கு உங்களால் சிறப்பாக பங்களிக்க முடியும். இதைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கூறி வருகிறேன். உங்கள் ஆர்வமின்மையும், அலட்சியப்போக்கும் நான் அறிந்தது தான். குறைந்தபட்சம் இந்த நேரத்தை நித்திலனுடன் செலவிட்டால் அவனுடைய எதிர்காலமாவது சிறக்கும்.

==================================

Blogger -/பெயரிலி. said...

/இன்று பெயரிலியைத் தாக்கினால் தமிழ்மணம் தூக்கிவிடும் என்பது போன்ற சூழல்/

ஒசை செல்லா

உங்களின் விதண்டாவாதமான பேச்சுகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்துவந்தேன். ஆனால், தொடர்ந்தும் நீங்கள் விடயங்களைத் திரிக்கும்போது, பதிவர்களிடம் என்னைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்துகின்றீர்கள்.

தமிழ்மணத்தின் செயற்பாடுகள் பற்றி நான் / தமிழ்மணம் நிர்வாகிகள் விவரிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், தேர்தெடுத்துத் தாக்கும் உங்களைப் போன்ற சிலரின் செயற்பாடுகள் உங்களைப் பண்புகளைத் தெளிவாகத் தெரியவைக்கின்றன. அப்படியான மற்றவர்களைப் பற்றி ஏதும் சொல்லவரவில்லை. ஆனால், நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் அறிந்தே பொய்யாகவும் ஆங்காங்கே பதித்து வருவது முறையல்ல.

1. -/பெயரிலி.யுடனான தனிப்பட்ட பிரச்சனைக்காகவே பதிவர்களை விலக்குவதாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்படியேதும் நடக்கவில்லை. தமிழச்சி பதிவு அப்படியாகத்தான் நீக்கப்பட்டது என்றால், நீங்கள் தமிழ்மணம் செயற்பாட்டுக்குழுவினுள்ளே பேசப்பட்ட அனைத்தினையும் உங்களைப்போன்ற omsbudman இனிடம் கொடுத்து வாசித்துப்பாருங்கள் என்று விடவேண்டியதுதான். ஒவ்வொருவரும் தன் இயல்பினை வைத்தே மற்றவர்களின் இயல்புகளையும் எடைபோடுதலைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

2. தமிழ்மணத்திலே என் பங்கு ஓர் எள்ளுப்பூ அளவிலே மட்டுமே. சேர்த்தல்/விலத்துதல் இவற்றிலே தமிழ்மணம் குழுநிர்வாகத்தின் இவ்வாண்டு துணைப்பேராசிரியராக ஒரு வேலையிலே புதிய இடத்திலே புகுந்தபின்னால், தமிழ்மணத்திலே சேர்கின்றவர்களின் பட்டியலைக்கூட நான் கண்டதில்லை. புதியவேலையின் கற்பிப்பு/ஆய்வு அழுத்தம் பகலிலேயென்றால், மாலையிலே வீட்டுக்குவந்து சமைத்து மகனின் தேவையைக் கவனித்துத் தூங்க வைத்துப் பின் அடுத்த நாள் வேலைக்கான ஆயத்தங்களிலே இறங்கவே நேரம் போய்விடுகிறது. மனைவி வேறிடத்திலே கல்வியின் காரணமாக வாழ்ந்து கொண்டிருப்பதாலும், போஸ்ரர் ஒட்டிப் பெற்றோர் சம்மதத்துடன் தாலி கட்டி/கட்டாமற் செய்யும் புரட்சித்திருமணம் என்று அறிக்கை விட முடியாதெனினும், அதைவிட மிகவும் அழுத்தமான நிலையிலே தனிப்பட்ட வாழ்க்கையை நாம் தீர்மானித்துக்கொண்டிருப்பதாலே, மகனை நான் மட்டுமே பார்த்துக்கொண்டாலே உண்டு. இந்நிலையிலே, மனைவி, அம்மா, ஹோட்டல் சமைத்துப்போட, வந்திருந்து பெண்ணியம், பின்நவீனத்துவம், பழப்புளி, கொடுக்காப்புளி தட்டச்சிடும் நிலையோ, தமிழ்மணத்திலே என் இஷ்டப்படி சேர்க்க-விலக்க, விளக்கம் கொடுக்க நிலையோ இவ்வாண்டிலே என்னிடமில்லை. இத்தனை என்னைத் திட்டும் நீங்களோ எப்பதிவரோ, தொழில்நுட்பரீதியிலே தமிழ்மணத்தினை மேம்படுத்தும் தமிழ்மணம் நண்பர்களை அடையாளம் கண்டு தனிப்படப் பாராட்டியிருந்தால் மேலாகவிருக்கும். உங்களுக்குத் தமிழ்மணத்தினைத் தாக்க ஒரு வசதியான அடையாளமாக நான் பயன்படுகின்றேன் என்றால், எழுதும் மொழி புரிந்துகொள்ள முடியாத ஈழத்துத்தட்டுக்கழுவி என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் எத்தனை வலைப்பூ, வெண்பூ, ஊதாப்பூ, வாடினபூக்களிலே தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினையேனும் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்திருக்கின்றீர்களா? மற்றைய திரட்டிகளுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றீர்களே? தமிழ்மணத்திலேயிருப்பதானால், தமிழ்மணத்துக்கும் கொடுங்கள் என்று தமிழ்மணம் எப்போதாவது அடவடித்தனமேனும் பண்ணியேனுமிருக்கின்றதா? குறைந்த பட்சம் சேர்ந்திருக்கும் ஒரு திரட்டி, தாம் எடுத்த விதத்திலெல்லாம் எண்ணியபடி விமர்சிக்கப் பொறுத்திருக்கும் திரட்டி என்ற அளவிலேகூட தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக் கொடுக்கமுடியாத பதிவர்களெல்லாம் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் கொண்ட வலைவீரர்களாக வலம் வருவதைப் பார்க்கும்போது சிரிக்கவும் முடியவில்லை; வருந்தவும் முடியவில்லை. தமிழ்மணத்துக்கு இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? தமிழ்மணத்திலிருக்கும் என்னைப் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையிலே விழுந்து பிராண்டாதவரையிலே சரிதான் என்றுதான் படுகின்றது

3. செல்லா, நீங்கள் எவ்வளவு பொய்யான முகம் கொண்டவர் என்று இவர்களுக்குத் தெரியவேண்டாமா? இவை தமிழ்மணம் திரட்டியிலேயிருப்பவன் என்றவளவிலே நான் பேசக்கூடாதது. இத்தனை நாளும் தமிழ்மணத்திலே இருக்கும் ஒவ்வோர் உறுப்பினரும் செய்வதுபோலவே, எத்தனை தாக்குதல் என் மீது நிகழ்ந்தாலும், தனிப்பட்ட அளவிலே மட்டுமே பதிலளித்து வந்திருக்கின்றேன். போலி சல்மா விவகாரம், விடாது கருப்பு விவகாரம் எல்லாவற்றிலுமே தமிழ்மணம் அப்படியான விவரங்களை விடாமலே பதிலளித்ததாலேதான், அழுத்தப்பட்டது. ஆனால், உங்கள் உருவாக்கங்கள் வெட்கத்துக்குரியன. அவற்றினை நீங்கள் தமிழ்மணம் என்று சுட்டும் அளவிலே அதை வைத்துத்தான் சொல்லவேண்டும்.

அ. தமிழ்மணத்திடம் நீங்கள் உங்களை விலக்கும்படி கேட்டுத்தான் அது விலக்கியதென்ற ஒரு பொய்யை, உங்கள் "இரைச்சல்" பதிவினைத் தமிழ்மணம் நீக்கியவுடன் விட்டீர்கள். (அதுகூட நான் விலக்கியதில்லை. ஆனாலும், தனிப்பட என்னைத்தான் எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்தினீர்கள். அது பற்றி எனக்கேதும் கிஞ்சித்தும் வருத்தமில்லை. ஏனென்றால், விலக்கவேண்டிய பதிவு என்றால், தமிழ்மணத்தின் முடிவே என் முடிவும். தமிழச்சியின் ஒரு பதிவு பற்றிய என் நிலைப்பாடு என்னவாகவிருந்தது என்பது பற்றித் தமிழ்மணத்தின் மற்றைய உறுப்பினர்கள் விளக்கம் தந்ததைக்கூட மண்டையிலே போட்டுக்கொள்ளும் நிதானம் உங்களிடமோ உங்கள் தோழர்களிடமோ இல்லை)

ஆ. தடாலென, உங்கள் முன்னைய திரட்டி ஒன்றுக்குப் பெண்வாசம் சேர்த்துவிட்டீர்கள்.

இ. பிறகு, பதிவிடாமலே காணமலே போனீர்கள்

ஈ. "தமிழ்சசி, சங்கருடன் மட்டுமல்ல பெயரிலியுடனும் தொடர்பு கொள்வேன்" என்று அறிக்கை விட்டது மிக அண்மையிலேதான்

உ. தமிழ்மணத்தின் ஓர் உறுப்பினருடன் தனிப்படப் பேசி, தமிழ்மணத்திலே நீங்கள் இணைவது பற்றிக் கதைத்தது (let me put it gracefully in that way) அதன் பிறகு.

ஊ. இப்போது திரும்ப -/பெயரிலி.யோடு தனிப்பட மரத்திலேறியிருக்கின்றீர்கள்.

ஆக, உங்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கும் பகிரங்கச்செயற்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. இப்போது தமிழ்மணத்திலே சேர்த்துக்கொண்டால், செல்லாவுக்கான வெற்றிப்பரணி உங்கள் தோழர்களாலே இசைக்கப்படும். தமிழ்மணத்துக்கும் அதன் "வெறுமனே தாக்/ங்குகுறியான" எனக்கும் பக்கவாட்டிலே ஓர் உதை விழும்.

4. இந்தக்குழந்தைப்பிள்ளைத்திரட்டி~காமக்கதைத்திரட்டி பற்றியும் விரிவாக, உங்களைப் போன்றவர்களின் பின்நவீனத்துவக்கூத்துகள் பற்றியும் விளக்கமாக எழுதலாம். சமைத்ததைச் சூடாக்கி, பிள்ளைக்குப் பாலையும் சீரியலையும் கொடுத்துவிட்டு, அவனின் காப்பகத்திலே விட்டுவிட்டு, கோடைவகுப்பெடுக்க ஓடவேண்டும். நேரம் முடியவில்லை.

Let me finish with one thing. I know what postmodernism and freedom of speech are even before some of you were born and some of you got your first fresh pubic hair under your bellies. Shut the fuck up rather than making rattling-noise..... pure noise that can not be filtered from any signal - of course, if any.

Now go on; amplify your decibels

=====================================
பதிவர்களில் சிலர் சொல்லும் கருத்துக்கள்...

Blogger பரிசல்காரன் said...

நீங்கள் பேசிய இந்த வாதத்தைதான் பதிவாக எழுத எண்ணியிருந்தேன்.. என் தரங்கெட்ட மூளை வேறெதையோ எழுதி, என்னை நானே நொந்து கொண்டேன்!

செல்லா... உங்கள் இந்த வாதம் முழுக்க நியாயமானது. நான் நட்சத்திரக் கதை என்று முதலிலேயே யூகித்துவைத்திருந்த கதைகளை ****கதைகள் என்று வெளியிட பாலாவை கூப்பிட்டு “எதுனா பிரச்னை பண்ணுவாங்களா?” என்று கேட்க அவர் சொன்னார்.. ”போடுங்க.. எதிர்த்தா எதிர்ப்போம்” என்றார். கேட்ட பிறகு எனக்கே என்னை நினைத்து கேவலமாக இருந்தது!


நீங்கள் சொல்வது போல போஸ்டருக்கு தட்டி தேடும் நமக்கு இதெல்லாம் ஜீரணிக்க இயலாத விஷயம்தான்!!

July 15, 2008 12:10 AM

==================
Anonymous said... //முதலில் வந்தது வலைப்பூக்கள். பின்பு வந்தது தட்டிகள். அதில் ஒரு தட்டியையே பார்ப்பதால் அந்தத்தட்டி கொஞ்சம் அதட்டி பார்க்கிறது. நாங்கள் தட்டியை நோகவில்லை. மற்ற தட்டிகளையும் பார்க்கவே சொன்னோம். மற்றபடி தட்டிக்காக போஸ்டர்கள் அடிக்கும் புத்தி உங்களுக்கு இருக்கலாம். எங்களுக்கு போஸ்டர்களுக்குத் தான் தட்டி தேடி அலைகிறோம்!

அன்புடன்..
ஓசை செல்லா//

சூப்பரபு. செல்லாவின் நச் வரிகளை ரொம்பத்தான் மிஸ் பண்ணியாகிவிட்டது. நல்லதோ கெட்டதோ மாற்றுப்பார்வையை வரவேற்கவேண்டும். மேலும் படைப்பாளிகளின் அருமையை, உள்ளக்கிடங்கை வெலியிட்ட விதம் அருமை. மேலும் இதில் தாங்கள் தமிழ்மணத்தை கண்டனம் செய்யவோ பகிஷ்கரிக்கவோ சொல்லவேயில்லை என்ற விடயத்தையும் நோக்குகிறேன். அருமையான சிந்தனைகள் மற்றும் உதாரணங்கள். மைக்ரோ சாஃப்ட் மற்றும் போஸ்டர்கள், தட்டிகள். அருமை. நிறைய எழுதுங்கள் தோழரே.

பெயர் வெளியிட சிறிது சிக்கல்
(மின்னஞ்சலில் மேல்விபரம்)

==========================

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான்/

பெயரிலி, இது அபாண்டமான அவதூறு. அப்படியொரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை. கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொன்ன சில பின்னூட்டங்களை வெளியிட்டே உள்ளேன்.

பெயரிலி சொல்லியிருப்பது அப்பட்டமான பொய் எனச் சொல்லவே இப்பின்னூட்டம்.

I request Peyarili to take back his allegations. அதுதான் குறைந்தபட்ச நேர்மை!

=================================

இந்த டிராமா முடியும்பொழுது பல விசயங்கள் தெளிவாகும் என்பது மட்டும் உண்மை!

அன்புடன்...
ஓசை செல்லா

Monday, July 14, 2008

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

இன்று காலை ஓசை செல்லா அண்ணாவிடமிருந்து வந்த சூடான கடிதம். உங்கள் சிந்தனைக்கு. -வா. தமிழரசி.

”தமிழ் வலைப்பூக்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்ற அவாவில் உருவாக்கப்பட்ட அட்டவணையானது திரட்டியாக மறுவடிவம் பெற்றது என்பது வரலாறு. ஆங்கிலம் போன்று உலகலாவிய மொழியில் ஏன் திரட்டிகள் பிரபலமாகவில்லை என்ற கேள்விக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். அது இயலாத காரியம். 4000 மெம்பர்கள், ஆயிரம் ஆக்டிவ் மெம்பர்கள் உள்ள தமிழ் பூவுலகுக்கே 10 நிமிடம் மட்டுமே பதிவு தெரிகிறது என்கிற பிரச்சினை நிலவுகையில் 15 மில்லியன் அல்லது ஒன்றரைக்கோடி ஆங்கில வலைப்பூக்களைத் திரட்டினால் பதிவுகள் மைக்ரோ செகண்டுகள் கூட தாங்காது என்ற உண்மையை உணரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அது அங்கு சாத்தியமற்ற ஒன்று! அதனாலேயே பிளாக் லைன்ஸ் போன்ற உபயோகிப்பாளர் விருப்பம் சார்ந்த பதிவுகளைத் திரட்டும் சேவையைத் தந்தனர் எனலாம்.

தமிழில் இன்று பல திரட்டிகள் வந்தாலும் பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் திரட்டியாக இன்றும் வலம் வருவது தமிழ்மணம் மட்டுமே. காரணம் டெக்னாலஜி என்று நிச்சயம் சொல்லமுடியாது. அவ்வகையில் பார்த்தால் தேன்கூடு இன்னொரு தமிழ் ப்ளாக்லைனாக வரக்கூடிய அளவுக்கு விருப்பம்சார் திரட்டியாக இயங்கவல்ல முறையில் உருவாக்கப்பட்டது. திரு சாகரன் அவர்கள் அகால மறைவுக்குப் பின் அதன் வளர்ச்சி மட்டுப்பட்டு இருந்தாலும் ஒரு சரியான வல்லுனர்குழு பொறுப்பேற்று குழுவாக இயங்கினால் அது இந்தியாவின் நிகரற்ற தேசி திரட்டியாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்து தமிழ்வெளியைச் சொல்லவேண்டும். தமிழ்மணத்தின் ஆரம்ப ஆதரவோடு வந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும் அதை நிர்வகிப்பவர் ஒரு மிகச்சிறந்த தொழில்நுட்ப இணைய மென்பொருளாளர் என்ற முறையில் அதன் புதுமைகள் புகுத்தப்படும் தன்மை, வளர்ச்சி போன்றவைகள் எதிர்காலத்தில் நிச்சயம் தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இத்திரட்டியில் நம் பின்னூட்டங்களும், பதிவுகளும் நம் பூவில் எந்த மாற்றங்களையும் செய்யத் தேவையில்லாத அளவில் மிகவிரைவாக திரட்டப்படுவதும் இன்றும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் தமிழ்கணிமை, திரட்டி, தமிழ்பதிவுகள் போன்றவைகளும் வரத்துவங்கியுள்ள நிலையில் தமிழ்மணம் இன்னும் கோலோச்சுவதன் காரணம் என்ன என்று பார்த்தோமானால் அவர்கள் முன்னோடிகள் என்ற தகுதியை உடையவர்கள். மேலும் தேன்கூடு தவிர்த்து அனைத்து திரட்டிகளும் இவர்கள் செய்யும் அதேவேலையையே செய்கிறார்கள் என்ற காரணத்தால் வாசகர்கள் ஆதரவு தமிழ்மணத்தையே நம்பர் ஒன் திரட்டியாக முதலாமிடத்தில் வைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு அபாயமும் அபத்தமும் காத்திருக்கிறது எனலாம்.

சமீபகாலமாக அதன் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவது கவனிக்கத்தக்கது. தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி, அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்ற பதிவர்களின் மாற்று எழுத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மழலையர் திரட்டி போல “குழந்தைகளும் படிக்கிறார்கள்” என்றெல்லாம் சொத்தைவாதங்களை வைத்துக்கொண்டு பலரும் கூப்பாடு போடும் வேளையில் படைப்பாளியை சிறுதும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கும் மேட்டிமைத்தனம் சுகுணா திவாகர் போன்ற ஒரு சில படைப்பாளிகளை எவ்வளவு எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

பொதுவாகவே இணையம் என்ற ஊடகத்தில் காமக்கதைகள் படிக்க தமிழ்மணம் வருவார்கள் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம். அதே வார்த்தைகளை கூகிளில் அடித்தால் மிகமிக அழகான அல்லது அருவருப்பான காமக்கதைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை பதின்ம வயது இணையம் மேயும் பாலகர்கள் கூட அறிவார்கள். இங்கியங்கும் பதிவர்களுக்கே கூட பாலியல் அறிவு, பாலியல் அழகு, பாலியல்/ஒழுக்கவியல் அதிர்ச்சி போன்றவற்றை படிக்க நல்ல ஒரு வாய்ப்பு என்ற வகையிலேயே ஜ்யோவ்ராமின் பதிவுகள் மிக நல்ல வரவேற்பை பெற்றன எனலாம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அவரின் வரிகளுக்கு நட்சத்திரமிட்டு என்ன சாதித்தார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. **** கதைகள் என்றால் அனைவருக்கும் இனி புரியத்தானே போகிறது போங்கள். இம்மாதிரி விசயங்களை தான் எழுதும் எழுத்துக்கு சிந்தனைக்கு முழுப்பொறுப்பு எடுத்து எழுதும் முகமுள்ள சுகுணாக்களுக்கும், தமிழச்சிகளுக்கும், ஓசை செல்லாக்களுக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்களுக்கும் ஒரு சின்ன முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் ஏதோ அனானி ஆட்டக்காரர்கள் மாதிரி நடத்தும் இவர்கள் மனப்பான்மை நிச்சயம் மாறவேண்டும். ஒரு தமிழ்மணம் போல் இன்னொரு தேன்கூடு வரலாம், திரட்டலாம், ஆனால் ஒரு சுகுணாவையோ, செல்லாவையோ, வளர்மதியையோ பிரதியெடுப்பது சாத்தியமா என்பதை மரியாதையின்றி மட்டுறித்தி.. முன்னெச்சரிக்கை.. சீ எழுதவே அசிங்கமாக இருக்கிறது.. முன் தகவல் இன்றி இந்த படைப்பாளிகளை அலட்சியப்படுத்த நினைக்கும் தமிழ்மணப் படிப்பாளிகள் உணரவேண்டும்.

சுயசிந்தனை, தன்மானம், தமிழார்வம் உள்ள பதிவர்கள் இந்த மாதிரியான மேட்டிமைத்தன்மை வாய்ந்த ஒரே ஒரு திரட்டியை இனியும் வளர்ப்பது என்பது ஒரு மோனோபொலி பிற்போக்கு செயாலாகவே முடியும் என்பதை ”இந்தப்பதிவை தமிழ்மணம் நீக்குமா” என்றெல்லாம் வரும் சில இலகுப் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அச்சமே உறுதிசெய்கிறது எனலாம். எனவே பதிவர்களும் வாசகர்களும் தமிழ்மணத்தோடு மற்ற திரட்டிகளையும் ஆதரிக்கவேண்டிய சூழலை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு பதிவரும் தங்கள் வலைப்பூவில் தமிழ்மணத்தோடு, தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்க்கணிமை, தமிழ்ப்பதிவுகள், திரட்டி என்ற பல திரட்டிகளுக்கும் தொடுப்புக்கொடுப்பதோடின்றி மற்ற திரட்டிகளையும் தினமும் ஒரு முறையாவது பார்வையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த திரட்டிகளுக்கும் சில நூறு ஹிட்கள் வரும்பொழுது அவர்களும் புதிய யுத்திகளை புகுத்த முயல்வார்கள். இல்லையேல் மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜிக்கு/புதுக்கண்டுபிடிப்புகளுக்கு எப்படி சுமையாகிப் போனதோ அதேபோல தமிழ் இணைய வலைப்பூ ஊடகத்திற்கு தமிழ்மணம் சுமையாக வாய்ப்புள்ளது. இப்படிச் செய்தால் ஒரு மோனோபொலி அல்லது தனித்திரட்டி சர்வாதிகாரம் இனிமேலும் வளர வாய்ப்பில்லாமல் தமிழ் மாற்றுச் சிந்தனைகளும் எழுத்துக்களும் வாழ்வாங்கு வாழும் என்று கூறி எனது இந்த முழுநீள கட்டுரையை பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வெல்க தமிழர்களின் மாற்றுச்சிந்தனைத்தளம். வாழ்க இணையத்தமிழ் சூழல்.

அன்புடன்
ஓசை செல்லா

(நூறு பேருக்கு மேல் பார்த்தும் யாரும் மறுமொழியிடவில்லை! அவ்வளவு பயமா இணிஅய்த்தில் எழுத. சரி போங்கள். அனானியாகவாவது சொல்லிவிட்டுப்போக ஏதுவாக அனானி ஆப்சன் ஆன் செய்யப்பட்டுள்ளது)

இக்கட சூடு'ங்க! ஒரு அரசியல் புகைப்படக்கலை!


நான் சமீபத்தில் சின்னமனூரில் சுட்ட ஒரு படம். இதுநாள் வரை இந்த சுவர் பிரச்சினை தென்மாவட்ட தேவர் தலித் பிரச்சினை என்று நினைத்திருந்தேன், இந்த போஸ்டரை பார்க்கும் வரை! அரசியல் தெரிஞ்ச பதிவர்கள் புகைப்படத்திற்கு விளக்கம் குடுக்கலாமே. யாராவது இருக்கிறீர்களா?!

கமல் என்னும் கலைஞன் - ஒரு க்ளைமாக்ஸ் பதிவு!


இதுவரை போட்ட டைட்டில் போஸ்ட்களில் எனைப்பற்றிய மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த கமல் ரசிகர்களுக்கு முதலில் என் நன்றி. இது நான் ஆராதிக்கும் கமல் பற்றிய பதிவு! (சினிமாவுக்கு மட்டும் தான் உச்சஸ்தாயியில் வயலின்கள் அலற அலற க்ளைமாக்ஸ் சீன் வைக்க வேண்டுமா என்ன!)

'நான் இதுவரை அதிகம் முறை பார்த்த படம் விக்ரம் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகத் தானிருக்கும். உண்மையில் அது ஒரு மிக மிக இலகுவான ஒரு படத்திற்கு எடுத்துக்காட்டு! (வழக்கம் போல பட்ஜெட் பிரச்சினையால் ப்ளைவுட் ராக்கெட் சிறுது அசைந்தாடுவது ஒரு சில காட்சிகளில் தெரியும், ஊர்ந்து கவனித்தால்!). கமல் ஒரு சகாப்தம் என்றால் தமிழ் திரையுலகில் யாரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. மூன்று பா'க்களால் பட்டை தீட்டப்பட்டவர் அவர். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்ற இம் மும்மூர்த்திகளும் இவரை பல்வேறு பரிமாணங்களில் காட்டியிருப்பார்கள். முதலில் சப்பாணியைப் பார்ப்போம்.

அதுவரை செட்களில் அடங்கிக் கிடந்த கதைகளும் காமிராக்களும் நம் தமிழ்மணம் கமழும் கிராமத்துப் புழுதிக்காற்றை சுவாசிக்கக் கிளம்பிய காலம் அது. அதுவரை நகரத்து காதல் மன்னனாக இருந்த கமலை வாயில் வெற்றிலை குதப்பியபடி, அழுக்குவேட்டி சப்பாணியாக அழகு மயில் ஸ்ரீதேவியுடன் நடிக்கவைத்து தமிழ் சினிமாவில் புது அத்தியாயத்தை தொடங்கிவைத்தார் பாரதிராஜா. கூடச் சேர்ந்து ராக தேவனாக கிராமத்து மக்கள் கூட அசைபோடக்கூடிய மெட்டுகளை இசையால் ஸ்ரிஷ்டித்தான் கிராமப்புழுதிக்கிடையே ஆர்மோனியம் பயின்ற இளையராஜா. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ... இப்பாடல்தான் என்ன ஒரு மறுமலர்ச்சியை அப்பொழுது ஏற்படுத்தியிருக்கவேண்டும்? நிவாசின் காமிரா அந்தத் தமிழ் கிராமத்தை அப்படியே இரு கரம் கொண்டு அள்ளி இளையாரஜாவின் கிராமிய இசையால் சீவிச் சிங்காரித்து அழகு பார்த்த அந்த ஆரம்பக் காட்சியிலேயே ஒவ்வொரு தமிழனும் தன் மனத்தை பறிகொடுத்தான் என்றால் மிகையல்ல.

இல்லாத ஒரு பூவை கவிதையில் வடித்த கங்கை அமரனையும், ஆட்டுக்குட்டியை முட்டையிட வைத்து அறிமுகமாகிய மலேசியா வாசுதேவனையும் கூட தமிழ் திரைக்கு அளித்த இந்தப்படம் ஒரு மைல்கள் என்றால் மிகையல்ல. நான் சொல்ல வருவது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல தன் ஹீரோ அந்தஸ்தை, நகர அழகன் இமேஜை தூக்கிக் கடாசிவிட்டு ஒரு புதிய இயக்குனரின் கைகளுக்குள் தஞ்சமடைந்தானே கமல் எனும் கலைஞன்!

அந்த பசி அடங்காமல்தானே ஐம்பதுகளைத் தாண்டியபின்பும் பரிசோதனைகளைத் தொடரும் ஒரு மகா கலைஞனாக தன் துறையில் வெற்றி நடை போடுகிறான் இவன்!'

Sunday, July 13, 2008

நான் எடுத்த சில புகைப்படங்கள் - உங்கள் விமர்சனம் வேண்டி

சமீபத்தில் நண்பர்களுடன் தேக்கடிக்கு மதுரையில் இருந்து பயணித்தேன். தேனி மாவட்டம் சின்னமனூர் என்னும் ஒரு ஊரில் நண்பர்கள் அனைவரும் இளநீர் சாப்பிடுவதற்க்காக எங்கள் இன்னுந்தை நிறுத்தினோம். அருகிலிருந்த வீட்டில் ஒரு கிராமத்து தேவதை ஒன்று வெகு இயல்பாய் என்னைக் கவர்ந்தது. நான் எடுத்த அந்த நிழற்படங்களை பதிவர் வட்டத்தில் காட்சிக்கு வைக்கிறேன். கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படமாக. உங்கள் விமரிசனங்களை வரவேற்கிறேன்.